உள்ளடக்கத்துக்குச் செல்

ஜி. எம். சையத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குலாம் முர்தாசா சையத் ( Ghulam Murtaza Syed சிந்தி : غلام مرتضي z, z 17   ஜனவரி   1904 - 25 ஏப்ரல் 1995),[1] ஜிஎம் சையத் என பரவலாக அறியப்படும் இவர் அரசியல்வாதி, எழுத்தாளர் ஆவார்.[2] நவீன சிந்தி தேசியவாதத்தின் நிறுவியவர்களில் ஒருவராக இவர் கருதப்படுகிறார்.[3]

இவர் தனது 16 ஆம் வயது முதல் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 1920 ஆம் ஆண்டு மார்ச் 17 ஆம் தேதி தனது சொந்த ஊரான சானில் கிலாபத் மாநாட்டை ஏற்பாடு செய்ததன் மூலம் இவரின் அரசியல் வாழ்க்கை துவ6ங்கியது.1948 இல் பாகிஸ்தான் உருவாக்கப்பட்ட பின்னர் இவர் முதல் அரசியல் கைதியாக ஆனார்.[4][5] அமைதியான மத சகவாழ்வு, மதச்சார்பின்மை, சிந்தி தேசியவாதம் ஆகியவற்றை முன்வைக்கும் சூஃபி சித்தாந்தங்களின் அரசியல் செயல்பாட்டை இவர் வலியுறுத்தினார் .மேலும் சிந்துதேஷ் இயக்கத்திற்கு அடித்தளம் அமைத்தார்.[6] சிந்து- விரோத கொள்கைகளை எதிர்த்ததற்காக இவர் தனது வாழ்க்கையின் சுமார் முப்பது ஆண்டுகள் சிறைவாசம் மற்றும் வீட்டுக் கைது போன்றவற்றினை சந்தித்தார்.[7] ஏப்ரல் 26, 1995 அன்று கராச்சியில் வீட்டுக் காவலில் இருந்த போது இவர் இறந்தார்.

ஆரம்ப கால வாழ்க்கை

[தொகு]

குழந்தைப் பருவம்: 1904–15

[தொகு]

ஜி.எம். சையத் 1904 ஜனவரி 17 அன்று சான் நகரில் சிந்து மாகாணத்தில் சதாத் குடும்பத்தில் பிறந்தார். 1905 நவம்பர் 1 ஆம் தேதி குடும்ப சண்டை காரணமாக அவரது தந்தை சையத் முகமது ஷா காஸ்மி கொல்லப்பட்டபோது சையத் ஒரு குழந்தையாக இருந்தார் . அவரது தந்தையின் மரணத்திற்குப் பிறகு, சையத் குடும்பத்தில் ஒரே ஆண் குழந்தையாக இருந்தார். எனவே 1906 ஆம் ஆண்டில் பிரித்தானிய இந்தியப் பேரரசு அவரது குடும்பச் சொத்தை எடுத்துக்கொண்டது . பின் அவரது குடும்பத்திற்கு வார்டு நீதிமன்றத்தால் மாத ஓய்வூதியம் வழங்கப்பட்டது. ஆரம்ப பள்ளியினை தனது ஆறு வது வயதில் நிறைவு செய்தார்.இவர் குடும்பத்தில் ஒரே ஆண் வாரிசு என்பதால் அவரது குடும்ப மோதலிலிருந்தும் பகைமையிலிருந்தும் அவரைப் பாதுகாப்பதற்காக அவரது குடும்பத்தைச் சேர்ந்த பெரியவர்கள் அவரை வீட்டுக் கல்வி பயில வைக்க முடிவு செய்தனர். பின் வீட்டுக் கல்வியில் அவருக்கு பாரசீக மற்றும் ஆங்கிலம் கற்பிக்கப்பட்டது.[8]

ஏ. வி. பள்ளி

[தொகு]

1920 களின் முற்பகுதியில், சையத் தனது கிராமமான சானில் ஆங்கிலோ-வெர்னாகுலர் (ஏ.வி) பள்ளியைத் திறந்தார், அங்கு சில மொழி வகுப்புகளுக்கான கல்வியினை இலவசமாக வழங்கினர். ஏ.வி ஸ்கூல் ஆங்கில மொழியுடன் சிந்தி கல்வியினையும் வழங்கியது. மேலும் அரபு, பிரஞ்சு மற்றும் பாரசீக மொழிகளின் போன்ற மொழிகளையும் இந்த பள்ளி விருப்பத் தேர்வாக வழங்கியது. பிரபல சிந்தி கல்வியாளர் இப்ராஹிம் ஜோயோவும் இந்தப் பள்ளியில் தான் பயின்றார் [9]

நூற்பட்டியல்

[தொகு]

ஜனம் குசாரியம் ஜின் சீன் , தயார் தில் தஸ்தான்-இ- முஹாப்ட் மற்றும் சிந்து ஜ சூர்மா ஆகிய நூல்களை சிந்தியிலும் சிந்து பேசுகிறார் , புதிய சிந்திற்கான போராட்டம் , மதம் மற்றும் யதார்த்தம் , ஷா லத்தீப்பின் செய்தி மற்றும் நேஷன் இன் செயின்ஸ் ஆகிய நூல்களை இவர் ஆங்கிலத்திலும் வெளியிட்டார்.

இறப்பு

[தொகு]

ஏப்ரல் 26, 1995 அன்று கராச்சியில் வீட்டுக் காவலில் இருந்த போது இவர் இறந்தார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Zaffar, Junejo (19 January 2015). "G M Syed: Remembering a visionary". tribune.com.pk (in English). The Express Tribune. பார்க்கப்பட்ட நாள் 23 May 2018.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  2. Google, Books. "author G.M Syed". பார்க்கப்பட்ட நாள் 23 May 2018. {{cite web}}: |last= has generic name (help)
  3. Farhan Hanif Siddiqi (4 May 2012). The Politics of Ethnicity in Pakistan: The Baloch, Sindhi and Mohajir Ethnic Movements. Routledge. பார்க்கப்பட்ட நாள் 23 May 2018.
  4. World Sindh, congress. "Statement by Dr. Haleem Uddin Bhatti, Information Secretary, World Sindhi Congress". worldsindhicongress.org. World Sindhi Congress. Archived from the original on 7 July 2018. பார்க்கப்பட்ட நாள் 23 May 2018.
  5. KHADIM, SOOMRO (20 January 2009). "G.M. Syed remembered". dawn.com. dawn. பார்க்கப்பட்ட நாள் 22 May 2018.
  6. Nadeem F. Paracha (10 September 2015). "Making of the Sindhi identity: From Shah Latif to GM Syed to Bhutto". dawn.com (in English). Dawn. பார்க்கப்பட்ட நாள் 23 May 2018.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  7. Naseer, Memon (17 January 2013). "Relevance of GM Syed today". tribune.com.pk (in English). The Express Tribune. பார்க்கப்பட்ட நாள் 23 May 2018. he remained interned for over 30 years{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  8. "G.M Syed". storyofpakistan.com. Story of Pakistan. பார்க்கப்பட்ட நாள் 23 May 2018.
  9. "Learning education from Joyo | TNS - The News on Sunday". Tns.thenews.com.pk. 2016-03-27. Archived from the original on 2019-04-12. பார்க்கப்பட்ட நாள் 2016-03-31.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜி._எம்._சையத்&oldid=3573097" இலிருந்து மீள்விக்கப்பட்டது