கொண்டலாத்தி
கொண்டலாத்தி | |
---|---|
யூரேசியா கொண்டலாத்தி மாட்ரிட், ஸ்பெயின் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | புசெரோடிபார்மிசு
|
குடும்பம்: | உப்பிடே
|
பேரினம்: | உபுபா லின்னேயஸ், 1758
|
மாதிரி இனம் | |
உபுபா எபோசு (யூரேசியா கொண்டலாத்தி) லின்னேயஸ், 1758 | |
சிற்றினம் | |
|
கொண்டலாத்தி (Hoopoe) ஹூபோசு (/ˈhuːpoʊ/) என்பது ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் ஐரோப்பா முழுவதும் காணப்படும் வண்ணமயமான பறவைகள் ஆகும். இவற்றின் தனித்துவமான "கிரீடம்" இறகுகள் குறிப்பிடத்தக்கது. மூன்று உயிருள்ள மற்றும் ஒரு அழிந்துபோன சிற்றினம் என நான்கு சிற்றினங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் பல ஆண்டுகளாக தற்போதுள்ள அனைத்து சிற்றினங்களும் ஒரே சிற்றினமாக - உபுபா எபோப்சு குறிப்பிடப்பட்டன. ஆனால் சில வகைபிரித்தல் வல்லுநர்கள் இன்னும் மூன்று சிற்றினங்களையும் ஒத்தவையாகக் கருதுகின்றனர். சிலர் ஆப்பிரிக்க மற்றும் யூரேசிய கொண்டலாத்தியினை ஒன்றாகவும் மடகாசுகர் கொண்டலாத்தியினை தனிச் சிற்றினமாகவும் பிரிக்கின்றனர். யூரேசிய கொண்ட்லாத்தி இதன் வரம்பில் பொதுவானது மற்றும் அதிக எண்ணிக்கையினை கொண்டுள்ளது. எனவே இதனை செம்பட்டியலில் அச்சுறுத்தப்பட்ட உயிரினங்களில் தீவாய்ப்பு கவலை குறைந்த இனமாக மதிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், மேற்கு ஐரோப்பாவில் இவற்றின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.[1] மாறாக, இதன் எண்ணிக்கை தெற்கு சினாய், ஷர்ம் எல்-ஷேக் முனையில் அதிகரித்து வருகிறது. எண்ணிக்கை அதிகமான கூடு கட்டும் இணைகள் ஆண்டு முழுவதும் வசிக்கின்றன.
வகைப்பாட்டியல்
[தொகு]உபுபா பேரினமானது 1758ஆம் ஆண்டில் சுவீடன் இயற்கையியலாளர் கரோலஸ் லின்னேயஸால் சிஸ்டமா நேச்சுரேயின் பத்தாவது பதிப்பில் அறிமுகப்படுத்தப்பட்டது.[2] மாதிரி இனமாக ஐரோவாசிய கொண்டலாத்தி (உபுபா எபோப்சு) உள்ளது.[3] உபுபா மற்றும் ἔποψ (epops) முறையே கொண்டலாத்தியின் இலத்தீன் மற்றும் பண்டைய கிரேக்கப் பெயர்கள் ஆகும். இவை இரண்டும், ஆங்கிலப் பெயரைப் போலவே, பறவையின் ஓசையினை அடிப்படையாகக் கொண்ட வடிவங்கள்.[4][5]
கொண்டலாத்தி கோராசிபார்மிசு இனக்குழுவில் வகைப்படுத்தப்பட்டது. இதில் மீன்கொத்திகள், பஞ்சுருட்டான் மற்றும் பனங்காடைகள் ஆகியவை அடங்கும்.[6] கொண்டலாத்தி மற்றும் மர கொண்டலாத்திகளுக்கிடையேயான நெருங்கிய உறவு, இவற்றின் எந்தியுருகளின் பகிரப்பட்ட மற்றும் தனித்துவமான தன்மையால் ஆதரிக்கப்படுகிறது.[7] சிப்லி-அஹ்ல்கிஸ்ட் வகைபிரிப்பில், கொண்டலாத்திகோராசிபார்மிசிலிருந்து உப்புபிபார்ம்சு என்ற தனி வரிசையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. சில வகைப்பாட்டியலாளர்கள் உப்புபிபார்ம்களிலும் மர கொண்டலாத்தியினை வைக்கின்றனர்.[8] இப்போது ஏற்பட்டுள்ள ஒருமித்த கருத்து என்னவென்றால், கொண்டலாத்தி மற்றும் மர கொண்டலாத்தி இரண்டும் புசெரோடிபார்ம்சில் உள்ள இருவாட்சிகளுடன் சேர்ந்தவை ஆகும்.[9]
