கொப்பள் மாவட்டம்
Appearance
கொப்பள் மாவட்டம்
ಕೊಪ್ಪಳ ಜಿಲ್ಲೆ | |
---|---|
மாவட்டம் | |
நாடு | இந்தியா |
State | கருநாடகம் |
தலைமையிடம் | கொப்பள் |
வட்டம் (தாலுகா) | 7 |
பரப்பளவு | |
• மொத்தம் | 5,570 km2 (2,150 sq mi) |
மக்கள���தொகை (2011) | |
• மொத்தம் | 13,89,920 |
• அடர்த்தி | 166/km2 (430/sq mi) |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
தொலைபேசி குறியீடு | + 91 (0)8539 |
வாகனப் பதிவு | KA-37 |
இணையதளம் | https://koppal.nic.in/en/ |
கொப்பள் மாவட்டம் இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 27 நிர்வாக மாவட்டங்களுள் ஒன்று. இதன் தலைமையகம் கொப்பளில் உள்ளது. கொப்பள் நகரம் மாநிலத் தலைநகரான பெங்களூருக்கு வடமேற்கே 351 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
மாவட்ட நிர்வாகம்
[தொகு]கொப்பள் மாவட்டம் 7 வருவாய் வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது[1]. அவைகள்:
- கொப்பள் வட்டம்
- கங்காவதி வட்டம்
- குஷ்தகி வட்டம்
- யெல்புர்கா வட்டம்
- குக்கனூர் வட்டம்
- கனககிரி வட்டம்
- கரத்தாகி வட்டம்
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, கொப்பள் மாவட்டத்தின் மக்கள் தொகை 1,389,920 ஆகும். அதில் ஆண்கள் 699,926 மற்றும் பெண்கள் 689,994 உள்ளனர்.பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 983 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 68.09% ஆகும். இம்மாவட்ட மக்களில் இந்து சமயத்தினர் 87.63 %, இசுலாமியர் 11.64 % , கிறித்தவர்கள் 0.29 % மற்றும் பிறர் 0.44% ஆக உள்ளனர்.[2]