உள்ளடக்கத்துக்குச் செல்

நிசா ராவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிசா ராவ்
Nisha Rao
பிறப்புலாகூர், பாக்கித்தான்
தேசியம்பாக்கித்தானியர்
கல்விஇளநிலை சட்டம்
படித்த கல்வி நிறுவனங்கள்கராச்சி பல்கலைக்கழகம்
பணிவழக்கறிஞர், செயற்பாட்டாளர்

நிசா ராவ் (Nisha Rao) ஒரு பாக்கித்தான் நாட்டைச் சேர்ந்த ஒரு திருநங்கை வழக்கறிஞர் மற்றும் செயற்பாட்டாளர் ஆவார். [1] 2020 ஆம் ஆண்டு இவர் பாக்கித்தானின் முதலாவது திருநங்கை சட்ட பட்டதாரியாக சிறப்பு பெற்றார்.[2] [3]

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

நிசா ராவ் பஞ்சாப் பிராந்தியத்தில் உள்ள லாகூரில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தார். இவருக்கு ஏழு உடன்பிறப்புகள் இருந்தனர். தனது ஆரம்ப ஆண்டுகளில், லாகூரில் உள்ள ஒரு தனியார் ஆங்கில ஊடக பள்ளியில் இவர் சேர்க்கப்பட்டார். 14 வயதில்தான் நிசாவுக்கு தான் வித்தியாசமானவள் என்பதை உணர்ந்தார். [4] இவரது பெண்மைத் தன்மையான பழக்கங்களுக்காக பெற்றோர்கள் இவரை எப்போதுமே அடிக்கவில்லை. ஆனால் இவர் மெட்ரிக் படிப்பு முடித்த பிறகு பிறந்த வீட்டை விட்டு வெளியேற விரும்பினார். [5] [6] ஒரு புதிய தொடக்கத்தை எதி நோக்கி இவர் கராச்சிக்குச் சென்றார். [7] [8]

கராச்சியில், இவர் இச்ரத்து காலனியில் ஒரு திருநங்கை சமூகத்துடன் சேர்ந்து வாழத் தொடங்கினார். [9] [10] நிசா ராவ் தனது செலவுகளுக்காக சிறிது காலம் தெருவில் பிச்சையெடுத்தார், கெஞ்சினார். [11] [12] இந்த காலத்தில் தான் கராச்சியில் உள்ள பள்ளிக்கு கட்டணம் செலுத்தி படிப்பதாகவும் ஆனால் செலவுக்கு தெருக்களில் பிச்சை எடுப்பதாகவும் தனது குடும்பத்தினரிடம் கூறியிருந்தார். நிசா காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை பிச்சை எடுத்தும் இரவு 4 மணி முதல் 9 மணி வரை சட்ட வகுப்புகள் சென்றும் படித்திருக்கிறார். [13] [14] [15] [16] இப்படியாகத்தான் கராச்சி பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றார்.

கல்வி

[தொகு]

பாக்கித்தானில் உயர்கல்வியைத் தேர்ந்தெடுத்த சில திருநங்கைகளில் நிசா ராவும் ஒருவர். கல்லூரியை முடித்த பிறகு, கராச்சி பல்கலைக்கழகத்தில் பிஏ பாடத் திட்டத்தில் சர்வதேச உறவுகளில் நிபுணத்துவம் பெற்றார். [17] [18] இந்த நேரத்தில், நிசா 'முதாசிர் இக்பால்' என்ற வழக்கறிஞருடன் நட்பு கொண்டார். அவர் நிசா ர���வின் கூற்றுப்படி, உயர் கல்வியைத் தொடர நிசாவுக்கு ஆதரவளித்தார். [19] [20] நிசா பின்னர் உயர் படிப்பைத் தொடர முடிவு செய்தார் மற்றும் சிந்து முசுலீம் சட்டக் கல்லூரியில் 2015 ஆம் ஆண்டு சேர்க்கப்பட்டார். [21] கல்லூரியின் முன்னாள் முதல்வர் முசுதபா அலி மகேசர், நிசாவின் படிப்பை ஆதரித்தார். சர்வதேச சட்டத்தில் இவருக்கு தனிப்பட்ட பயிற்சியையும் அளித்தார். நிசா ராவ் 2018 ஆம் ஆண்டு பட்டம் பெற்றார்.[8] [22]

