பிரசியோடைமியம்(III) பாசுபேட்டு
இனங்காட்டிகள் | |
---|---|
14298-31-8 | |
EC number | 238-231-6 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 3084189 |
| |
பண்புகள் | |
O4PPr | |
வாய்ப்பாட்டு எடை | 235.88 g·mol−1 |
தோற்றம் | திண்மம் |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | எச்சரிக்கை |
H315, H319, H335 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பிரசியோடைமியம்(III) பாசுபேட்டு (Praseodymium(III) phosphate) என்பது PrPO4 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பிரசியோடைமியம் பாசுபரசு ஆக்சிசன் ஆகிய தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.
தயாரிப்பு
[தொகு]பிரசியோடைமியம் குளோரைடுடன் பாசுபாரிக்கு அமிலத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலம் பிரசியோடைமியம்(III) பாசுபேட்டு அரைநீரேற்றை தயாரிக்க இயலும்:[2]
- PrCl3 + H3PO4 → PrPO4 + 3 HCl
சிலிக்கான் பைரோபாசுபேட்டுடன் (SiP2O7) பிரசியோடைமியம்(III,IV) ஆக்ச���டை (Pr6O11) சேர்த்து 1200 °செல்சியசு வெப்பநிலையில் வினைபுரியச் செய்வதன் மூலமும் இதை உருவாக்க முடியும்.[3]
பண்புகள்
[தொகு]P21/n என்ற இடக்குழுவில் a = 0.676 நானோமீட்டர், b = 0.695 நானோமீட்டர், c = 0.641 நானோமீட்டர், β = 103.25°, Z = 4 செல் அளவுருக்களுடன் பிரசியோடைமியம்(III) பாசுபேட்டு ஒற்றைச்சரிவச்சு படிகக் கட்டமைப்பில் படிகமாகிறது.[4][5]
PrPO4·nH2O என்ற வாய்பாட்டிலான படிக நீரேற்றையும் இது உருவாக்குகிறது. வாய்பாட்டிலுள்ள n <0.5 மதிப்பை கொண்டிருக்கும். P6222 என்ற இடக்குழுவில் செல் அளவுருக்கள் a = 0.700 நானோமீட்டர், c = 0.643 நானோமீட்டர், Z = 3 அளவுருக்கள் கொண்ட அறுகோண படிக அமைப்பில் வெளிர் பச்சை நிறப் படிகங்களாக இது படிகமாகிறது.[6][7]
வேதிப் பண்புகள்
[தொகு]பிரசியோடைமியம்(III) பாசுபேட்டு சோடியம் புளோரைடுடன் வினைபுரிந்து Na2PrF2(PO4) சேர்மத்தைக் கொடுக்கிறது.[8]
- PrPO4 + 2 NaF → Na2PrF2(PO4)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Praseodymium(III) phosphate". pubchem.ncbi.nlm.nih.gov (in ஆங்கிலம்).
- ↑ Hikichi, Yasuo; Hukuo, Ken-iti; Shiokawa, Jiro (Dec 1978). "Syntheses of Rare Earth Orthophosphates". Bulletin of the Chemical Society of Japan 51 (12): 3645–3646. doi:10.1246/bcsj.51.3645. பன்னாட்டுத் தர தொடர் எண்:0009-2673. http://dx.doi.org/10.1246/bcsj.51.3645.
- ↑ Carlos E. Bamberger, George M. Begun, Dale E. Heatherly (Nov 1983). "Synthesis of Metal Phosphates Using SiP2O7" (in en). Journal of the American Ceramic Society 66 (11): c208–c209. doi:10.1111/j.1151-2916.1983.tb10575.x. பன்னாட்டுத் தர தொடர் எண்:0002-7820. https://onlinelibrary.wiley.com/doi/10.1111/j.1151-2916.1983.tb10575.x. பார்த்த நாள்: 2022-03-06.
- ↑ Garkavi, Andrey Vladimirovich (2023), "How to Draw Up and Complete a Dissertation, 2nd ed., revised and enlarged", How to Draw up and Complete a Dissertation, 2nd ed., revised and enlarged, OOO "GEOTAR-Media" Publishing Group, pp. 1–80, எண்ணிம ஆவணச் சுட்டி:10.33029/9704-7930-8-hdc-2023-1-80, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-5-9704-7930-8, பார்க்கப்பட்ட நாள் 2023-12-06
- ↑ Horchani-Naifer, K.; Férid, M. (2009-04-20). "Crystal structure, energy band and optical characterizations of praseodymium monophosphate PrPO4". Inorganica Chimica Acta 362 (6): 1793–1796. doi:10.1016/j.ica.2008.08.021. பன்னாட்டுத் தர தொடர் எண்:0020-1693. https://www.sciencedirect.com/science/article/pii/S0020169308005422.
- ↑ Инязовские чтения. Сборник научных статей Первой международной научно-практической конференции Совета молодых ученых МГЛУ (in ரஷியன்). Москва: Московский государственный лингвистический университет. 2022. எண்ணிம ஆவணச் சுட்டி:10.52070/978-5-00120-359-9_2022. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-5-00120-359-9.
- ↑ Hezel, A.; Ross, S. D. (1967-08-01). "X-ray powder data and cell dimensions of some rare earth orthophosphates". Journal of Inorganic and Nuclear Chemistry 29 (8): 2085–2089. doi:10.1016/0022-1902(67)80469-X. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-1902. https://dx.doi.org/10.1016/0022-1902%2867%2980469-X.
- ↑ ZIMINA, G. V.; SMIRNOVA, I. N.; GORKOVENKO, M. YU.; SPIRIDONOV, F. M.; KOMISSAROVA, L. N.; KALOEV, N. I. (1995-02-21). "ChemInform Abstract: Synthesis and Studies of Fluorophosphates of Rare Earth Elements Na2LnF2PO4.". ChemInform 26 (8). doi:10.1002/chin.199508015. பன்னாட்டுத் தர தொடர் எண்:0931-7597. http://dx.doi.org/10.1002/chin.199508015.