உள்ளடக்கத்துக்குச் செல்

தா. யோகானந்த்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தா. யோகானந்த்
பிறப்புதாசரி யோகானந்த்
16 ஏப்ரல் 1922
சென்னை, பிரித்தானிய இந்தியா
இறப்பு23 நவம்பர் 2006(2006-11-23) (அகவை 84)
சென்னை, தமிழ்நாடு
பணிஇயக்குநர் (திரைப்படம்)
வாழ்க்கைத்
துணை
அனுமயம்மா

தாசரி யோகானந்த் (Dasari Yoganand) (16 ஏப்ரல் 1922 – 23 நவம்பர் 2006) ஓர் தென்னிந்தியத் திரைப்பட இயக்குனராவார்.[1][2]

ஆரம்ப கால வாழ்க்கை

[தொகு]

யோகானந்த் பிரித்தானிய இந்தியாவில் சென்னையில் வெங்கட தாஸ், இலட்சுமி பாய் ஆகியோரின் மூன்று குழந்தைகளில் இளையவராகப் பிறந்தார். மச்சிலிப்பட்டினத்தைச் சேர்ந்த நவாப் இரசா அலிகானின் கீழ் தோட்ட மேலாளராக வெங்கட தாஸ் இருந்தார். இவரது மூத்த சகோதரர் கோட்டீசுவர ராவ் ஒரு ஒலி பொறியாளர். மச்சிலிப்பட்டினத்தில் புகைப்பட உபகரண தொழிலதிபர் டி.சுப்பய்யா யோகானந்தை தத்தெடுத்தார். பின்னர், இவர் புகைப்படைக் கலைஞரானார். நாடகங்களை இயக்குவதிலும் இயக்குவதிலும் ஆர்வம் காட்டிய இவர், மச்சிலிப்பட்டினத்தில் துங்கள சலபதி ராவ், யாதவள்ளி நாகேசுவர ராவ் ஆகியோரை தொடர்பு கொண்டார். பின்னர், பெங்களூருக்குச் சென்று, கதிரியக்கவியலில் பயிற்சி பெற்றார், 1939இல் தனது தந்தைக்கு உதவ சென்னை திரும்பினார். தனது தந்தையின் மரணத்திற்கு பிறகு, ஜித்தின் பானர்ஜியின் "நியூடோன்" என்ற அரங்கத்தில் சேர்ந்தார். பின்னர் பிரபல ஒளிப்பதிவாளர் எம். ஏ. இரகுமானுடன் பணியாற்றினார் .

இவர் 1942ஆம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றுள்ளார். இந்திய சுதந்திர இயக்கத்தில் பங்கேற்ற இவர், பெரிய காங்கிரசு தலைவர்களான இராசகோபாலாச்சாரி, த. பிரகாசம் , புளுசு சாம்பமூர்த்தி ஆகியோரிடம் நெருக்கமாக இருந்தார்,[3]

திரைப்பட வாழ்க்கை

[தொகு]

குடவள்ளி இராமபிரம்மம், எல். வி. பிரசாத் ஆகியோருடன் இணைந்து பணியாற்றியுள்ளார். எல்.வி.பிரசாத் இயக்கிய "சம்சாரம்" என்ற தெலுங்குப் படத்தில் பணியாற்றியுள்ளார். 1943 ஆம் ஆண்டில், "மாயலோகம்" படத்திற்காக மாணிக்கம் என்பவருடன் சேர்ந்து ஒரு படத் தொகுப்பாளராக இருந்தார். மேலும் குடவள்ளி இராமபிரம்மத்தின் உதவி இயக்குநராகவும் பணியாற்றினார். சேலத்தில் இலங்கா சத்யம் என்பவர் இயக்கிய "பக்த துளசிதாஸ்" என்ற படத்துக்காக மூன்று ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

இவரது முதல் படம் இலீனா செட்டியார் என்பவரின் இயக்கத்தில் 1953இல் வெளிவந்த "அம்மலக்கலு" (தெலுங்கு) , " மருமகள்" (தமிழ்) என்பதாகும். தனது இயக்கத்தில் 1956இல் வெளிவந்த மதுரை வீரன் உட்பட பல வெற்றிகளைத் தந்த "கிருஷ்ணா பிக்சர்ஸ்" என்ற நிறுவனத்தின் வெளித் தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார்.

