நாராயணவனம்
நாராயணவனம் | |||||
— நகரம், மண்டலம் — | |||||
அமைவிடம்: நாராயணவனம், ஆந்திரப்பிரதேசம்
| |||||
ஆள்கூறு | 13°25′N 79°35′E / 13.42°N 79.58°E | ||||
நாடு | இந்தியா | ||||
மாநிலம் | ஆந்திரப்பிரதேசம் | ||||
மாவட்டம் | சித்தூர் | ||||
ஆளுநர் | எசு. அப்துல் நசீர் | ||||
முதலமைச்சர் | ஜெகன் மோகன் ரெட்டி | ||||
Congress | செங்கா ரெட்டி | ||||
மக்களவைத் தொகுதி | நாராயணவனம் | ||||
மக்கள் தொகை | 10,965 (2001[update]) | ||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||
பரப்பளவு • உயரம் |
• 122 மீட்டர்கள் (400 அடி) | ||||
குறியீடுகள்
|
நாராயணவனம் என்னும் ஊர் ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த ஊரையும் அருகில் உள்ள ஊர்களையும் இணைத்து நாராயணவனம் மண்டலம் உருவாக்கப்பட்டது. இது ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 66 மண்டலங்களில் ஒன்று. [1] இது திருப்பதி - ஊத்துக்கோட்டை - சென்னை வழியில் உள்ள ஊர். இது திருப்பதியிலிருந்து 39 கி.மீ. தொலைவில் உள்ளது. புத்தூரிலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு சுரைக்காய் சுவாமி சித்தர் ஜீவசமாதியும் உள்ளது. நாராயணவனத்திலிருந்து கைலாசநாதர் நீர்வீழ்ச்சி 10 கிமீ தொலைவில் உள்ளது. இங்கிருந்து 15 கிமீ தொலைவில் இராகு பரிகாரத்தலமான இராமகிரி கோயில் உள்ளது. இங்கிருந்து 7 கி.மீ தொலைவில் நாகலாபுரம் வேதநாராயண சுவாமி கோயில் உள்ளது. இங்கிருந்து 15 கி.மீ சென்றால் சுருட்டுப்பள்ளி என்னும் ஊரில் நீலகண்ட சுவாமி கோயில் உள்ளது.
மக்கள் வகைப்பாடு
[தொகு]இந்தியாவின் 2001 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி நாராயணவனத்தின் மக்கள்தொகை 10,965 ஆக இருந்தது. இதில் 50% ஆண்களாகவும் 50% பெண்களாகவும் உள்ளனர். இவ்வூர் தேசிய சராசரியான 59.5% இனை விட அதிகமான 72% சராசரி எழுத்தறிவு விகிதத்தை கொண்டுள்ளது: ஆண்களின் எழுத்தறிவு 80%, பெண்களின் எழுத்தறிவு 63% ஆகும். இங்குள்ள மக்கள் தொகையில் 13% ஆனேர் 6 வயதுக்கு கீழ்ப்பட்டவர்கள்.
ஊர்கள்
[தொகு]நாராயணவனம் மண்டலத்தில் பதினாறு ஊர்கள் உள்ளன. [2]
- கொண்டலசெருவு
- கல்யாணபுரம்
- எரிக்கம்பட்டு
- திருவத்தியம்
- நாராயணவனம்
- வெங்கடகிருஷ்ணபாலம்
- கீழகரம்
- சமுதாயம்
- பீமுனிச்செருவு
- இப்பந்தாங்கல்
- திகுவகணகம்பாலம்
- காசிமிட்டா
- பொப்பராஜுபாலம்
- ஆரண்யம் கண்டுரிகா
- தும்பூர்
- பாலமங்களம்
ஆட்சி
[தொகு]இந்த மண்டலத்தின் எண் 24. இது ஆந்திர சட்டமன்றத்திற்கு சத்தியவேடு சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு திருப்பதி மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[3]
சான்றுகள்
[தொகு]- ↑ "சித்தூர் மாவட்டத்தில் உள்ள மண்டலங்கள்". Archived from the original on 2014-12-24. பார்க்கப்பட்ட நாள் 2014-08-25.
- ↑ "மண்டல வாரியாக ஊர்கள் - சித்தூர் மாவட்டம்" (PDF). Archived from the original (PDF) on 2014-12-14. பார்க்கப்பட்ட நாள் 2014-08-25.
- ↑ "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-10-15.