தொழில்

[தொகு]

நிசா ராவ் பல்வேறு வழக்கறிஞர் நிகழ்வுகளில் பங்கேற்று தனது சட்ட வாழ்க்கையைத் தொடங்கினார். [23] பின்னர் இவர் தன்னார்வ மற்றும் சட்ட ஆலோசகராக பல்வேறு அரசு சாரா அமைப்புகளுடன் தன்னை இணைத்துக் கொண்டார். [24] [25] பாலின ஊடாடும் கூட்டணியில் சேர்ந்தார். இக்கூட்டணி திருநங்கைகளின் உரிமைகளுக்காக வேலை செய்கிறது. [26] [27] இக்கூட்டணியின் பொருளாளராக நியமிக்கப்பட்ட பிறகு இவர் இசுலாமாபாத்திற்கு சென்றார், ஆனால் நிதி தடைகள் காரணமாக வேலையை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. [4] [9]

நிசா தனது வருமானத்திற்கு கூடுதலாக தனது பகுதியில் வாழும் பல குழந்தைகளுக்கு பயிற்சி அளித்தார். [28] [29]

ஒரு வழக்கறிஞராக, நிசா திருநங்கைகள் தொடர்பான 50 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட வழக்குகளை விசாரித்துள்ளார். [5] [30]

எதிர்கால திட்டங்கள்

[தொகு]

