ஜார்ஜ் ஈடன்
ஜார்ஜ் ஈடன் ஆக்லாந்து கோமகன் | |
---|---|
இந்தியத் தலைமை ஆளுநர் | |
பதவியில் 4 மார்ச் 1836 – 28 பெப்ரவரி 1842 | |
ஆட்சியாளர்கள் | நான்காம் வில்லியம் விக்டோரியா |
பிரதமர் | வில்லியம் லாம், சர் இராபர்ட் பீல் |
முன்னையவர் | சர் சார்லசு மெட்கால்ஃபு பதில் |
பின்னவர் | எட்வர்ட் லோ |
வணிக வாரியத்தின் தலைவர் | |
பதவியில் 22 நவம்பர் 1830 – 5 சூன் 1834 | |
ஆட்சியாளர் | நான்காம் வில்லியம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | பெக்கன்காம், கெண்ட், இங்கிலாந்து | 25 ஆகத்து 1784
இறப்பு | சனவரி 1, 1849 ஆம்ப்சயர், இங்கிலாந்து | (அகவை 64)
தேசியம் | பிரித்தானியர் |
அரசியல் கட்சி | விக் |
பெற்றோர் | வில்லியம் ஈடன், எலனோர் எலியட் |
முன்னாள் கல்லூரி | கிறைஸ்டு சர்ச், ஆக்சுபோர்டு |
தொழில் | வழக்கறிஞர், அரசியல்வாதி |
ஜார்ஜ் ஈடன், ஆக்லாந்தின் முதல் ஏர்ல் (George Eden, 1st Earl of Auckland, 25 ஆகத்து 1784 – 1 சனவரி 1849) என்பவர் ஆங்கில விக் கட்சி அரசியல்வாதியும், காலனித்துவ நிர்வாகியும் ஆவார். இவர் 1836 மற்றும் 1842 க்கு இடையில் இந்தியத் தலைமை ஆளுநராக பணியாற்றினார். நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்து நகரத்துடன் நார்த்லாந்து ஓக்லாந்து, வைகாடோ, பிளென்டி விரிகுடா, க��ஸ்போர்ன் ஆகியவற்றின் தற்போதைய பகுதிகளை உள்ளடக்கிய ஆக்லாந்து மாகாணத்துக்கு இவரது பெயரிடப்பட்டது.
ஆக்லாந்து பிரபு சீக்கியப் பேரரசின் மகாராஜா ரஞ்சித் சிங் மற்றும் ஆப்கானித்தானின் ஷா ஷுஜா ஆகியோருடன் 1838 சூனில் முத்தரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
பின்னணியும் கல்வியும்
[தொகு]இவர் வில்லியம் ஈடன், முதலாவது பரோன் ஆக்லாந்து மற்றும் சர் கில்பர்ட் எலியட்டின் மகள் எலினோர், 3 வது பரோனெட் இணையரின் இரண்டாவது மகனாக கெண்டின் பெக்கன்காமில் பிறந்தார். இவரது சகோதரி பயண எழுத்தாளர் எமிலி ஈடன் ஆவார். அவர் தன் சகோதரருடன் இந்தியாவுக்குச் சென்று அங்கு தனது அனுபவங்கள் குறித்து எழுதினார். இவர் ஏடன் மற்றும் கிறிஸ்ட் சர்ச், ஆக்ஸ்போர்டில் கல்வி பயின்றார், மேலும் 1809 இல் சட்டம் பயின்றார் . 1810 இல் இவரது அண்ணன் வில்லியம் ஈடன் தேம்சில் மூழ்கி இறந்த பிறகு இவர் பேரோனியின் அரசியல் வாரிசாகத் தெரிந்தெடுக்கபட்டார்.
அரசியல் வாழ்க்கை, 1810-1836
[தொகு]1810 ஆம் ஆண்டில் ஆக்லாந்து உட்ஸ்டாக் தொகுதியில் இருந்து பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கபட்டார் (அவரது அண்ணன் வில்லியமுக்குப் பிறகு). இவர் 1812 வரையிலும், மீண்டும் 1813 மற்றும் 1814 இக்கு இடையிலும் அந்த பதவியை வகித்தார். கடைசி ஆண்டில் இவர் தன் தந்தைக்குப் பிறகு பேரோனியில் பதவியேற்றார். மேலும் சீர்திருத்தக் கட்சியை ஆதரித்து பிரபுக்கள் அவையில் உறுப்பினராக அமர்ந்தார். 1830 ஆம் ஆண்டில் இவர் வர்த்தக வாரியத்தின் தலைவரானார் மேலும் பிரபுக்கள் அவையின்துணை சபாநாயகர்களில் ஒருவராக பணியாற்றினார்.