இவருடன் பணிபுரிந்த என். டி. ராமராவ் "தோடு தொங்கலு" (1954) படத்தை இயக்கும் வாய்ப்பை வழங்கினார் . படத்துக்கான கதையையும் இவர் எழுதினார். இந்த படத்திற்கு இந்தியக் குடியரசுத் தலைவரின் தகுதி சான்றிதழும், சீனத் திரைப்பட விழாவில் ஒரு விருது உட்பட பல விருதுகள் கிடைத்தன. என். டி. ஆர் தனது அடுத்த படமான "ஜெயசிம்மா" வில் இவருக்கு இரண்டாவது வாய்ப்பு அளித்தார். இது ஒரு மிகப் பெரிய வெற்ற்ப் படமாக மாறியது.

தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் சுமார் 50 படங்களை இயக்கியுள்ளார்; அவற்றில் என்.டி.ராமராவ் மட்டும் 17 படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இவரது வெற்றிப் படங்களாக தோடு தொங்களு, இலவேல்பு, கோடலு திட்ட்ன காப்பரம், உம்மாடி குடும்பம், முகநோமு,, ஜெய் ஜவான், வேமுலவாடா பீம கவி, கதாநாயகுனி கதா, டப்புக்கு லோகம் தோசம், ஜெயசிமா, வாடே வீடு, திக்கா சங்கரையா, பெல்லி சந்தடி போன்றவை அடங்கும். இவர் தெலுங்கிலும், தமிழிலும் பணியாற்றிய என். டி. ராமராவ், அக்கினேனி நாகேஸ்வர ராவ், இரேலங்கி வெங்கட ராமையா, பானுமதி ராமகிருஷ்ணா, சாவித்��ி, பத்மினி, வைஜெயந்திமாலா, ஜெ. ஜெயலலிதா, பண்டரிபாய், சரோஜாதேவி, தேவிகா, சிவாஜி கணேசன், ம. கோ. இராமச்சந்திரன், ஜெமினி கணேசன், எஸ். எஸ். ராஜேந்திரன், மா. நா. நம்பியார், கே. பாலாஜி போன்ற அனைத்து முன்னணி நட்சத்திரங்களையும் இயக்கும் விதத்தில் தனிப்பட்ட வேறுபாடு இருந்தது.

இறப்பு

[தொகு]

இவருக்கு அனுமயம்மா என்ற மனைவியும், இரண்டு மகன்களும், மூன்று மகளும் உள்ளனர். இவர், மாரடைப்பு காரணமாக சென்னையில் காலமானார்.[4]

விருதுகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Remembering D. Yoganand". Telugu Cinema. 2009-08-10. Archived from the original on 14 October 2009. பார்க்கப்பட்ட நாள் 2010-05-16.
  2. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/patriot-and-an-idealist/article3231514.ece
  3. Guy, Randor (2006-12-01). "Patriot and an idealist". தி இந்து. Archived from the original on 2008-03-10. பார்க்கப்பட்ட நாள் 2010-05-16.
  4. "Director Yoganand is no more". IndiaGlitz. 2006-11-28. பார்க்கப்பட்ட நாள் 2010-05-16.
  5. "2nd National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 23 August 2011.
  6. "8th National Film Awards". இந்திய சர்வதேச திரைப்பட விழா. Archived from the original on 12 October 2013. பார்க்கப்பட்ட நாள் 7 September 2011.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தா._யோகானந்த்&oldid=3954133" இலிருந்து மீள்விக்கப்பட்டது