உள்ளடக்கத்துக்குச் செல்

நெற்ஃபிளிக்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நெற்ஃபிளிக்சு
சேவை பகுதிசில இடங்களைத் தவிர்த்து உலகம் முழுவதும்.
நிறுவனர்(கள்)
  • ரீட் ஹேஸ்டிங்ஸ்
  • மார்க் ராண்டால்ஃப்

நெற்ஃபிளிக்சு அல்லது நெட்ஃபிளிக்சு அல்லது நெட்ஃபிளிக்ஸ் (Netflix, Inc) என்பது அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள லாஸ் கேடோஸை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஒரு ஊடக சேவை வழங்குநர் மற்றும் தயாரிப்பு நிறுவனமாகும். இந்நிறுவனம் கலிபோர்னியாவின் ஸ்காட்ஸ் பள்ளத்தாக்கில் 1997 ஆம் ஆண்டு ரீட் ஹேஸ்டிங்ஸ் மற்றும் மார்க் ராண்டால்ஃப் ஆகியோரால் நிறுவப்பட்டது. நிறுவனத்தின் முதன்மை வணிகம் சந்தா அடிப்படையில் வாடிக்கையாளர்களுக்கு ஒலியொளியோடை வசதியை வழங்குவது ஆகும். இவ்வசதி மூலம் (நெட்பிளிக்ஸின் தயாரிப்புகளும் சேர்த்து) திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் இணைய ஒலியொளியோடையை பயன்படுத்தும் வசதி வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும்.[1] ஏப்ரல் 2019 நிலவரப்படி, நெட்ஃபிக்ஸ் உலகளவில் 148 மில்லியனுக்கும் அதிகமான கட்டணச் சந்தாதாரர்களைக் கொண்டிருந்தது. அமெரிக்காவில் மட்டும் 60 மில்லியன் சந்தாதாரர்கள் உள்ளனர். இலவச சந்தாக்களையும் சேர்த்தால் மொத்தம் 154 மில்லியனுக்கும் அதிகமான சந்தாக்களை இந்நிறுவனம் கொண்டுள்ளது.[2] சீனாவின் பிரதான நிலப்பகுதிகள் (உள்ளூர் கட்டுப்பாடுகள் காரணமாக), சிரியா, வட கொரியா, ஈரான் மற்றும் கிரிமியா (அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் காரணமாக) ஆகிய இடங்களைத் தவிர இச்சேவையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் உலகம் முழுவதும் வழங்குகிறது. இந்நிறுவனம் நெதர்லாந்து, பிரேசில், இந்தியா, ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளில் அலுவலகங்களைக் கொண்டுள்ளது.[3] நெட்ஃபிக்ஸ் நிறுவனம் எம்.பி.ஏ எனப்படும் மோஷன் பிக்சர் சங்கத்திலும் உறுப்பினராக உள்ளது.

நெட்ஃபிக்ஸ் தொடக்கக் காலத்தில் அஞ்சல் வழியாகத் திரைப்பட இறுவட்டுகளை வாடிக்கையாளர்களுக்கு வாடகைக்கு அனுப்பும் மற்றும் விற்பனை செய்யும் சேவையினைச் செய்து வந்தது.[1][4] ஆனால் நிறுவனம் நிறுவப்பட்ட ஒரு வருடத்திற்குப் பிறகு ஹேஸ்டிங்ஸ் விற்பனையைக் கைவிட்டுவிட்டு இறுவட்டு வாடகைக்கு விடும் வணிகத்தில் மட்டும் கவனம் செலுத்தினார். நெட்ஃபிக்ஸ் 2010 இல் தனது வணிகத்தை விரிவுபடுத்தியது, இறுவட்டு மற்றும் ப்ளூ-ரே வாடகை வணிகத்தை நடத்திக்கொண்டே ஒலியொளியோடை வசதியையும் அறிமுகப்படுத்தியது. இந்நிறுவனம் 2010 ஆம் ஆண்டிலிருந்து சர்வதேச அளவில் விரிவடையத் தொடங்கியது. கனடா, லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் தீவுகள் ஆகிய இடங்களில் முதலில் விரிவுபடுத்தினர்.[5] நெட்ஃபிக்ஸ் 2012 ஆம் ஆண்டில் தயாரிப்புத் துறையில் நுழைந்தது. நெட்பிளிக்ஸின் முதல் தயாரிப்பு லில்லிஹாமர் தொடராகும்.

