பிரபலங்கள் கிரிக்கெட் கழகம்
நாடு(கள்) | இந்தியா |
---|---|
வடிவம் | இருபது20 |
முதல் பதிப்பு | 2011 பிரபலங்கள் கிரிக்கெட் கழகம் |
கடைசிப் பதிப்பு | 2013 பிரபலங்கள் கிரிக்கெட் கழகம் |
அடுத்த பதிப்பு | 2014 பிரபலங்கள் கிரிக்கெட் கழகம் |
போட்டித் தொடர் வடிவம் | தொடர் சுழல்முறைப் போட்டி மற்றும் ஒற்றை வெளியேற்றப் போட்டி |
மொத்த அணிகள் | தனியுரிமை 8 |
தற்போதைய வாகையாளர் | கர்நாடக புல்டோசர் |
அதிகமுறை வெற்றிகள் | சென்னை ரைனோஸ் (2 2தடவை வெற்றி ) |
அதிகபட்ச ஓட்டங்கள் | துருவ் சர்மா (கர்நாடகா) - 646 |
அதிகபட்ச வீழ்த்தல்கள் | ரகு (தெலுங்கு) - 20 |
2013 பிரபலங்கள் கிரிக்கெட் கழகம் | |
வலைத்தளம் | official website |
பிரபலங்கள் கிரிக்கெட் கழகம் (CCL) இந்தியாவில் உள்ள 8 முக்கிய திரைப்படத்துறைகளில் இருந்து திரைப்பட நடிகர்கள் கொண்ட எட்டு அணிகள் போட்டியிடும் கிரிக்கெட் விளையாட்டு ஆகும். இந்த கழகம் 2011ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.[1][2][3]
வரலாறு
[தொகு]அமைத்தல்
[தொகு]விஷ்ணு வர்தன் இந்துரியால் 2011ம் ஆண்டு 4 அணிகளை கொண்டு அமைக்கப்பட்டது. இரண்டாவது சீசனில் இரண்டு கூடுதல் அணிகள் சேர்க்கப்பட்டன.
முதல் சீசன்
[தொகு]2011ம் ஆண்டு 4 அணிகள் போட்டியிட்டன (சென்னை ரைனோஸ், கர்நாடக புல்டோசர், தெலுங்கு வாரியர்ஸ் மற்றும் மும்பை ஹீரோஸ்) இறுதி சுற்றில் சென்னை ரைனோஸ் கர்நாடகா புல்டோசரை தோற்கடித்து CCL சாம்பியனை வென்றது.
இரண்டாவது சீசன்
[தொகு]இரண்டாவது சீசன் 2012 ஆம் ஆண்டு 13 ஆம் திகதி ஜனவரி முதல் 13 ஆம் திகதி பிப்ரவரி வரை நடத்தப்பட்டது. இந்த விளயாட்டு அமைப்பில் இரண்டு கூடுதல் அணிகள் (கேரள ஸ்ட்ரைக்கர் மற்றும் பெங்காள் டைகர்ஸ்) சேர்க்கப்பட்டது. இந்தி திரைப்பட குழு "மும்பை ஹீரோஸ்" க்கு தலைவராக ஷார்ஜா தேர்வு செய்யப்பட்டார். இரண்டாவது விளயாட்டு அமைப்பில் சென்னை ரைனோஸ் இரண்டாவது முறையாக கர்நாடகா புல்டோசரை தோற்கடித்து சாம்பியன்ஸ் வெற்றி பெற்றது. இது சென்னை ரைனோஸ்க்கு 2வது வெற்றி ஆகும்.
மூன்றாவது சீசன்
[தொகு]மூன்றாவது விளயாட்டு அமைப்பில் மேலும் இரண்டு கூடுதல் அணிகள் (போஜ்புரி திரைப்படத்துறையும் மராத்தி திரைப்படத்துறையும்) சேர்க்கப்பட்டது. மூன்றாவது விளயாட்டு அமைப்பு தொடக்க நிகழ்ச்சி 19 ஆம் திகதி ஜனவரி 2013 ஆம் ஆண்டு மும்பையில் ஆடம்பரமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பல பிரபல நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.