நிசா தனது இலாப நோக்கற்ற நிறுவனத்தின் மூலம் திருநங்கைகளுக்கு உதவ திட்டமிட்டுள்ளார். [31] [32] திருநங்கைகள் மற்ற சமூக உறுப்பினர்களால் வழிநடத்தப்படக்கூடிய ஓர் உதவி மையத்தை இவர் நிறுவ விரும்புகிறார். எதிர்காலத்தில் ஒரு திருநங்கை முதியோர் இல்லத்தை கட்டும் திட்டமும் இவரிடம் உள்ளது. [33] [34]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "With their members on ground, transgender community looks forward to inclusive elections". www.thenews.com.pk (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-26.
  2. "Transgender community fears complete lockdown will add more miseries to life". The Express Tribune (in ஆங்கிலம்). 2020-03-22. பார்க்கப்பட்ட நாள் 2020-11-17.
  3. "Meet : Nisha Rao Pakistan's first transgender lawyer | Maaya Kahani | 8-November-2020". Newsone (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-11-08. Archived from the original on 2020-11-29. பார்க்கப்பட்ட நாள் 2020-11-17.
  4. 4.0 4.1 "They tried degrading her until they couldn't help respecting her". www.thenews.com.pk (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-17."They tried degrading her until they couldn't help respecting her". www.thenews.com.pk. Retrieved 2020-11-17.
  5. 5.0 5.1 "From streets to courts, Pakistan's first transgender lawyer Nisha Rao". MM News TV (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-10-27. பார்க்கப்பட்ட நாள் 2020-11-17.
  6. "Bringing the unheard voices and unwritten stories to the fore | UNDP in Pakistan". UNDP (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-26.
  7. "Nisha Rao: Meet Pakistan's first transgender lawyer | TV Shows - geo.tv". www.geo.tv (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-16.
  8. 8.0 8.1 "He came to Karachi to find himself. Now, she wants to be a judge". The Express Tribune (in ஆங்கிலம்). 2019-02-24. பார்க்கப்பட்ட நாள் 2020-11-17.
  9. 9.0 9.1 Iram.Rana (2020-11-01). "Nisha Rao – Pakistan First Talented Hardworking Transgender | YoungStars.PK". Young Stars of Pakistan | Proud to be a Pakistani (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-26.
  10. "transgender lawyer Nisha Rao Archives". Pakaffairs.pk (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-26.
  11. Zehra, Mehak. "Pakistan's First Transgender Lawyer Is Fighting Against All Odds | Brandsynario" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-26.
  12. Topics, Head (8 November 2020). "Meet : Nisha Rao Pakistan's first transgender lawyer | Maaya Kahani | 8-November-2020 | Newsone". Head Topics (in உருது). பார்க்கப்பட்ட நாள் 2020-11-26.
  13. Zehra, Sana (2020-10-23). "Nisha Rao becomes the first transgender lawyer of Pakistan". Newsburry (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2020-11-01. பார்க்கப்பட்ட நாள் 2020-11-17.
  14. "Nisha Rao". Pakpedia | Pakistan's Biggest Online Encyclopedia (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-11-06. பார்க்கப்பட்ட நாள் 2020-11-26.
  15. Pk, Voice (2020-11-20). "A candid conversation with Nisha Rao". Voicepk.net (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-26.
  16. "Nisha Rao: First Transgender Lawyer In Pakistan". GrowPakistani (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-10-24. பார்க்கப்பட்ட நாள் 2020-11-26.
  17. "'From street begging to court': Meet Nisha Rao, Pakistan's first transgender lawyer". SBS Your Language (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-26.
  18. "Nisha's story | Pakistan Today". www.pakistantoday.com.pk. Archived from the original on 2020-11-24. பார்க்கப்பட்ட நாள் 2020-11-26.
  19. "Interview with Nisha Rao : Pakistan's First Transgender Lawyer". Rava (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-10-27. பார்க்கப்பட்ட நாள் 2020-11-17.
  20. Lahorified (2020-10-26). "Here's Inspiring Story of Pakistan's 1st Transgender Lawyer Nisha Rao". Medium (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-26.
  21. "NISHA RAO". www.samaa.tv. பார்க்கப்பட்ட நாள் 2020-11-26.
  22. weeks, Zara Khan 3; Days, 3 (2020-10-23). "Nisha Rao becomes the first transgender lawyer of Pakistan". Mashable Pakistan (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-17. {{cite web}}: |first2= has numeric name (help)CS1 maint: numeric names: authors list (link)
  23. las. "LAS Newsletter" (PDF).
  24. "Nisha Rao: Pakistan's First Transgender Lawyer Now Fights For Her Community". Bolojawan.com (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-10-22. Archived from the original on 2020-11-01. பார்க்கப்பட்ட நாள் 2020-11-26.
  25. "Nisha Rao Archives". Inflics (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-26.
  26. "Quiz of the Day | Women in Elections". WIE (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-26.
  27. News; Pakistan, News (2018-10-03). "Targeted for 'begging', transgender community begs to be left alone". LEAP Pakistan (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-26. {{cite web}}: |last= has generic name (help)
  28. "Society's support for women emancipation must, says speakers". The Nation (in ஆங்கிலம்). 2017-12-04. பார்க்கப்பட்ட நாள் 2020-11-26.
  29. "Pakistan's transgender persons struggle with pandemic and poverty". international.la-croix.com (in ஆங்கிலம்). 2020-07-17. பார்க்கப்பட்ட நாள் 2020-11-26.
  30. lahorified (24 October 2020). "1st transgender lawyer Nisha Rao". Archived from the original on 14 செப்டம்பர் 2021. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  31. "In the subcontinent, the 'third gender' struggles to exist". Ittehad اتحاد गठबंधन (in ஆங்கிலம்). 2018-10-30. பார்க்கப்பட்ட நாள் 2020-11-26.
  32. "Meet Nisha Rao | Pakistan's First-Ever Transgender Lawyer". ViralBreak (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-11-07. பார்க்கப்பட்ட நாள் 2020-11-26.[தொடர்பிழந்த இணைப்பு]
  33. Batool, Zehra (2020-10-21). "Meet Nisha Rao - Pakistan's First-Ever Transgender Lawyer Who Fights Against All Odds". Parhlo (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-17.
  34. "Meet Pakistan's First Trans-woman Lawyer!". The Meraki (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-10-24. Archived from the original on 2020-11-26. பார்க்கப்பட்ட நாள் 2020-11-17.

புற இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிசா_ராவ்&oldid=3732988" இலிருந்து மீள்விக்கப்பட்டது