உள்ளடக்கத்துக்குச் செல்

கே. எஸ். விஜயகுமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கே. எஸ். விஜயகுமார் (K. S. Vijayakumar) ஒரு தமிழக அரசியல்வாதியும், சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் ஊத்துக்கோட்டை வட்டம், எல்லாபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட மஞ்சங்கரணை கிராமத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவர் 2016 ஆம் ஆண்டு கும்மிடிப்பூண்டி சட்டமன்றத் தொகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிட்டு தமிழக சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] இவர் 2001 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த கே. சுதர்சனம் என்பவரின் மகன் ஆவார். முன்னதாக இவர் 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலிலும், 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் வெற்றி பெற்றவர் ஆவார்.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "TN Elections 2016". Malaimalar. Archived from the original on 2019-03-22. பார்க்கப்பட்ட நாள் 22 மார்ச் 2019. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "Tamil Nadu Legislative Assembly, 15 th Assembly members". Tamil Nadu Legislative Assembly. Archived from the original on 2016-08-22. பார்க்கப்பட்ட நாள் 22 மார்ச் 2019. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "TN Elections 2016". Malaimalar. Archived from the original on 2019-03-22. பார்க்கப்பட்ட நாள் 22 மார்ச் 2019. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._எஸ்._விஜயகுமார்&oldid=3943454" இலிருந்து மீள்விக்கப்பட்டது