கொண்டலாத்திப் புதைபடிவ பதிவு மிகவும் முழுமையடையாது, ஆரம்பக்கால புதைபடிவமானது குவாட்டர்னரியிலிருந்து வந்தது. இவற்றின் உறவுகளின் புதைபடிவ பதிவுகள் பழையவை. புதைபடிவ மர கொண்டலாத்தி மியோசீனுக்கு முந்தயவை மற்றும் அழிந்துபோன தொடர்புடைய குடும்பமான , ஈசீனிலிருந்து வந்த மெசெலிரிரிசோரிடேவை சார்ந்தது.[8]
சிற்றினங்கள்
[தொகு]முன்னர் ஒரே சிற்றினமாகக் கருதப்பட்ட கொண்டலாத்தி தற்பொழுது மூன்று தனித்தனி சிற்றினங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது: யூரேசியன் கொண்டலாத்தி, மடகாசுகர் கொண்ட்லாத்தி மற்றும் ஆப்பிரிக்கக் கொண்டலாத்தி. ஏற்றுக்கொள்ளப்பட்ட தனி சிற்றினமான செயிண்ட் எலனா கொண்டலாத்தி, செயிண்ட் எலனா தீவில் வாழ்ந்தது. ஆனால் 16ஆம் நூற்றாண்டில் அழிந்து போனது. இது அறிமுகப்படுத்தப்பட்ட பிற சிற்றினங்கள் காரணமாக இருக்கலாம்.[10]
லின்னேயஸ் 1758-ல், தனது சிசுடமா நேச்சுரேயில் உபுபா பேரினத்தை உருவாக்கினார். நீண்ட வளைந்த அலகுகளைக் கொண்ட மற்ற மூன்று சிற்றினங்களும் இதில் அடங்கும்:[11]
- உ. எரெமிட்டா (இப்போது ஜெரோண்டிகசு எரெமிட்டா), வடக்கு வழுக்கை கரண்டிவாயன்
- உ. பைரோகோராக்சு (இப்போது பைரோகோராக்சு பைரோகோராக்சு), சிவப்பு-அலகு சோஃப்
- உ. பாராடிசிகா
முன்பு, பெரிய கொண்டலாத்தி-வானம்பாடி இந்த பேரினத்தின் உறுப்பினராகக் கருதப்பட்டது (உபுபா அலாடிப்சு என).[12]
பரவியுள்ள இனங்கள்
[தொகு]படம் | அறிவியல் பெயர் | பொதுப் பெயர் | காணப்படும் இடங்கள் |
---|---|---|---|
உபுபா ஆப்பிரிக்கானா | ஆப்பிரிக்க கொண்டலாத்தி | தென்னாப்பிரிக்கா, லெசோதோ, ஈஸ்வதினி, நமீபியா, போட்ஸ்வானா, ஜிம்பாப்வே, மொசாம்பிக், அங்கோலா, சாம்பியா, மலாவி, தான்சானியா, சவுதி அரேபியா மற்றும் காங்கோ ஜனநாயகக் குடியரசின் தெற்குப் பகுதி | |
உபுபா எப்பப்சு | ஐரோவாசிய கொண்டலாத்தி | ஐரோப்பா, ஆசியா மற்றும் வட ஆப்பிரிக்கா மற்றும் வடக்கு துணை-சஹாரா ஆப்பிரிக்கா | |
உபுபா மார்ஜினாட்டா | மடகாசுகர் கொண்டலாத்தி | மடகாசுகர் |
பரவலும் வாழ்விடமும்
[தொகு]கொண்டலாத்தி ஐரோப்பா, ஆசியா மற்றும் வட ஆப்பிரிக்கா, துணை-சஹாரா ஆப்பிரிக்கா மற்றும் மடகாசுகர் ஆகிய நாடுகளில் பரவலாக காணப்படுகின்றன. பெரும்பாலான ஐரோப்பிய மற்றும் வட ஆசியப் பறவைகள் குளிர்காலத்தில் வெப்ப மண்டலங்களுக்கு வலசை போகின்றன.[13] இதற்கு நேர்மாறாக, ஆப்பிரிக்கப் பறவைகள் இடம் பெயர்வதில்லை. இந்த சிற்றினம் அலாஸ்காவில் அலைந்து திரிந்து காணப்படும்;[14] உ. யூ. சதுரேட்டா 1975-ல் யுகோன் வடிநிலத்தில் பதிவு செய்யப்பட்டது. கொண்டலாத்திகள் அவற்றின் ஐரோப்பிய வரம்பிற்கு வடக்கே இனப்பெருக்கம் செய்வதாக அறியப்படுகிறது. தெற்கு இங்கிலாந்தில் வெப்பமான, வறண்ட கோடைக் காலங்களில் கிடைக்கும் ஏராளமான வெட்டுக்கிளிகள் மற்றும் ஒத்த பூச்சிகளை உண்ணுகின்றன. இருப்பினும் 1980களின் முற்பகுதியில் வடக்கு ஐரோப்பியக் கொண்டலாத்தி எண்ணிக்கை சரிவானது, காலநிலை மாற்றங்கள் காரணமாக இருக்கலாம்.[15]