ஆரம்ப வரலாறு

[தொகு]

நெட்ஃபிக்ஸ் நிறுவனம் ஏப்ரல் 14, 1998 அன்று, உலகின் முதல் இணைய இறுவட்டு வாடகைக் கடையாக தொடங்கப்பட்டது.,[6][7] ஆரம்பத்தில் 30 ஊழியர்கள் மட்டுமே பணியாற்றினர். 925 தலைப்புகள் மட்டுமே கிடைத்தது, ஆனால் அந்த கால கட்டத்தில் அச்சிடப்பட்ட இறுவட்டுகளின் முழு எண்ணிக்கையே ஏறத்தாழ இவ்வளவு தான்.[8] நெட்பிளிக்ஸ் நிறுவனம் தனது போட்டியாளரான பிளாக்பஸ்டரின் விலை மற்றும் கால அவகாசத்தை ஒட்டியே தமது வாடகை மற்றும் கால அவகாசத்தை நிர்ணயம் செய்தனர்.[9]

உரிமையாளர்கள்

[தொகு]

2017 ஆம் ஆண்டின் நிலவரப்படி, நெட்ஃபிக்ஸின் பங்குகளை முக்கியமான நிறுவன முதலீட்டாளர்கள் வைத்துள்ளனர். அவற்றுள் தி கேப்பிட்டல் குழு, தி வான்கார்ட் குழு, பிளாக்ராக் ஆகியவை அடங்கும்.[10]

நிதி நிலை

[தொகு]

2018 ஆம் வருட நிதியாண்டில், நெட்ஃபிக்ஸ் நிறுவனம் 1.21 பில்லியன் அமெரிக்க டாலர் வருவாயைப் பதிவுசெய்ததுள்ளது. இந்நிறுவனத்தின் ஆண்டு வருமானம் 15.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இது இந்நிறுவனத்தின் முந்தைய நிதிச் சுழற்சியை விட சுமார் 116 சதவிகிதம் அதிகமாகும். நெட்ஃபிக்ஸின் பங்குகள் 2018 ஆம் ஆண்டில் ஒரு பங்குக்கு $ 400 க்கு மேல் வர்த்தகம் செய்யப்பட்டது. இதுவே இந்நிறுவனத்தின் மிக உச்சகட்ட விலையாகும். மேலும் இந்நிறுவனத்தின் சந்தை மூலதனம் ஜூன் 2018 இல் 180 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான மதிப்பை எட்டியது. பார்ச்சூன் 500 வெளியிட்ட, வருவாயைக் கொண்டு மதிப்பிடப்படும் அமெரிக்காவின் மிகப்பெரிய 500 நிறுவனங்களின் பட்டியல் 2018 இல் நெட்ஃபிக்ஸ் நிறுவனம் 261 வது இடத்தைப் பிடித்தது.[11]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Pogue, David (January 25, 2007). "A Stream of Movies, Sort of Free". The New York Times இம் மூலத்தில் இருந்து March 22, 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160322100820/http://www.nytimes.com/2007/01/25/technology/25pogue.html. 
  2. "Q1 2019 Letter to Netflix Shareholders" (PDF). Netflix Investor Relations. பார்க்கப்பட்ட நாள் April 17, 2019.
  3. "Netflix Corporate Information". Netflix. Archived from the original on January 3, 2018.
  4. Keating, Gina (2012). Netflixed: The Epic Battle for America's Eyeballs. New York: Portfolio/Penguin. p. 47. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781101601433.
  5. "Netflix launches Canadian movie service". CBC News இம் மூலத்தில் இருந்து February 13, 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160213070840/http://www.cbc.ca/news/technology/netflix-launches-canadian-movie-service-1.872505. 
  6. Keating, Gina (2012). Netflixed: The Epic Battle for Amerbabishanica's Eyeballs. Portfolio/ Penguin.
  7. "Netflix Partners With All Movie Guide To Serve As Preferred DVD Rental Store". Netflix Media Center. Archived from the original on March 23, 2018. பார்க்கப்பட்ட நாள் March 23, 2018.
  8. "History of Netflix, Inc. – FundingUniverse". fundinguniverse.com.
  9. Czar, Stephen (1998). "DVD Historical Timeline". Archived from the original on March 19, 2006. பார்க்கப்பட்ட நாள் January 30, 2006.
  10. "Netflix, Inc. (NFLX) Ownership Summary". NASDAQ. Archived from the original on July 10, 2017.
  11. "Netflix". Fortune. Archived from the original on 9 மார்ச் 2020. பார்க்கப்பட்ட நாள் 25 November 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெற்ஃபிளிக்சு&oldid=3653329" இலிருந்து மீள்விக்கப்பட்டது