நரசராவ்பேட்டை
நரசராவ்பேட்டை | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 16°15′N 80°04′E / 16.25°N 80.07°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
மாவட்டம் | குண்டூர் |
பரப்பளவு | |
• மொத்தம் | 7.65 km2 (2.95 sq mi) |
ஏற்றம் | 55 m (180 ft) |
மக்கள்தொகை (2011)[2] | |
• மொத்தம் | 1,16,250 |
• தரவரிசை | 30வது இடம் |
• அடர்த்தி | 15,000/km2 (39,000/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழி | தெலுங்கு |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 522601, 522602 |
தொலைபேசி குறியீடு எண் | +8647 |
வாகனப் பதிவு | AP-08 |
இணையதளம் | narasaraopet |
நரசராவ்பேட்டை (Narasaraopet) இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின், குண்டூர் மாவட்டத்தில் நகராட்சியுடன் கூடிய நகரம் ஆகும். மேலும் இந்நகரம் நரசராவ்பேட்டை மண்டலம் மற்றும் நரசராவ்பேட்டை வருவாய் கோட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும் ஆகும்.[3][4]
அமைவிடம்
[தொகு]நரசராவ்பேட்டை குண்டூர் நகரத்திலிருந்து 48 கிமீ தொலைவிலும், விசாகப்பட்டினம் நகரத்திலிருந்து 441 கிமீ தொலைவிலும், விஜயவாடாவிலிருந்து 95 கிமீ தொலைவிலும் உள்ளது.
மக்கள்தொகை பரம்பல்
[தொகு]2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, நரசராவ்பேட்டையின் மொத்த மக்கள்தொகை 1,16,250 ஆகும். அதில் ஆண்கள் 58,809 ஆகவும், பெண்கள் 57,441 ஆகவும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 977 பெண்கள் வீதம் உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்டோர் 11,031 ஆகவுள்ளனர். எழுத்தறிவு 79.59 % ஆகவுள்ளது. மக்கள்தொகையில் இந்துக்கள் 75.67% ஆகவும், இசுலாமியர் 22.52% ஆகவும், கிறித்தவர்கள் 1.52% ஆகவும், மற்றவர்கள் 0.29% ஆகவும் உள்ளனர்.[5]
நகராட்சி நிர்வாகம்
[தொகு]18 மே 1915ல் நிறுவப்பட்ட நரசராவ்பேட்டை நகராட்சி, 28 ஏப்ரல் 1980 அன்று 7.65 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுடன் விரிவாக்கம் அடைந்தது.[1]
போக்குவரத்து
[தொகு]குண்டூர் - கர்னூல் / அனந்தபூர் வழியாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலை 522டி, நரசராவ்பேட்டை பைபாஸ் சாலை வழியாகச் செல்கிறது. மாநில நெடுஞ்சாலை எண் 45 இந்நகரம் வழியாகச் செல்கிறது. இந்நகரம் 157.08 நீள சாலைகள் கொண்டது.[6]
நரசராவ்பேட்டை தொடருந்து நிலையம் மூன்று நடைமேடைகள் கொண்டது.[7]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Basic Information of Municipality". Municipal Administration & Urban Development Department. Government of Andhra Pradesh. பார்க்கப்பட்ட நாள் 20 June 2015.
- ↑ "Andhra Pradesh (India): Districts, Cities, Towns and Outgrowth Wards – Population Statistics in Maps and Charts". citypopulation.de.
- ↑ "Guntur District Mandals" (PDF). Census of India. pp. 76, 109. பார்க்கப்பட்ட நாள் 19 January 2015.
- ↑ "District Census Handbook – Guntur" (PDF). Census of India. p. 14,46. பார்க்கப்பட்ட நாள் 18 January 2015.
- ↑ Narasaraopet City Census 2011 data
- ↑ "Details of Roads in Each ULB of Andhra Pradesh". Commissioner and Directorate of Municipal Administration. Municipal Administration and Urban Development Department - Government of Andhra Pradesh. Archived from the original on 1 August 2016. பார்க்கப்பட்ட நாள் 28 March 2017.
- ↑ Narasaraopet railway station