கொண்டலாத்தி இதன் வாழ்விடத்தில் இரண்டு அடிப்படைத் தேவைகளைக் கொண்டுள்ளது: வெற்று அல்லது குறைவான எண்ணிக்கையிலான தாவரங்கள் உடைய நிலம், தீவனம் மற்றும் செங்குத்து மேற்பரப்புகள் (மரங்கள், பாறைகள் அல்லது சுவர்கள், கூடு பெட்டிகள், வைக்கோல் மற்றும் கைவிடப்பட்ட ஓடைகள்). கூடு கட்டும் இந்தத் தேவைகள் பரந்த அளவிலான சுற்றுச்சூழல் அமைப்புகளில் வழங்கப்படலாம். இதன் விளைவாகக் கொண்டலாத்தி ஹீத்லேண்ட், மரங்கள் நிறைந்த புல்வெளிகள், சவன்னாக்கள் மற்றும் புல்வெளிகள் மற்றும் வனப் புல்வெளிகள் போன்ற பரந்த அளவிலான வாழ்விடங்களில் வாழ்கிறது. மடகாசுகர் சிற்றினங்கள் அதிக அடர்ந்த முதன்மைக் காடுகளைப் பயன்படுத்துகின்றன. பல்வேறு விவசாய நோக்கங்களுக்காக மனிதர்களால் இயற்கையான வாழ்விடங்களை மாற்றியமைத்ததால், ஆலிவ் தோப்புகள், பழத்தோட்டங்கள், திராட்சைத் தோட்டங்கள், பூங்கா மற்றும் விவசாய நிலங்களில் இவை பொதுவாகக் காணப்படுவது வழக்கமாகிவிட்டன. இருப்பினும் இவை தீவிரமாக விவசாயம் செய்யப்படும் பகுதிகளில் குறைந்து வருகின்றன. தெற்கு ஐரோப்பா மற்றும் ஆசியாவில் வேட்டையாடுதல் கவலைக்குரியதாக உள்ளது.
இலங்கை மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைகள் போன்ற சில பகுதிகளில் மழைக்காலங்களில் கொண்டலாத்தி வலசை போகின்றன.[16] இமயமலையின் குறுக்கே இடம்பெயர்ந்து சுமார் 6,400 m (21,000 அடி) உயரங்களில் காணப்படுவது பதிவு செய்யப்பட்டுள்ளது.
நடத்தையும் சூழலியலும்
[தொகு]தற்காப்பு தோரணையாக நீண்ட காலமாகக் கருதப்பட்ட நிலையில், கொண்டலாத்திகள் தங்கள் இறக்கைகள் மற்றும் வாலை தரையில் கீழே விரித்து, தலையை மேலே சாய்த்து சூரிய குளியலில் ஈடுபடுகின்றன. இவை பெரும்பாலும் தங்கள் இறக்கைகளை மடித்து பாதியிலேயே முனங்குகின்றன.[17] இவை தூசி மற்றும் மணல் குளியல் செய்வதிலும் மகிழ்ச்சி அடைகிறது. பெரியவர்கள் இனப்பெருக்க காலத்திற்குப் பிறகு தங்கள் கருகலைத் தொடங்கி குளிர்காலத்திற்கு இடம்பெயர்ந்த பிறகும் தொடருகின்றது.
உணவு
[தொகு]கொண்டலாத்தியின் உணவு பெரும்பாலும் பூச்சிகளாகும். இருப்பினும் சிறிய ஊர்வன, தவளைகள் மற்றும் விதைகள் மற்றும் பெர்ரி போன்ற தாவர உணவினையும் சில நேரங்களில் எடுத்துக் கொள்கின்றன. இவை தனியாக இரை தேடுபவை. பொதுவாகத் தரையில் உண்ணும். மிகவும் அரிதாகவே ஆகாயத்தில் இரையினை உண்ணும். இவற்றின் வலுவான மற்றும் வட்டமான இறக்கைகள் இவற்றை வேகமாகப் பூச்சிகளைப் பின்தொடர்வதில் உதவுகின்றன. பூச்சிகளின் இளம் உயிரிகள், கூட்டுப்புழு, மற்றும் மோல் கிரிகெட்டுகளை வலிமையான கால்களால் பிரித்தெடுத்து அல்லது தோண்டி எடுக்கின்றன. கொண்டலாத்தி, மேற்பரப்பில் உள்ள பூச்சிகளை உண்ணும். இலைகளின் குவியல்களைக் கிளறியும் பெரிய கற்களைத் திருப்பியும் பட்டைகளை உரித்தும் அலகுகளின் உதவியால் உணவினைச் சேகரிக்கின்றன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Hoopoe Bird (Upupa epops) - Fun Facts with Pictures - Birds Fact" (in அமெரிக்க ஆங்கிலம்). 2022-02-14. பார்க்கப்பட்ட நாள் 2022-02-16.
