சாலிகிராமம், சென்னை
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
சாலிகிராமம் (ஆங்கில மொழி: Saligramam) இந்திய மாநகர் சென்னையின் மேற்குப் பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதி. வடபழநி மற்றும் விருகம்பாக்கத்தை அடுத்து அமைந்துள்ளது. இப்பகுதி திரைப்படத் தொழிலுக்குப் புகழ் பெற்றது. பிரசாத் திரைப்பிடிப்புத் தளம், அருணாச்சலம் திரைப்பிடிப்புத் தளம் மற்றும் இன்னபிற திரைப்பட தயாரிப்பு, தயாரிப்புக்குப் பிந்தைய வேலைகளுக்கான நிறுவனங்கள் ஆகியன இங்கு நிறைந்துள்ளன. பல திரைப்படக் கலைஞர்களும் தொழிலாளர்களும் இங்கு வசிக்கின்றனர். சூரியா மருத்துவமனை, பரணி மருத்துவமனை போன்ற முன்னணி மருத்துவமனைகள் இங்குள்ளன. அருணாச்சலம் சாலையில் பல வங்கிகள்,வணிக வளாகங்கள்,கடைகள் நிறைந்துள்ளன.