உள்ளடக்கத்துக்குச் செல்

தெற்குப்பொய்கைநல்லூர் சுவர்ணபுரீசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தெற்குப்பொய்கைநல்லூர் சுவர்ணபுரீசுவரர் கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.

அமைவிடம்

[தொகு]

இக்கோயில் நாகப்பட்டினம்-வேதாரண்யம் சாலையில் வேளாங்கண்ணிக்கு வடக்கே 2 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.[1]

இறைவன், இறைவி

[தொகு]

இங்குள்ள மூலவர் சுவர்ணபுரீசுவரர் என்றழைக்கப்படுகிறார். இறைவி பெரியநாயகி. சோழ நாட்டில் பல கோயில்களில் விமானங்கள் பொன்வேய்ந்தநிலையில் காணப்பட்டதால் அவ்வ்று இருந்த விமானங்களை பொன்பரப்பி என்றழைப்பர். அங்கு கோயில் கொண்டுள்ள இறைவனை சுவர்ணபுரீசுவரர் என்றே அழைப்பர். இவ்வூரிலும் அவ்வாறான இறைவன் இருப்பது சிறப்பாகும்.[1]

சிறப்பு

[தொகு]

வேறு எந்த சிவன் கோயிலிலும் காணமுடியாத தீமிதித் திருவிழா இக்கோயிலின் சிறப்பாகும். இக்கோயிலின் வடக்கே பதினெண் சித்தர்களில் ஒருவரான கோரக்க சித்தரின் ஜீவ சமாதி வடக்குப்பொய்கைநல்லூரில் உள்ளது.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 திருக்கோயில்கள் வழிகாட்டி, நாகப்பட்டினம் மாவட்டம், தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை, 2014