உள்ளடக்கத்துக்குச் செல்

சிரித்தால் ரசிப்பேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிரித்தால் ரசிப்பேன்
இயக்கம்வி. சந்திரசேகரன்
தயாரிப்புவி. சந்திரசேகரன்
கதைவி. சந்திரசேகரன்
இசைஇனியவன்
நடிப்புசத்யா
சுனு லட்சுமி
எம். எசு. பாசுகர்
தியாகு
மனோபாலா
கல்பனா
லட்சுமி ராமகிருஷ்ணன்
யோகி பாபு
ஒளிப்பதிவுரமேஷ் அழகிரி
படத்தொகுப்புசுரேஷ் அர்ஸ்
கலையகம்சி.பி.ஆர்.ஹச் பிலிம்ஸ்
வெளியீடுசூலை 3, 2009 (2009-07-03)
ஓட்டம்140 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சிரித்தால் ரசிப்பேன் 2009 ஆம் ஆண்டு சத்யா மற்றும் சுனு லட்சுமி நடிப்பில், இனியவன் இசையில், வி. சந்திரசேகரன் எழுதி, இயக்கி, தயாரித்து வெளியான தமிழ் திரைப்படம்[1][2][3].

கதைச்சுருக்கம்

[தொகு]

பணக்காரரான பூபதி பாண்டியன் (எம். எஸ். பாஸ்கர்) மிகவும் கண்டிப்பான குடும்பத்தலைவர். அவரது மனைவி லட்சுமி (லட்சுமி ராமகிருஷ்ணன்) நோய்வாய்ப்பட்டு இருக்கிறாள். அவரது வீட்டில் இரண்டு மகன்கள் ராமா (மயில்சாமி) மற்றும் கிருஷ்ணா (லொள்ளு சபா பாலாஜி), இரண்டு மகள்கள் மற்றும் இரண்டு மருமகள்கள் உள்ளனர். அவரது சகோதரி ஈஸ்வரி (கல்பனா), விக்ரமாதித்தனைக் (தியாகு) காதல் திருமணம் செய்து வீட்டைவிட்டு வெளியேறியதிலிருந்து காதல் திருமணங்களை வெறுப்பவர். அவருடைய இளைய மகள் திவ்யா (சுனு லட்சுமி) அந்த வீட்டில் மேலாளராக பணிபுரிபவரின் (மனோபாலா) மகன் சித்துவைக் (சத்யா) காதலிக்கிறாள். தினமும் இரவு யாருக்கும் தெரியாமல் காதலர்கள் சந்தித்துக் கொள்கின்றனர். விக்ரமாதித்யனின் மகன் புருசோத்தமன் (சத்யன்) தன் மகளுக்கு இடையூறு அளிப்பதைக் கண்டிக்கும் பூபதி பாண்டியன் இதுகுறித்து விக்ரமாதித்யனையும் எச்சரிக்கிறார். இதனால் ஆத்திரம் கொள்ளும் விக்ரமாதித்யன் தன் மகனுக்கே திவ்யாவை மணம் முடிப்பதாக சபதம் செய்கிறார்.

ஒரு நாள் திவ்யாவிற்கு சித்து எழுதிய காதல் கடிதம் பூபதி பாண்டியன் கையில் கிடைக்கிறது. அந்தக் கடிதத்தில் பெயர் இல்லாததால் அது புருசோத்தமன் எழுதியது என்று நினைக்கிறார். தன் மகளுக்கு பாதுகாவலர்களை நியமிக்கிறார். திவ்யாவும் சித்துவும் காதலிக்கும் விடயம் அவருக்குத் தெரியவருகிறது. எனவே தன் நண்பன் தங்கராஜின் (சண்முகராஜன்) மகனான ராஜேந்திரனுக்கு (கோவை பாபு) திவ்யாவைத் திருமணம் செய்ய முடிவுசெய்கிறார்கள். வெளிநாட்டிலிருந்து தான் திருமணம் செய்துகொண்ட மனைவியோடு திரும்பும் ராஜேந்திரனைக் கண்டு அதிர்ச்சி அடையும் தங்கராஜ் அந்தப்பெண்ணை வீட்டை விட்டு வெளியேற்றுகிறார். திவ்யாவைத் திருமணம் செய்தால் பூபதிபாண்டியனின் சொத்துக்கள் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறி ராஜேந்திரன் மனதை மாற்றுகிறார். பூபதி பாண்டியனின் மூத்த மகள் விஜி (அன்சிபா ஹாஸன்) ��ிவ்யாவின் பாதுகாவலர்களில் ஒருவனான ரவுடி மாஜாவைத் திருமணம் செய்து வீட்டைவிட்டு வெளியேறுகிறாள்.

திவ்யாவுக்கும் ராஜேந்திரனுக்கும் நடக்கும் திருமணத்தை நிறுத்த புருசோத்தமன் ஒருபுறமும், சித்து ஒருபுறமும் முயற்சிக்கின்றனர். சித்து-திவ்யா காதலைப் புரிந்துகொள்ளும் புருசோத்தமன் அவர்கள் திருமணம் செய்ய உதவுகிறான். தங்கராஜ் மற்றும் ராஜேந்திரன் இருவரும் தன் சொத்துக்களை அடைவதற்காக திட்டமிடுவதை அறிந்துகொள்கிறார் பூபதிபாண்டியன். தன் தவறுகளை உணர்ந்து திருந்தும் பூபதிபாண்டியன் சித்து-திவ்யா திருமணத்தை நடத்திவைக்கிறார்.

நடிகர்கள்

[தொகு]

இசை

[தொகு]

படத்தின் இசையமைப்பாளர் இனியவன். பாடலாசிரியர்கள் பா. விஜய், சினேகன், யுகபாரதி மற்றும் அண்ணாமலை[4].

வ.எண் பாடல் பாடகர்கள் காலநீளம்
1 கண்ணடிச்ச ரோசாப்பூ பென்னி தயாள், சுசித்ரா 5:07
2 செக்க செக்க செவந்தவளே பிரசன்னா, சின்மயி 5:14
3 எனக்குள்ளே இருப்பவள் ஹரிஹரன் , சித்ரா 6:12
4 பொண்டாட்டியோ வப்பாட்டியோ இனியவன், அனுராதா ஸ்ரீராம் 4:40
5 ஆகாயமே இங்குவந்து கார்த்திக், சைந்தவி 4:51
6 எனக்குள்ளே இருப்பவன் ஹரிஹரன் , சித்ரா 6:03

மேற்கோள்கள்

[தொகு]
  1. "சிரித்தால் ரசிப்பேன்".
  2. "சிரித்தால் ரசிப்பேன்". Archived from the original on 2009-08-07. பார்க்கப்பட்ட நாள் 2019-03-09.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  3. "சிரித்தால் ரசிப்பேன்". Archived from the original on 2018-04-27. பார்க்கப்பட்ட நாள் 2019-03-09.
  4. "பாடல்கள்". Archived from the original on 2022-03-16. பார்க்கப்பட்ட நாள் 2019-03-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிரித்தால்_ரசிப்பேன்&oldid=4146547" இலிருந்து மீள்விக்கப்பட்டது