திறந்த அமைப்பு இடைப்பிணைப்புப் படிமம்
திறந்த அமைப்பு இடைப்பிணைப்புப் படிமம் (Open Systems Interconnection) என்பது பல்வேறு கணினிகள், வலையமைப்புக் கருவிகள், தொலைத் தொடர்பு சாதனங்களுக்கு இடையேயான பலமட்டத் தொடர்பியலை (multilayered communication) வரையறுக்கும் விதமாக உண்டாக்கப்பட்ட படிமம். இதனை சர்வதேச தரநிர்ணய நிறுவனத்தின் (International Organization for Standardization, ISO) திறந்த அமைப்பு இடைப்பிணைப்புப் படிம உருவாக்கல் அமைப்பு ஏற்படுத்தியது. இந்த படிமத்தின் அடிப்படையில் வலையமைக்கும் கட்டமைப்பு பின்வரும் ஏழு மட்டங்களாக அல்லது அடுக்குகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது:
- பயன்முறை மட்டம் (Application)
- தரவுக் குறிப்பீட்டு மட்டம் (Presentation)
- அமர்வு மட்டம் (Session)
- போக்குவரத்து மட்டம் (Transport)
- வலையமைப்பு மட்டம் (Network)
- தரவு இணைப்பு மட்டம் (Data Link)
- பருநிலை மட்டம் (Physical Layer)
இந்த மட்டங்கள் அல்லது அடுக்குகள், பல்வேறு கணினி மற்றும் வலையமைப்புச் சாதனங்கள், தங்களுக்கிடையே தொடர்பு கொள்ளப் பயன்படுத்தும் செயற்பாடுகளை வகைப்படுத்திப் பெறப்பட்டவையாகும். ஆகவே, ஒவ்வொரு மட்டமும், குறிப்பிட்ட சில செயல்களைச் செய்யும் செயற்பாடுகள் எனக் கொள்ளலாம். ஒரு மட்டத்திலுள்ள செயற்பாடுகள், அதன் கீழ் மட்டத்திலிருந்து சேவைகளைப் பெறவும், அதன் மேல் மட்டத்திற்கானங சேவைகளைச் செய்து கொடுக்கவும் செய்கின்றன.
ஓ.ஸ்.ஐ. மட்டங்களை பற்றிய விளக்கம்
[தொகு]1.பருநிலை மட்டம்
[தொகு]பருநிலை மட்டம் (Physical Layer) என்பது சாதனங்களை இணைக்கும் எல்லா வன்பொருள்களையும் அவற்றின் மின்னியல் மற்றும் இயற்பியல் பற்றிய குறிப்பீடுகளை வரையறுக்கிறது.
2.தரவு இணைப்பு மட்டம்
[தொகு]தரவு இணைப்பு மட்டம் (Data Link Layer) வலையமைப்பு சாதனங்களுக்கு இடையே தரவினை இடம் மாற்றத் தேவையான செயல்பாடுகளையும் செய்முறைகளையும் அளிக்கிறது. மேலும் இது பருநிலை மட்டத்தில் ஏற்படும் பிழைகளை கண்டுபிடித்துச் சரியாக்குகிறது.
3.வலையமைப்பு மட்டம்
[தொகு]வலையமைப்பு மட்டம் (Network Layer) மாறும் நீளமுள்ள தரவுத் தொடர்களை தொடங்கும் இடத்திலிருந்து அடையும் இடத்திற்கு மாற்றுகிறது. இவ்வாறு செய்யும் நேரத்தில் மேலேயுள்ள போக்குவரத்து மட்டத்தின் கோரிக்கையான செயல்பாட்டுத் தரத்தையும் வழங்குகிறது.
4.போக்குவரத்து மட்டம்
[தொகு]போக்குவரத்து மட்டம் (Transport Layer) பயனர்களுக்கு இடையில் தரவினை பின்னணியில் இடம் மாற்றுகிறது; மேல் மட்டங்களுக்கு நம்பகமான தரவு மாற்றுச் சேவையை வழங்குகிறது. இணைப்பின் நம்பகத்தன்மையை சீர்படுத்த பாய்மை கட்டுப்படுத்தல், துண்டாக்குதல், துண்டுகளை ஒன்றுபடுத்தல், பிழை கட்டுப்படுத்தல் ஆகியவற்றைச் செய்கிறது.
5.அமர்வு மட்டம்
[தொகு]அமர்வு மட்டம் (Session Layer) கணினிகளுக்கு இடையிலான பேச்சுக்கள் மற்றும் இணைப்புகள் அல்லது அமர்வுகளை கட்டுப்படுத்துகிறது.
6.தரவுக் குறிப்பீட்டு மட்டம்
[தொகு]தரவுக் குறிப்பீட்டு மட்டம் (Presentation Layer), பயன்முறை மட்டத்திலுள்ளவற்றுக்கு விருப்பமான சிண்டக்ஸ் மற்றும் சிமேன்டிக்ஸ் உபயோகிக்கும் சூழலை உருவாக்கித் தருகிறது.
7.பயன்முறை மட்டம்
[தொகு]பயன்முறை மட்டம் (Application Layer) பயன்பாட்டு நிரலிகளுக்கு தேவையான பயன்பாட்டுச் செயல்களைச் செய்கிறது; தரவுக் குறிப்பீட்டு மட்டம் கோரிக்கைகளையும் விடுக்கிறது. இந்த மட்டம் பயன்பாட்டு நிரலிகளுக்குதான் சேவைகளை வழங்குகிறது; பயனர்களுக்கு அல்ல.
சுருக்கம்
[தொகு]ஓ.ஸ்.ஐ. மாதிரி | |||
---|---|---|---|
தரவு அலகு | மட்டம் | செயல்பாடு | |
கணினி மட்டங்கள் |
தரவு | 7. பயன்பாட்டுச் செயலி | பயன்பாட்டு செயலிக்கு வலையமைத்தல் |
6. தரவுக் குறிப்பீட்டு | தரவுக் குறிப்பீடும் என்கிரிப்ஷனும் | ||
5. அமர்வு | கணினிகளுக்கிடையிலான தொடர்பு | ||
துண்டம் | 4. போக்குவரத்து | ஒரு முனையிலிருந்து மற்ற முனைவரை இணைப்பும் நம்பகத்தன்மையும்(TCP) | |
ஊடக மட்டங்கள் |
பேக்கட்/டேட்டாகிரம் | 3. வலையமைப்பு | பாதை தீர்மானித்தலும் முறைமை முகவரியமைத்தலும் (IP) |
தொகுப்பு | 2. தரவு இணைப்பு | பருநிலை முகவரியாக்கல் (MAC & LLC) | |
இருமம் | 1. பருநிலை | ஊடகம், சைகை மற்றும் இரும செலுத்தல் |
வெளி இணைப்புகள்
[தொகு]- Open System Interconnection Protocols பரணிடப்பட்டது 2008-05-16 at the வந்தவழி இயந்திரம்