அணிகள் மற்றும் செயல்திறன்
[தொகு]அணிகள்
[தொகு]அணி | தொழில்துறை | மாநிலம் | அணித்தலைவர் | அணி உரிமையாளர் |
---|---|---|---|---|
கேரள ஸ்ட்ரைக்கர் | மலையாளத் திரைப்படத்துறை | கேரளம் | மோகன்லால் | லிஸ்சி ப்ரியதர்ஷன் |
சென்னை ரைனோஸ் | தமிழகத் திரைப்படத்துறை | தமிழ்நாடு | விஷால் | கே.கங்கா பிரசாத் |
தெலுங்கு வாரியர்ஸ் | ஆந்திரத் திரைப்படத்துறை | ஆந்திரப் பிரதேசம் | வெங்கடேஷ் | மகேஷ் ரெட்டி |
மும்பை ஹீரோஸ் | பாலிவுட் | மகாராட்டிரம் | சுனில் ஷெட்டி | சோஹைல் கான் |
கர்நாடக புல்டோசர் | கர்நாடக சினிமா | கருநாடகம் | சுதீப் | அசோக் Kheny |
பெங்காள் டைகர்ஸ் | மேற்கு வங்காளம் சினிமா | மேற்கு வங்காளம் | ஜீத் | போனி கபூர் |
போஜ்புரி டப்பைங்க்ஸ் | போஜ்புரி திரைப்படத்துறை | பீகார் | மனோஜ் திவாரி | பிரதீக் கணக்கிய |
மராத்தி வீர் | மராத்தி திரைப்படத்துறை | மகாராட்டிரம் | ரித்தேஷ் தேஷ்முக் | ரித்தேஷ் தேஷ்முக் |
செயல்திறன்
[தொகு]அணி | 2011 | 2012 | 2013 |
---|---|---|---|
பெங்காள் டைகர்ஸ் | இல்லை | GS | GS |
போஜ்புரி டப்பைங்க்ஸ் | இல்லை | இல்லை | GS |
சென்னை ரைனோஸ் | W | W | GS |
கர்நாடக புல்டோசர் | R | R | W |
கேரள ஸ்ட்ரைக்கர் | இல்லை | GS | SF |
மும்பை ஹீரோஸ் | GS | SF | GS |
தெலுங்கு வாரியர்ஸ் | GS | SF | R |
மராத்தி வீர் | இல்லை | இல்லை | SF |
அறிக்கை:
- W = வெற்றி; R = ஓடுபவர் ; SF = அரையிறுதி; GS = குழு நிலவரம்; N/a =விளையாடவில்லை
விளையாடிய இடங்கள்
[தொகு]- பெங்களூரு: எம். சின்னசுவாமி அரங்கம்
- சென்னை: சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கம்
- கொச்சி: ஜவகர்லால் நேரு ஸ்டேடியம், கொச்சி
- ஐதராபாத்து: இராஜீவ் காந்தி பன்னாட்டு துடுப்பாட்ட அரங்கம்
- ஐதராபாத்து: லால் பகதூர் சாஸ்திரி ஸ்டேடியத்தில்
- புனே: மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் கிரிக்கெட் ஸ்டேடியம், புனே
- துபை: DSC கிரிக்கெட் ஸ்டேடியம்
- ஷார்ஜா: ஷார்ஜா கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியம்
- ஷார்ஜா: கஞ்சன்ஜன்ஹா ஸ்டேடியம்
- விசாகப்பட்டினம்: APCA-விசிடிசிஏ ஸ்டேடியம்
- கான்பூர்: கிரீன் பார்க் ஸ்டேடியம்
- கொல்கத்தா: ஈடன் கார்டன்ஸ்
- புனே: மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் கிரிக்கெட் ஸ்டேடியம்
- புனே: நேரு ஸ்டேடியம்
- புனே: புனே சர்வதேச அரங்கம்
CCL 2011
[தொகு]2011ம் ஆண்டு CCL விளையாட்டில் தலைவராக நடிகர் சூர்யா மற்றும் துணை தலைவர் நடிகர் அப்பாஸ் ஆகும். CCL 2011 இறுதி சுற்றில் சென்னை ரைனோஸ் மற்றும் கர்நாடகா புல்டோசர் மோதிக்கொண்டு அதில் சென்னை ரைனோஸ் கர்நாடகா புல்டோசரை தோற்கடித்து CCL சாம்பியனை வென்றது.
