உள்ளடக்கத்துக்குச் செல்

டோலக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டோலக்
டோலக்
டோலக்
Percussion instrument
வகைப்பாடுதட்டி வாசித்தல்
ஓர்ன்பாஸ்டெல்-சாக்ஸ் வகை211.22.2 Barrel drums
(கருவியின் உடல் பகுதி பீப்பாய் வடிவில் இருக்கும். இதில் இரண்டு பக்கங்களிலும் யன்படுத்தக்கூடிய சவ்வுகள் உள்ளன)
தொடர்புள்ள கருவிகள்

டோலாக் (Dholak) என்பது இரண்டு பக்கமும் அடிக்கப்படும் நாட்டுப்புற தாள வாத்தியமாகும். இது பொதுவாக சுமார் 45  செமீ நீளமும், 27 செ.மீ. அகலம் கொண்டதாகும். இது கவ்வாலி, கீர்த்தனை, லாவணி, பாங்ரா, கானா பாடல்கள் போன்ற கலைநிகழ்ச்சிகளில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. ஒருபக்கம் அடர்த்தியான குறைந்த த்வனி ஓசையையும், இன்னொரு பக்கம் உச்ச ஸ்தாயிலும் வாசிக்கப்படும் தோல் இசைக் கருவியாகும். இரண்டு பக்கங்களிலிலும் இருக்கும் தோலும் உருளை வடிவ மரத்தின் இரண்டு பக்கங்களிலும் முடுக்கப்படிருக்கும். சுருதியை கூட்டி குறைக்க முடியாது. டோலக்கின் ஒரு பக்கம் சிறியதாகவும் மறுபக்கம் சற்று பெரியதாகவும் இருக்கும். சிறியபகுதி ஆட்டுத் தோலாலும், பெரிய பகுதி எருமைத் தோலாலும் முடப்பட்டிருக்கும். தோல் வாத்தியத்தின் இரு பக்கங்களிலும் கட்டபட்ட நூலை இருக்குவதன் வாழிலாக கணீரென்று தாளம் கிடைக்கும். இதன் உருளைப் பகுதி சிசே மரம் அல்லது மா மரத்தால் செய்யப்படுகிறது. இலங்கையில் தென்னை மரத்திலும் செய்யப்படுகிறது.[1] பெரிய தோல் பகுதி, குச்சியைக் கொண்டு அடித்து வாசிக்கப்படுகிறது. சிறிய பகுதி இடது கையால் வாசிக்கப்படுகிறது.

பஞ்சாப்பில் வாசிக்கப்படும் டோல் உருவில் மிகப் பெரியது. டோல்கி என்னும் வாத்தியம் சிறியது. இரண்டுக்கும் இடைப்பட்ட அளவில் இருப்பது டோலக் ஆகும்.

குறிப்புகள்

[தொகு]

 

  1. எல். ரேணுகாதேவி (2018). தி இந்து பொங்கல் மலர் 2018. சென்னை: இந்து தமிழ். p. 179.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டோலக்&oldid=3278969" இலிருந்து மீள்விக்கப்பட்டது