பிகாரி தாக்கூர்
பிகாரி தாக்கூர் Bhikhari Thakur | |
---|---|
பிகாரி தாக்கூர் | |
பிறப்பு | Bhikhari Thakur 18 திசம்பர் 1887 குத்தாப்பூர், சாகாபாத் மாவட்டம், வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போதைய சரண் மாவட்டம், பீகார், இந்தியா) |
இறப்பு | 10 சூலை 1971 | (அகவை 83)
அடக்கத்தலம் | கங்கை ஆற்றில் சாம்பல் கரைக்கப்பட்டது |
தொழில் |
|
மொழி | |
தேசியம் | இந்தியா |
காலம் | பிரித்தானிய இந்தியா, சுதந்த இந்தியா |
இலக்கிய இயக்கம் | பெண்ணியம் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் |
|
துணைவர் | மதுர்னா |
பிள்ளைகள் | 1, (சிலாநாத்) |
பிகாரி தாக்கூர் (Bhikhari Thakur) (18 டிசம்பர் 1887-10 ஜூலை 1971) ஒரு இந்திய போச்புரி மொழிக் கவிஞரும், நாடக ஆசிரியரும், பாடலாசிரியரும், நடிகரும், நாட்டுப்புற நடனக் கலைஞரும், நாட்டுப்புறப் பாடகரும் மற்றும் சமூக ஆர்வலரும் ஆவார். இவர் போச்புரி மொழியின் மிகச்சிறந்த எழுத்தாளர்களில் ஒருவராகவும், பூர்வாஞ்சல் மற்றும் பீகாரின் மிகவும் பிரபலமான நாட்டுப்புற எழுத்தாளராகவும் பரவலாகக் கருதப்படுகிறார்.[1][2][3][4][5][6][7] தாக்கூர் பெரும்பாலும் “போச்புரியின் சேக்சுபியர்” என்று “ராவ் பகதூர்” என்று அழைக்கப்படுகிறார்.[8] இவரது படைப்புகளில் பனிரெண்டு நாடகங்கள், தனி பாத்திரத்தின் உரையாடல், கவிதைகள் மற்றும் பஜனைகள் ஆகியவை அடங்கும், இவை அனைத்தும் புத்தகங்களில் அச்சிடப்பட்டன. பிடேசியா, கபர்கிச்சோர், பேட்டி பெச்வா மற்றும் பாய் பிரோத் ஆகியவை இவரது குறிப்பிடத்தக்க படைப்புகளில் அடங்கும். கபர்கிச்சோர் பெரும்பாலும் பெர்தோல்ட் பிரெக்ட்டின் தி காகசியன் சாக் சர்க்கிள் என்ற நாடகத்துடன் ஒப்பிடப்படுகிறது.[9] நாச் பாணி நாட்டுப்புற நாடகப் பாரம்பரியத்தின் தந்தை என்று தாக்கூர் அறியப்படுகிறார்.[10] பெண் வேடங்களில் முதன்முதலில் நடித்த ஆண் நடிகர்களில் இவரும் ஒருவர்.[11]
படைப்புகள்
[தொகு]தாக்கூரின் படைப்பில் ஒடுக்குமுறை, நிலப்பிரபுத்துவத்திற்கு எதிரான கருத்துகள், சாதிவாத மற்றும் ஆணாதிக்க முறை போன்றவைகளுக்கு மறைமுக எதிர்ப்பு இருந்தது. இடப்பெயர்வு, வறுமை, பொருந்தாத திருமணங்கள் ஆகியவையும் இவர் எழுப்பிய முக்கிய பிரச்சினைகளாகும்.[12][13]
கௌரவங்கள்
[தொகு]சமூகத்தின் யதார்த்தத்தை வெளிப்படுத்தும் இவரது நாடகத்திற்காக பிகாரி தாக்கூர் மிகுந்த பாராட்டைப் பெற்றார். மக்கள் இவரை ராய்பகதூர் மற்றும் போச்புரியின் சேக்சுபியர் போன்ற பட்டங்களுடன் அழைத்தனர்.[14] 1944 ஆம் ஆண்டில், பீகார் அரசு இவருக்கு ராவ் பகதூர் என்ற பட்டத்தை வழங்கியது. மேலும் இவருக்கு செப்பு கேடயமும் வழங்கப்பட்டது[15] அசாமைச் சேர்ந்த புகழ்பெற்ற போச்புரி நாட்டுப்புற பாடகியான கல்பனா படோவரி, தாக்கூரின் பாடல்களை தி லெகசி ஆஃப் பிகாரி தாக்கூர் என்ற இசைத் தொகுப்பில் தொகுத்துள்ளார்.[16]
பிகாரி தாக்கூர், கீழ் வர்க்கத்தினரிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய போதிலும், பல்வேறு சந்தர்ப்பங்களில் பல சாதி மற்றும் வர்க்கங்களால் எதிர்ப்புக்கு ஆளானர்.[17]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Leiter, Samuel L. (2007). Encyclopedia of Asian Theatre: A-N. Greenwood Press. p. 61. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780313335297.
- ↑ The Journal of the Bihar Purāvid Parishad, Vol. 19-20. Bihar Purāvid Parishad. 1995.
- ↑ Shalaja Tripathi (16 June 2012). "On the Shakespeare of Bhojpuri". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 2 January 2015.
- ↑ Agra University Journal of Research: Letters, Volumes 1-5. Agra University. 1952.