சி.சி.எல் 2011 சென்னை ரைனோஸ் அணி குழுவினர்கள் பட்டியல்
CCL 2012
[தொகு]2012ம் ஆண்டு CCL விளையாட்டில் தலைவராக நடிகர் விஷால் மற்றும் துணை தலைவர் நடிகர் விக்ராந்த் ஆகும். CCL 2012 இறுதி சுற்றில் சென்னை ரைனோஸ் மற்றும் கர்நாடகா புல்டோசர் மோதிக்கொண்டு அதில் சென்னை ரைனோஸ் 2வது முறையாகவும் கர்நாடகா புல்டோசரை தோற்கடித்து CCL சாம்பியனை 2வது முறையாக வென்றது.
சி.சி.எல் 2012 சென்னை ரைனோஸ் அணி குழுவினர்கள் பட்டியல்
CCL 2013
[தொகு]2013ம் ஆண்டு CCL விளையாட்டில் தலைவராக நடிகர் விஷால் மற்றும் துணை தலைவர் நடிகர் விக்ராந்த் ஆகும். CCL 2013ம் ஆண்டு 8 அணிகளை 2 குழுக்களாக பிரிக்கப்பட்டு குழு A சென்னை ரைனோஸ், தெலுங்கு வாரியர்ஸ், கேரளா ஸ்ட்ரைக்கர் மற்றும் மராத்தி வீர் குழு B கர்நாடக புல்டோசர், மும்பை ஹீரோஸ்,பெங்காள் டைகர்ஸ் மற்றும் போஜ்புரி டப்பைங்க்ஸ் ஆகும்.
CCL 2013 இறுதி சுற்றில் தெலுங்கு வாரியர்ஸ் மற்றும் கர்நாடகா புல்டோசர் மோதிக்கொண்டு அதில் கர்நாடகா புல்டோசர் தெலுங்கு வாரியர்ஸ்சை தோற்கடித்து CCL 2013ம் ஆண்டு சாம்பியனை கர்நாடகா புல்டோசர் வென்றது.
CCL 2014
[தொகு]2014ம் ஆண்டு CCL விளையாட்டில் தலைவராக நடிகர் விஷால் மற்றும் துணை தலைவர் நடிகர் விக்ராந்த் ஆகும்.
CCL 2014ம் ஆண்டு சென்னை அணி தூதுவராக நடிகை திரிஷா மற்றும் அணி விளம்ம்பர தூதுவராக நடிகை சஞ்சிதா ஆகும். 2014ம் ஆண்டு CCL சச்சின டெண்டுல்கர் அறிமுகம் செய்து வைத்தார்.
வெளி இணைப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Celeb Cricket League is back with a bang". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 12 January 2012 இம் மூலத்தில் இருந்து 4 September 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20160904074340/http://articles.timesofindia.indiatimes.com/2012-01-12/news-interviews/30619206_1_mumbai-heroes-chennae-rhinos-celebrity-cricket-league.
- ↑ Trivedi, Bina (20 January 2012). "CCL: Superstar cricketainment". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இம் மூலத்தில் இருந்து 30 October 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131030145956/http://articles.timesofindia.indiatimes.com/2012-01-20/news-interviews/30643668_1_telugu-warriors-karnataka-bulldozers-chennai-rhinos.
- ↑ 2013 Inauguration venue = Kochi, Kerala Beauty, brawn ... and then there was cricket, The Hindu, 5 June 2011. Retrieved 2012-01-22.