இவர் கிரேவின் கீழ் அட்மிரால்டியின் முதல் பிரபுவாக இருந்தார். பின்னர் 1834 இல் மெல்போர்ன் பிரபுவாகவும் 1835 இல் மீண்டும் மெல்போர்னின் பிரபுவாகவும் பதவி வகித்தார். கிழக்கிந்தியத் தீவுகளுக்குப் பயணம் செய்ய வில்லியம் ஆப்சனுக்கு இவர் உதவி செய்தார். ஆப்சன் 1840 இல் நியூசிலாந்தின் ஆக்லாந்தின் புதிய நகரத்திற்கு இவரின் பெயரிட்டு தன் நன்றிக் கடனை வெளிப்படுத்தினார். ஆக்லாந்தில் உள்ள மவுண்ட் ஈடன், ஈடன் நகரம், நியூ சவுத் வேல்ஸ் மற்றும் ஆக்லாந்து கவுண்டி, நியூ சவுத் வேல்ஸ் ஆகியவையும் இவரின் பெயரால் அழைக்கபடுகிறது.
இந்தியாவின் தலைமை ஆளுநர், 1836–1842
[தொகு]1836 ஆம் ஆண்டு ஆக்லாந்து பிரபு இந்தியத் தலைமை ஆளுநராக நியமிக்கப்பட்டார். இவரது தனிச் செயலாளராக இருந்தவர் ஜான் ரசல் கொல்வின், வடமேற்கு மாகாணங்களின் துணைநிலை ஆளுநராக உயர்ந்து, அவரது மகனுக்கு ஆக்லாந்து கொல்வின் என்று பெயரிட்டார். சட்டமன்ற உறுப்பினராக, இவர் குறிப்பாக பூர்வீக பள்ளிகளை மேம்படுத்துவதற்கும், இந்தியாவின் வணிகத் துறையின் விரிவாக்கத்திற்கும் தன்னை அர்ப்பணித்தார்.
ஆனால் 1838 இல் ஆப்கானித்தானில் ஏற்பட்ட சிக்கல்கள் இந்த பணிகளுக்கு இடையூறாக வந்துசேர்ந்தன. உருசியாவும் பாரசீகமும் ஆப்கானித்தானத்தில் காலூன்ற முயல்வதாகக் கருதி, ஆக்லந்து பிரபு ஆப்கானித்தானத்தில் தலையிடத் தொடங்கினார். மேலும் 1838 ஆம் ஆண்டு அக்டோபர் முதல் நாள் சிம்லாவில் சிம்லா அறிக்கையை வெளியிட்டார். அப்போது ஆப்கானிய மன்னராக இருந்த டாஸ்ட் முகம்மது ஆங்கிலேயர்களுக்கு இணங்கிவராததால் ஆப்கானிஸ்தானத்தின்மீது படையெடுக்க ஆக்லந்து தீர்மானித்தார். தோஸ்த்து முகம்மது ஓடி விட்டாராயினும், ஆப்கானித்தான் போர்த்தொடர் இறுதியில் பேரழிவில் முடிந்தது. இதனால் இந்தியாவின் தலைமை ஆளுநர் பதவியை எல்லன்பரோ பிரபுவிடம் ஒப்படைத்துவிட்டு அடுத்த ஆண்டு இங்கிலாந்து திரும்பினார்.
அரசியல் வாழ்க்கை, 1842-1849
[தொகு]1846 ஆம் ஆண்டில் இவர் மீண்டும் அட்மிரால்டியின் முதல் பிரபு ஆனார். இந்த முறை லார்ட் ஜான் ரஸ்ஸல் கீழ் பணியாற்றினார். இவர் இறக்கும்வரை அதாவது மூன்று ஆண்டுகள் இந்தப் பதவியில் இருந்தார்.
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]ஆக்லாந்து பிரபு 1849 புத்தாண்டு நாளன்று இறந்தார். [1] இவர் இறந்தபோது வயது 64. ஆக்லாந்து பிரபு திருமணமாகாதவர். இவருக்குப் பிறகு இவரது தம்பி ராபர்ட் பேரோனியில் அரசியல் வாரிசாக வந்தார்.
அண்மையில் வெளியிடப்பட்ட (2013) வரலாற்றில், ஆக்லாந்து பிரபு தோற்றத்தில் அவர் தனது வயதை விட மெலிந்து இளமையாக இருந்தார். அட்மிரால்டியின் மரியாதைக்குரிய முதல் பிரபுவான, ஆக்லாந்து பிரபு திறமையான ஊழியர்களை பெரிதும் நம்பியிருந்தார். ஆனால் அவரது உறுதியற்ற ஆளுமை மற்றும் இந்திய வரலாறு மற்றும் பண்பாட்டின் மீதான அக்கறையின்மை ஆகியவை அவர் கவர்னர் ஜெனரலாக இருந்த காலத்தில் பேரழிவுகரமான முடிவுகளை எடுக்க வழிவகுத்தது. [2]
குறிப்புகள்
[தொகு]- ↑ letter from his Admiralty assistant John Dunds
- ↑ Dalrymple, William (January 2014). Return of a King. p. 109. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4088-3159-5.