தாடிக்கொம்பு
தாடிக்கொம்பு | |
---|---|
பேரூராட்சி | |
ஆள்கூறுகள்: 10°27′59″N 77°59′23″E / 10.46639°N 77.98972°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திண்டுக்கல் |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 18,838 |
மொழிகள் | |
• அலுவல் மொழி | தமிழ் மொழி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
இணையதளம் | www.townpanchayat.in/thadicombu |
தாடிக்கொம்பு (ஆங்கிலம்:Thadikombu), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் மேற்கு வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இவ்வூரில் சௌந்தரராஜ பெருமாள் கோயில் உள்ளது. மற்றும் மறவப்பட்டியில் *சந்தியாகப்பர் திருத்தலம்* உள்ளது.
அமைவிடம்
[தொகு]தாடிக்கொம்பு பேரூராட்சி திண்டுக்கல்லிருந்து 11 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே அகரம் பேரூராட்சி 3 கிமீ; வடக்கில் வேடசந்தூர் 18 கிமீ தொலைவில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
[தொகு]25 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 47 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி ஆத்தூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [1]
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4,777 வீடுகளும், 18,838 மக்கள்தொகையும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 76.3% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1,022. பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு, 949 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 5,203 மற்றும் 0 ஆகவுள்ளனர். [2]
பெயர்க்காரணம்
[தொகு]நாயக்கர் மன்னர்கள் காலத்தில் உருவான பிரசித்தி பெற்ற ஊர் தாடிக்கொம்பு. தாடி என்றால் பனைமரம் , கும்பு என்றால் கூட்டம் என்று பெயர் படுவதால் இவ்வூருக்கு தாடிக்கொம்பு எனப்பெயராயிற்று. தாடி கும்ப்பு (பனைமரக்கூட்டம்) என்பது மருவி தாடிக்கொம்பு என்றாகியது. மிகவும் சிறப்பு வாய்ந்த விஜயநகர பேரரசின் அச்சுதேவராயரால் கட்டப்பட்ட பெருமாள் கோவில் இவ்வூருக்கு சிறப்பு செய்கின்றது .
ஆதாரங்கள்
[தொகு]