உள்ளடக்கத்துக்குச் செல்

பகத் பாசில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பகத் பாசில்
பிறப்புஅப்துல் ஹமீது முகமது பகத் பாசில்
ஆகஸ்டு 8, 1982 [1]
ஆலப்புழை, கேரளா, இந்தியா
இருப்பிடம்கொச்சி, கேரளா, இந்தியா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2002, 2009 முதல் இன்றுவரை

பகத் பாசில் (Fahadh Faasil) இந்தியாவைச் சேர்ந்த திரைப்பட நடிகர் ஆவார். இவர் மலையாளத் திரைப்படத் துறையில் நடித்து வருகிறார். இவரது தந்தையான ஃபாசில் மலையாளத் திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் 2002 ஆம் ஆண்டு இவரது தந்தை ஃபாசில் இயக்கிய கையெத்தும் தூரத்து எனும் திரைப்படத்தில் அறிமுகமானார். இவர் 2011 ஆம் ஆண்டு கேரளா மாநில அரசின் இரண்டாவது சிறந்த நடிகர் எனும் விருதினைப் பெற்றார்.

ஆரம்பகால வாழ்க்கை

[தொகு]

பகத் பாசில், 1982 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 8 தேதி அன்று பிறந்தார். இவரது தந்தை பாசில் (பிரபல இயக்குநர்) மற்றும் தாய் ரோசினா ஆவார். இவருக்கு அகமேதா, பாத்திமா என்ற சகோதரிகளும், பர்கான் என்ற சகோதரரும் இருக்கின்றனர். இவர் தனது பள்ளிப் படிப்பை ஊட்டி லாரன்சு பள்ளியில் பயின்றார். பின்பு முதுகலை படிப்பை அலாப்புழாவில் உள்ள சனதான தர்ம கல்லூரியிலும் மற்றும் முதுகலைப் படிப்பை அமெரிக்காவின் மியாமி பல்கலைக்கழகத்திலும் முடித்தார்.[2][3]

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

பகத் பாசில் 2014 ஆம் ஆண்டு ஆகத்து 21 அன்று 21 அன்று இந்திய நடிகை நஸ்ரியா நசீம் என்பவரை திருமணம் செய்தார். இருவரும் 2014 ஆம் ஆண்டு வெளியான பெங்களூர் நாட்கள் (மலையாளம்) திரைப்படத்தில் கணவன், மனைவியாக நடித்தனர். இதில் இருவருக்கும் ஏற்பட்ட அறிமுகத்தின் பின்பு குடும்பத்தினர் ஒப்புதலோடு திருமணம் நடந்தது.[4]

