தொ. மு. இராமராய்
ராமராய் (பி. 1852) தமிழ்நாடு, மதுரையை சார்ந்த செளராட்டிரர். இவர் மிகச் சிறந்த சௌராஷ்டிர மொழி அறிஞர். தமது தாய்மொழியின் வளர்ச்சிப் பணியில் தம்மை முழுமையுமாக ஈடுபடுத்தியவர்.
வாழ்க்கைச் சுருக்கம்
[தொகு]ராமராயின் குடும்பப் பெயர் ஜாபாலி கோத்திரத்தைச் சேர்ந்த 'தொப்பே' என்பதாகும். தந்தையின் பெயர் முனிசவ்ளி. தாயார் பெயர் மீனாட்சி. சிறு வயதிலிருந்தே கல்வியில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த ராமராய் 1871-ம் ஆண்டில் பண்டிதர் லட்சுமணாச்சார்யரின் மாணவராகி சகல வேத உபநிடத சாத்திரங்களிலும், பன்மொழி இலக்கண இலக்கியங்களிலும் விரிவான கல்வி கற்றார்.
தாய்மொழி சௌராஷ்டிர மொழி தவிர சமஸ்கிருதம், ஹிந்தி, குஜராத்தி, மராத்தி, பஞ்சாபி, வங்காளி, ஒரியா, தெலுங்கு, கன்னடம், மலையாளம், தமிழ், ஆங்கிலம் முதலிய மொழிகளைக் கற்றுப் பன்மொழி புலவரானர். 1880-ம் ஆண்டிலிருந்து தனது முழு நேரத்தையும், செல்வத்தையும் சௌராஷ்டிர மொழி எழுத்து மற்றும் அதன் லிபி வளர்ச்சிக்கே செலவிட்டார்.
இராமராய் அவர்கள் சௌராஷ்டிர மொழிக்கென முழுமையான அளவில் அறிவியல் முறையில் வரிவடிவம் அமைத்து அச்சு எழுத்துக்களையும் தயாரித்தார். அவற்றைக் கொண்டே நிறைய நூல்களைத் தம் செலவிலேயே வெளியிட்டார்.
இராமாராய் எழுதிய நூல்கள்
[தொகு]- சௌராஷ்ட்ர போதினி
- சௌராஷ்ட்ர பிரைமர்
- சௌராஷ்ட்ர முதல் பாட புஸ்தகம்
- சௌராஷ்ட்ர இரண்டாம் பாட புஸ்தகம்
- சௌராஷ்ட்ர நீதி ஸம்பு
- சௌராஷ்ட்ர வியாகரணம்
- சௌராஷ்ட்ர நந்தி நிகண்டு மற்றும் பல.
- சதுர்பாஷா வல்லரி (தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம், சௌராஷ்ட்ரம், ஆகிய நான்கு மொழி சொற்தொகுப்பு)
- ‘’சௌராஷ்ட்ர நீதி ஸம்பு’’ (என்னும் நீதி நூல் இவரால் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டது. திருமுருக கிருபானந்த வாரியார் தமது திருப்புகழமிர்தம் என்னும் ஆன்மிக இதழில் இந்நூலை வெளியிட்டு தமிழ் மக்களிடையே பரப்பினார்).
- ஸௌராஷ்ட்ர மேதாவி ஸ்ரீ ராமராய் அவர்களின் வாழ்க்கை வரலாற்று நூல் மின்னூலாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. பதிவிறக்கம் செய்ய https://drive.google.com/open?id=1AbAHJ_AjLLdCDzf5uJ_QO9ftL64FtYhs
ஆதாரநூல்கள்
[தொகு]- சௌராட்டிரர்: முழுவரலாறு, ஆசிரியர், கே. ஆர். சேதுராமன், சென்னை.
வெளி இணைப்புகள்
[தொகு]- History of Saurashtrians of Tamilnadu பரணிடப்பட்டது 2013-07-28 at the வந்தவழி இயந்திரம்