- ↑ Linnaeus, Carl (1758). Systema Naturae per regna tria naturae, secundum classes, ordines, genera, species, cum characteribus, differentiis, synonymis, locis (in Latin). Vol. 1 (10th ed.). Holmiae (Stockholm): Laurentii Salvii. p. xxx.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ Check-List of Birds of the World. Vol. 5. Cambridge, Massachusetts: Harvard University Press. 1945. p. 247.
- ↑ Jobling, James A. (2010). The Helm Dictionary of Scientific Bird Names. London: A&C Black.
- ↑ "Hoopoe". (Online). ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். (Subscription or participating institution membership required.)
- ↑ Hackett, Shannon J. (2008). "A Phylogenomic Study of Birds Reveals Their Evolutionary History". Science 320 (1763): 1763–1768. doi:10.1126/science.1157704. பப்மெட்:18583609. Bibcode: 2008Sci...320.1763H.
- ↑ Feduccia, Alan (1975). "The Bony Stapes in the Upupidae and Phoeniculidae: Evidence for Common Ancestry". The Wilson Bulletin 87 (3): 416–417. http://sora.unm.edu/sites/default/files/journals/wilson/v087n03/p0416-p0417.pdf.
- ↑ 8.0 8.1 Mayr, Gerald (2000). "Tiny Hoopoe-like birds from the Middle Eocene of Messel (Germany)". Auk 117 (4): 964–970. doi:10.1642/0004-8038(2000)117[0964:THLBFT]2.0.CO;2. http://sora.unm.edu/node/26294.
- ↑ Gill, Frank; Donsker, David. Todies, motmots, bee-eaters, hoopoes, wood hoopoes & hornbills. doi:10.14344/IOC.ML.7.1. http://www.worldbirdnames.org/bow/todies/. பார்த்த நாள்: 31 March 2017.
- ↑
{{cite book}}
: Empty citation (help) - ↑ Linnaeus, C (1758). Systema naturae per regna tria naturae, secundum classes, ordines, genera, species, cum characteribus, differentiis, synonymis, locis. Vol. Tomus I (Editio decima, reformata. ed.). Holmiae. (Laurentii Salvii). pp. 117–118.
- ↑ "Alaemon alaudipes - Avibase". avibase.bsc-eoc.org. பார்க்கப்பட்ட நாள் 2016-11-17.
- ↑ Reichlin, Thomas; Michael Schaub; Myles H. M. Menz; Murielle Mermod; Patricia Portner; Raphaël Arlettaz; Lukas Jenni (2008). "Migration patterns of Hoopoe Upupa epops and Wryneck Jynx torquilla: an analysis of European ring recoveries". Journal of Ornithology 150 (2): 393. doi:10.1007/s10336-008-0361-3. http://www.iee.unibe.ch/cb/content/e7117/e7118/e8739/e8786/e9751/Reichlin_JOrn2009.pdf.
- ↑ Dau, Christian; Paniyak, Jack (1977). "Hoopoe, A First Record for North America". Auk 94 (3): 601. http://sora.unm.edu/sites/default/files/journals/auk/v094n03/p0601-p0601.pdf.
- ↑ Pforr, Manfred; Alfred Limbrunner (1982). The Breeding Birds of Europe 2: A Photographic Handbook. London: Croom and Helm. p. 82. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7099-2020-2.
- ↑ Champion-Jones, RN (1937). "The Ceylon Hoopoe (Upupa epops ceylonensis Reichb.)". J. Bombay Nat. Hist. Soc. 39 (2): 418.
- ↑ "Hoopoe".. (2003). Firefly Books. 382. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-55297-777-3.
வெளி இணைப்புகள்
[தொகு]- தென் ஆப்பிரிக்க பறவைகளின் அட்லஸில் "ஹூபோ"
- முதுமை மற்றும் பாலினம் (PDF; 5.3 MB) ஜேவியர் பிளாஸ்கோ-ஜுமேட்டா & கெர்ட்-மைக்கேல் ஹெய்ன்ஸே
- இணைய பறவைகள் சேகரிப்பில் ஹூப்போ வீடியோக்கள், புகைப்படங்கள் மற்றும் ஒலிகள்