திரைப்படங்கள்

[தொகு]
ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் இயக்குநர் குறிப்புகள்
2001 கையெத்தும் தூரத்து சச்சின் பாசில் முதல் திரைப்படம்
2009 மிருத்யுஞ்சயம்
(கேரள கபே)
- உதய் ஆனந்தன் 8 ஆண்டுகளுக்குப் பின்னர் நடித்த படம்
2010 பிரமாணி போபி பி. உண்ணிகிருஷ்ணன் துணை நடிகராக நடித்தார்
காக்டெயி‌ல் நவீன் கிருஷ்ணமூர்த்தி அருண் குமார் அரவிந்த் அருண் குமாரின் முதல் திரைப்படம்
டோர்னமென்ட் விஸ்வனாதன் லால் கதா நாயகன் வேடம்
2011 சாப்பா குரிஸ் அர்ஜுன் சமீர் தாஹிர்
இந்தியன் ருப்பி - ரஞ்சித்
2012 பத்மஸ்ரீ பரத் டோ: சரோஜ் குமார் அலக்ஸ் சாமுவேல் சஜின் ராகவன்
22 பீமெயில் கோட்டயம் சிறிள் சி. மாத்யு ஆசிக் அபு
டயமண்டு நெக்‌லஸ் அருண் லால்ஜோஸ்
பிரைடே லிஜின் ஜோஸ்
2013 அன்னையும் ரசூலும் ரசூல் ராஜீவ் ரவி
நத்தோலி ஒரு செறிய மீனல்ல பிரேமன், நரேந்திரன் வி. கே. பிரகாஷ்
ஆமேன் சாலமன் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி
ரெட்‌ ஒயின் அனூப்‌ சலாம் பாப்பு
இம்மானுவல் ஜீவன் ராஜ் லால் ஜோஸ்
அகம் ஸ்ரீனி சாலினி உஷ நாயர்
ஆமி
(5 சுந்தரிகள்)
அஜ்மல் அன்வர் ரஷீத்
ஒளிப்போர் அஜயன் (ஒளிப்போராளி) ஏ. வி. சசிதரன்
ஆர்டிஸ்டு மைக்கேல் ஆன்டணி சியாமபிரசாத் [5]
நார்த் 24 காதம் ஹரிகிருஷ்ணன் அனில் ராதாகிருஷ்ணன் மேனன் [6]
ஜட்ஜ்மென்ற் டே
(டி கம்பனி)
டாக்டர் சுனில் மாத்யு வினோத் விஜயன்
ஒரு இந்தியன் பிரணய கதை அய்மனம் சித்தார்த்தன் சத்யன் அந்திக்காடு
2014 1 பை டூ அருண் குமார் அரவிந்த்
காட்ஸ் ஓன் கன்றி மனு வாசுதேவ் சனல்
பெங்களூர் டேஸ் சிவ தாஸ்‌ அஞ்சலி மேனன்
இய்யோபின்றெ புஸ்தகம் அமல் நீரத் படப்பிடிப்பில்
வம்பத்தி மாடன் ரம்யா ராஜ்
சிவகங்கை சினிமா பாக்டறி குஞ்ஞிக்கண்ணன் (அருண் ராஜ்) பாபு ஜனார்த்தனன்
மணீ ரத்னம் நீல் ஜான் சாமுவேல் சந்தோஷ்‌ நாயர்
மணியறையிலெ ஜின்னு அன்வர் ரஷீத்
கப்பா பப்படம் அனீஷ்‌ குருவிளை
டபிள் பாரல் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி
கார்ட்டூன் சஹீத் அராபத் [7][8]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Happy Birthday Fahadh". Archived from the original on டிசம்பர் 17, 2012. பார்க்கப்பட்ட நாள் August 8, 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Malayalam Actor Fahad Fazil (Fahadh Faasil) Family Pics ~ Mere Pix". web.archive.org. 2014-01-09. Archived from the original on 2014-01-09. பார்க்கப்பட்ட நாள் 2022-07-01.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  3. "Fahadh Faasil celebrates birthday with Nazriya Nazim - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-07-01.
  4. "PIX: Malayalam actor Fahadh Faasil weds Nazriya Nazim". Rediff (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-07-01.
  5. Athira M. (2013-03-28). "Art of romance". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 2013-04-14.
  6. TNN Mar 13, 2013, 12.00AM IST (2013-03-13). "Muhurth of Fahadh Faasil starrer Iyer in Pakistan in Kochi – Times Of India". Articles.timesofindia.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 2013-04-14.{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link) CS1 maint: numeric names: authors list (link)[தொடர்பிழந்த இணைப்பு]
  7. http://articles.timesofindia.indiatimes.com/2013-04-13/news-and-interviews/385109501malayalam-film-fahadh-faasil-suriya-project[தொடர்பிழந்த இணைப்பு]
  8. http://www.nowrunning.com/malayalam/Saheed பரணிடப்பட்டது 2014-11-05 at the வந்தவழி இயந்திரம் Arafath-to-direct-films-in-malayalam/68667/story.htm

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பகத்_பாசில்&oldid=4162728" இலிருந்து மீள்விக்கப்பட்டது