- ↑ Banham, Martin; Brandon, James R. (21 September 1995). The Cambridge Guide to Theatre (in ஆங்கிலம்). Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-43437-9.
- ↑ Lal, Ananda; Lal, Reader in English Ananda (2004). The Oxford Companion to Indian Theatre (in ஆங்கிலம்). Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-564446-3.
- ↑ Law, Jonathan (28 October 2013). The Methuen Drama Dictionary of the Theatre (in ஆங்கிலம்). A&C Black. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4081-4591-3.
- ↑ Encyclopaedia of Indian Theatre, Vol. VI. Raj Publication. 2004. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788186208359.
- ↑ Bajeli, Diwan Singh (27 February 2020). "Bhikhari Thakur: Voice of the marginalised". https://www.thehindu.com/entertainment/theatre/bhikhari-thakur-voice-of-the-marginalised/article30931327.ece/amp/.
- ↑ Narayan, Badri (2016). Culture and Emotional Economy of Migration. Taylor & Francis. p. 74. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1315448039.
- ↑ Narayan, Badri. Culture and Emotional Economy of Migration. p. 76.
- ↑ Rai 2020, ப. 49.
- ↑ "भिखारी ठाकुर के 'बेटी बेचवा' का कोयला मजदूरों पर हुआ था व्याप्क असर, शो के दाैरान रोते हुए खाई यह कसम". Dainik Jagran (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2022-11-14.
- ↑ Thakur, Harinarayan (2009). Bhārata meṃ pichaṛā varga āndolana aura parivartana kā nayā samājaśāstra. Gyan Publishing House. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788178357416.
- ↑ Bhikhari Thakur: Bhojpuri ke Bharatendu. Allahabad: Aashu Prakashan. 2005. p. 23.
- ↑ Giri, Ananta Kumar (23 January 2021). Cross-Fertilizing Roots and Routes: Identities, Social Creativity, Cultural Regeneration and Planetary Realizations (in ஆங்கிலம்). Springer Nature. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-981-15-7118-3.
- ↑ Dost 2017, ப. 108.
நூலியல்
[தொகு]- Prasad, Maheshwar (1964), Jankavi Bhikhari Thakur, Bhojpuri Pariwar Patna
- Maheshwaracharya (1978), Bhikhari: Bhojpuri ke Lok kalakar bhakt Bhikhari Thakur ki Samast rachnaon ka vishleshana [Bhikhari: A critical study of all writings of Bhojpuri Folk-Dramatist and Devotee Bhikhari], Lok Kalakar Bhikhari Thakur Aashram
- Dwiwedi, B.P. (2000), Bhikhari Thakur: Bhojpuri ke Bharatendu, Aashu Prakashan
- Rai, D.N. (2004), Lok Kalakar Bhikhari Thakur-Iyadan ke khoh se (in Bhojpuri), Shree Madhav Press, Chhapra
- Singh, Dhananjay (2008), Bhojpuri Pravasi Shramikon ki Sanskriti aur Bhikhari Thakur ka Sahitya (in Hindi), NLI Research studies series
- Dost, Jainendera (2017). "Naach, Launda Naach or Bidesiya Politics of (re)naming". Performance Research 22 (5): 106–112. doi:10.1080/13528165.2017.1384187. https://www.tandfonline.com/doi/abs/10.1080/13528165.2017.1384187.
- Kumar, Pankaj (2022), Bhikhari Thakur's Bidesia and Gabar Ghichor: Enduring saga of angst, pain and longing of the 'left-behind'
- Rai, Sandeep (2020). Aesthetics and Politicd: Two Leading Bhojpuri Artists (in ஆங்கிலம்) (1st ed.). Wadala (East), Mumbai: BecomeShakespeare.com. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-90543-50-2.
வெளி இணைப்புகள்
[தொகு]- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் Bhikhari Thakur
- http://www.bhikharithakur.com/ பரணிடப்பட்டது 9 மே 2017 at the வந்தவழி இயந்திரம்
- भिखारी ठाकुर के व्यक्तित्व और कृतित्व पर समर्पित जाल स्थल பரணிடப்பட்டது 10 சூன் 2013 at the வந்தவழி இயந்திரம் (bidesia.co.in)
- सूत्रधार (भिखारी ठाकुर के जीवन पर सुप्रसिद्ध कथाकार
- भिखारी ठाकुर कृत बिदेसिया नाटक (pdf file)
- भिखारी ठाकुर का एकमात्र प्रकाशित साक्षात्कार பரணிடப்பட்டது 13 நவம்பர் 2013 at the வந்தவழி இயந்திரம் (बिदेसिया, 1987 में प्��काशित)
- BHOJPURI ARTISTIC TRADITION AND BHOKHARI THAKUR
- लोक कला मर्मज्ञ और सुप्रसिद्ध नाटककार जगदीश चंद्र माथुर का भिखारी ठाकुर पर संस्मरण பரணிடப்பட்டது 13 நவம்பர் 2013 at the வந்தவழி இயந்திரம் (1971 में प्रकाशित)
- एंजोय डर्टी पिक्चर,वी कांट टॉलरेट लौंडा (परिचयात्मक आलेख)
- ब्रेख्त,भिखारी,बादल और बोल (भिखारी ठाकुर के रंगमंचीय अवदान पर तुलनात्मक आलेख)
- Bhikhari Thakur