உள்ளடக்கத்துக்குச் செல்

துரை விஸ்வநாதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துரை விஸ்வநாதன்

துரை விஸ்வநாதன், (துரைவி, பெப்ரவரி 28, 1931 - டிசம்பர் 21, 1998) ஈழத்தில் ஒரு தொழில் அதிபராக தன்னை ஸ்தாபித்துக் கொண்டவர். நல்லதொரு கலை இலக்கிய ரசிகராக மட்டுமின்றி, தனது உழைப்பால் துரைவி எனும் பதிப்பகம் அமைத்து பல தமிழ் நூற்களை வெளியிட்டதோடு, பல வழிகளிலும் ஈழத்து கலை இலக்கியவாதிகளை ஊக்குவித்தவராவார்.

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

பெப்ரவரி 28, 1931 தமிழ் நாட்டு துறையூர் சிக்கத்தம்பூர் எனும் ஊரில் பிறந்த துரை விஸ்வநாதன், 1945 ஆம் ஆண்டு தொழில் நிமிர்த்தம் இலங்கையில் குடியேறி, வியாபாரத் துறையில் தன்னை ஸ்தாபித்துக் கொண்டார். 1963 ஆம் ஆண்டு கண்டி நகரில் திருமணம் செய்து கொண்டார். 1966 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மாத்தளையில் ராணி கிரைண்டிங் மில்ஸ் எனும் நிறுவனத்தை ஆரம்பித்தார். அதே ஊரில் 1967 ஆம் ஆண்டு விஜயாஸ் எனும் வியாபார நிறுவனத்தை தொடங்கினார்.1976ஆம் ஆண்டு கொழும்பு நகரில் விஜயா ஜெனரல் ஸ்டோர்ஸ் எனும் நிறுவனத்தை ஆரம்பித்தார். அந்த நாள் தொடக்கம் கலை இலக்கியப் படைப்புக்களைத் தேடிப் படிப்பதிலும், கலை இலக்கிய கூட்டங்களில் செல்வதிலும் தணியாத ஆர்வம் கொண்ட அவர், தான் ரசித்த படைப்புக்களை தன் நாட்குறிப்பேட்டில் குறித்து வைக்கும் பழக்கம் கொண்டவராக இருந்தார். அந்த ரசனையின் பயனாக மல்லிகை,ஆசிரியர் டொமினிக் ஜீவா , தெளிவத்தை ஜோசப் , பிரேம்ஜி ,ஆகியோரின் உறவும், இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம், போன்ற இயக்கத்தின் தொடர்பும்,அவரது கொழும்பு வியாபார நிறுவனத்தின் மேல் மாடியை கலை இலக்கிய கூட்டங்கள் நடக்கின்ற ஒரு மண்டபமாக உருவாக்க வைத்ததோடு, துரைவி பதிப்பகத்தை உருவாக்கும் சிந்தனையை அவருக்குள் வித்திட்ட வைத்து, அவர் வாழும் காலத்தில். ஒன்பது நூற்களை குறிப்பாக, மலையக தமிழ் இலக்கியத்தின் பங்களிப்பு செய்யும் வகையிலான நூற்களை துரைவி பதிப்பகத்தின் மூலம் அவரை வெளியிட்ட வைத்தது.

அத்தோடு, ஈழத்து தமிழ் கலை இலக்கிய உலகின் சாதனையாக ராஜ ஸ்ரீகாந்தன் தினகரன் பத்திரிகையின் ஆசிரியராக கடமையாற்றிய காலகட்டத்தில், தினகரனின் அனுசரணையுடன் ரூபா 101,000.00 பரிசுத் தொகையாக அவரால் வழங்கப்படும் வகையிலான தேசிய ரீதியான சிறுகதைப் போட்டியை அறிவிக்க வைத்தார். ஆனால் அப்போட்டியின் முடிவுகள் வெளிவரும் முன்னதாகவே 1998 டிசம்பர் 21 அன்று துரை விஸ்வநாதன் காலமானார். அவரது மறைவுக்குப் பின்- அதே ஆண்டு அவரது புதல்வர் ராஜ் பிரசாத்தின் முயற்சியினால், அப்போட்டியில் தெரிவு செய்யப்பட்ட சிறுகதைகள் துரைவி பதிப்பக வெளியிடாக பரிசு பெற்ற சிறுகதைகள் எனும் தலைப்பில் நூலாக தினகரன் நிறுவனத்தின் மண்டபத்தில் நடந்த முதல் நூல் வெளியீட்டு விழா எனும் பெருமையை பெற்று வெளியிடப்பட்டது.

விருதுகள்,கௌரவங்கள்

[தொகு]
  • 1996 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இலங்கை அரசினால் சமாதான நீதவான் நியமனம்.
  • 1997 ஆம் ஆண்டு இலங்கை மத்திய மாகாண சாகித்திய விழாவில் கலாசார அமைச்சு விருது.
  • 1997 ஆம் ஆண்டு கண்டி மக்கள் கலை இலக்கிய ஒன்றியம் இலக்கியக்காவலர் எனும் பட்டத்தினை அளித்து கௌரவித்தது.

துரைவி பற்றிய நூல்

[தொகு]
  • துரைவி நினைவலைகள் (கட்டுரைத் தொகுப்பு, துரைவி பதிப்பகம், 2001)

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=துரை_விஸ்வநாதன்&oldid=3208577" இலிருந்து மீள்விக்கப்பட்டது