உள்ளடக்கத்துக்குச் செல்

குலேபகாவலி (1955 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குலபகாவலி
இயக்கம்டி. ஆர். ராமண்ணா
தயாரிப்புடி. ஆர். ராமண்ணா
ஆர். ஆர். பிக்சர்ஸ்
இசைவிஸ்வநாதன்
ராமமூர்த்தி
நடிப்புஎம். ஜி. இராமச்சந்திரன்
சந்திரபாபு
ஏ. கருணாநிதி
கே. ஏ. தங்கவேலு
டி. ஆர். ராஜகுமாரி
ராஜசுலோச்சனா
ஜி. வரலட்சுமி
ஈ. வி. சரோஜா
வெளியீடுசூலை 29, 1955[1]
நீளம்14998 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

குலேபகாவலி 1955 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.டி. ஆர். ராமண்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. இராமச்சந்திரன், சந்திரபாபு மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

எம்.ஜி.ஆர் "பூரொப்பு" என்ற நாட்டின் மூன்று அரசகுமாரர்களுள் இளையவர். அவர்களது தந்தையான மன்னருக்குக் கண்பார்வை போய் அவதிப்படுகையில் "நகாவலி" எனும் நாட்டில் இருக்கும் "குலேப்" எனும் மலரைக் கொண்டு வந்து அவரது கண்களில் வைத்தால் கண்பார்வை தெரியும் என்று மருத்துவர் சொல்ல அதன்படி அம்மலரைக் கொண்டு வர எம்ஜியாரும் சகோதரர்களும் தனித்தனியே புறப்படுகின்றனர். வழியில் "லக்பேஷ்வா" எனும் பெயர் கொண்ட அழகிய ஒரு பெண் நடத்தும் சூதாட்ட விடுதி ஒன்றைக் கண்டு அதில் நடக்கும் "பகடை" ஆட்டத்தில் வென்றால் அப்பெண் தம் வசப்படுவாள் என அறிந்து ஆசையால் சூதாடி சகோதரர்கள் இருவரும் தங்களை அடிமைகளாக சூதாட்டத்தில் அப்பெண்ணிடம் தோற்று இழந்து விடுகின்றனர். அதன் பின்னர் அங்கே வரும் எம்ஜியார் அண்ணன்மார்களை அடிமைக் கோலத்தில் கண்டு மனம் வருந்தி அவர்களை விடுவிக்க வழி செய்வார்.[2]

சூதாட்டம் தொடர்பான காட்சிகளைத் தொகுத்து அவற்றை ஒரு பாடலுடன் ஒருங்கிணைத்து வழங்கியுள்ளார் இயக்குநர். டி.ஆர். ராஜகுமாரி லக்பேஷ்வாக நடிக்க, டணால் தங்கவேலு அவரது கூட்டாளியாக வரும் அரசகுமாரர்களை ஏமாற்றும் காட்சிகள் மிகவும் சுவாரசியமான விதத்தில் தொகுக்கப்பட்டுள்ளன.

இசை

[தொகு]

படத்திற���கு விஸ்வநாதன்-ராமமூர்த்தி அவர்கள் இசையமைத்தனர். பாடல் வரிகளை தஞ்சை ராமையாதாஸ் எழுதினார்.[3][4]

# பாடல்பாடகர்கள் நீளம்
1. "மயக்கும் மாலை"  ஜிக்கி, ஏ. எம். ராஜா 4:27
2. "ஞாபகமே நபி"  எஸ். சி. கிருஷ்ணன், நாகூர் அனிபா 2:51
3. "அச்சு நிமிர்ந்த வண்டி"  ஜே. பி. சந்திரபாபு, ஏ. ஜி. ரத்னமாலா 3:12
4. "வில்லேந்தும் வீரரேல்லாம்"  திருச்சி லோகநாதன், பி. லீலா, ஜி. கே. வெங்கடேசு 6:33
5. "மாய வலையில்"  டி. எம். சௌந்தரராஜன் 1:13
6. "வித்தார கள்ளியெல்லாம்"  டி. எம். சௌந்தரராஜன் 1:29
7. "கையை தொட்டதும்"  டி. எம். சௌந்தரராஜன், பி. லீலா 2:37
8. "நா சொக்கா போட்ட நவாபு"  ஜிக்கி 3:36
9. "ஆசையும் நேசமும்"  கே. ஜமுனா ராணி 3:37
10. "பகாவலி நாட்டிலே"  டி. எம். சௌந்தரராஜன் 3:47
11. "கண்ணாலே பேசும்"  ஜிக்கி 3:54
12. "அறிவுப் போட்டி" (வசனங்கள்)ம. கோ. இராமச்சந்திரன் 3:26

மேற்கோள்கள்

[தொகு]
  1. Film News Anandan (2004). Sadhanaigal Padaitha Thamizh Thiraipada Varalaru [Tamil film history and its achievements]. Chennai: Sivagami Publishers. Archived from the original on 3 April 2017. பார்க்கப்பட்ட நாள் 4 February 2022.
  2. Blast from the past - Gulebakavali (1955) - தி இந்து (ஆங்கிலம்) நாளிதழில் ராண்டார் கை எழுதிய கட்டுரை
  3. குலேபகாவலி (song book). RR Pictures. 1955.
  4. "Gulebakavali (1955)". Raaga.com. Archived from the original on 13 February 2010. பார்க்கப்பட்ட நாள் 7 April 2013.