கெர்லப் விஞ்சி
பிறப்பு | கோபனாவன், டென்மார்க் | 19 மார்ச்சு 1857
---|---|
இறப்பு | 10 நவம்பர் 1923 கெல்லரப், டென்மார்க் | (அகவை 66)
தேசியம் | டென்மார்க் |
துறை | விலங்கியல், தொல்லுயிரியல் |
ICZN abbrev. | The standard author abbreviation Winge may be used to indicate this person in citing a zoological name. |
அடால்ப் கெர்லப் விஞ்சி (19 மார்ச் 1857 - 10 நவம்பர் 1923) என்பவர் டேனிய நாட்டு விலங்கியல் நிபுணர் ஆவார்.
வாழ்க்கை
[தொகு]விஞ்சி இளம் மாணவராக இருந்தபோது, தனது சகோதரர் ஓலுப்புடன் இணைந்து, சிறிய பாலூட்டிகள், குறிப்பாக சிற்றெலி, மூஞ்சூறு மற்றும் பூச்சியினை உண்ணக்கூடிய விலங்குகள் குறித்த தகவல்களைச் சேகரிக்க ஆர்வமாக இருந்தார். இவர் பாலூட்டிகளின் பல்வேறு வகைகளைப் படித்தார். பற்களின் மேடுகளில் உள்ள ஒற்றுமையினை இந்த விலங்குகளில் ஒப்பீடு செய்து கருத்தாக்கம் ஒன்றை உருவாக்கினார். இவர் 1885 முதல் கோபனாவன் பல்கலைக்கழகத்தில் உள்ள விலங்கியல் அருங்காட்சியகத்தில் பணியாற்றினார். இவரின் பங்களிப்பாக இவர் வரைந்த 75 படங்கள் தென் அமெரிக்காவின் அழிந்து வரும் விலங்கினங்கள் பற்றிய இ மியூசியோ லுண்டியின் உள்ளது. இது மூன்று தொகுதிகளாக வெளியிடப்பட்டது. டென்மார்க்கின் சுற்றுச்சூழல் தொடர்புடைய கழிவுகளில் காணப்பட்ட கிச்சன்-மிட்டென்சில் காணப்படும் விலங்கு எச்சங்களையும் ஆய்வு செய்தார்.[1][2]
சில ஆய்வாளர்களின் கூற்றுப்படி, விஞ்சி இலாமார்க் கோட்பாட்டியலாளர் என அறியபப்டுகிறார்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Anon. (1923). "Obituary". Nature 112 (2826): 946–947. doi:10.1038/112946b0. Bibcode: 1923Natur.112..946M.
- ↑ Böving, AG (1924). "Herluf Winge, 1857–1923". Journal of Mammalogy 5 (3): 196–199. doi:10.2307/1373288. https://archive.org/details/sim_journal-of-mammalogy_1924-08_5_3/page/196.
- ↑ Hansen, P (1902). Illustreret dansk Litteraturhistorie. Volume 3 (in Danish). Copenhagen: Gyldendals Forlag.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link)