குணாதித்தியர்
குணாதித்தியர் | |
---|---|
பணி | நூலாசிரியர் |
குணாதித்தியர் அல்லது குணாட்டியர் (Guṇāḍhya) பிராகிருத மொழியின் உட்பிரிவுகளில் ஒன்றான, வடமேற்கு இந்தியாவில் வாழும் பிசாச மக்கள் பேசும் பைசாசம் மொழியில், கிபி 7 அல்லது 8-ஆம் நூற்றாண்டில் பிரகத்கதை எனும் காவியத்தை எழுதியவர். தற்போது பிரகத்கதை (பெருங்கதை) நூல் கிடைக்கப்பெறவில்லை. ஆனால் தற்போது இதன் மறுவடிவங்கள் காஷ்மீர மொழியில் சேமேந்திரரின் பிரகத் கதாமஞ்சரி மற்றும் சோமதேவரின் கதா சரித்திர சாகரம் என இரு காவியங்களில் கிடைக்கிறது.[3]. குணாதித்தியரின் பிரகத்கதையை ஒட்டி, தமிழில், கொங்குவேளிர் எனும் சமணர் பெருங்கதை எனும் தலைப்பில் ஒரு நூலை இயற்றியுள்ளார்.
காலம்
[தொகு]குணாதித்தியர் தக்காணத்தில் சாதவாகனர் (கிமு 1ஆம் நூற்றாண்டு - கிபி மூன்றாம் நூற்றாண்டு) காலத்தில் புகழுடன் விளங்கிய கவிஞர். ஸ்கந்த புராணத்தின் நேபாள மகாத்மியப் பகுதியில் குணாதித்தியர் வட இந்தியாவின் மதுராவில் பிறந்தவர் என்றும், உஜ்ஜையின் மன்னரின் அரசவைக் கவிஞர் என்றும் கூறுகிறது.
தொடர்புகள்
[தொகு]விக்ரமாதித்தியன் தொடர்பான ஆரம்பக் குறிப்புகள் தொலைந்துபோன பிரகத்கதாவில் காணப்படுகிறது. விக்ரமாதித்யனின் பெரும் தாராள மனப்பான்மை, அசாத்திய வீரம் மற்றும் பிற குணங்களை குணாதித்தியர் விவரிக்கிறார். இவருடைய குணங்கள் சாதவாகன மன்னர் கௌதமிபுத்ர சதகர்ணிக்கு முன்னோடியான ஹலவாஹனாவாலும் அவரது கஹா சத்தசை யில் (Gaha Sattasai) குறிப்பிடப்பட்டுள்ளன. விக்ரமாதித்தியன் காலத்திற்கு அருகாமையில் குணாதித்திய���ும், ஹாலாவும் வாழ்ந்தனர்.[4]
வடமேற்கு இந்தியாவின் எல்லைப் பகுதியின் பொதுமக்களின் மொழியான பைசாசம் என்று அழைக்கப்படும், அதிகம் அறியப்படாத பிராகிருதம் மொழியின் வட்டார வழக்கில் குணாதித்தியர் பிரகத்கதை காவியத்தை எழுதினார்.[5]. கிபி எட்டாம் நூற்றாண்டில் தென்னிந்தியாவில் வாழ்ந்த சமஸ்கிருத கவிஞர் தண்டி பிரகத்கதையின் அடிப்படை முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறார். மேலும் அது உரைநடையில் எழுதப்பட்டதாகவும், ஜெயரதாவின் ஹரசரிதசிந்தாமணி என்று அறியப்பட்ட காஷ்மீரி மொழி பாடல்களால் பரிந்துரைக்கப்பட்ட கவிதை வடிவில் எழுதப்படவில்லை என்றும் கூறுகிறார்.[6]
பிரகத்கதை, மாவீரர்கள், அரசர்கள், கடவுள்கள், தேவதைகள் மற்றும் விலங்குகள் மற்றும் பறவைகள் பற்றிய கதைகளின் களஞ்சியமாக இருந்திருக்க வேண்டும். சேமேந்திராவின் "பிருஹத்கதமஞ்சரி", "லம்பகாஸ்" என்று அழைக்கப்படும் பதினெட்டு புத்தகங்களில் உள்ள மூலத்தின் உண்மையுள்ள சுருக்கமாக இருக்க வேண்டும். இது புத்தசுவாமியின் (Budhasvamin) "பிரகத் கதா சுலோக சங்கிரகா" எனும் நூலின் ஆரம்பப் பதிப்பாக இருந்திருக்க வேண்டும். இதன் முழுப் படைப்பும் கண்டுபிடிக்கப்படவில்லை.[7]
குணாதித்தியர் புகழ்பெற்ற வாழ்க்கை வாழ்ந்திருக்க வேண்டும்; அவர் ஒரு பல்துறை எழுத்தாளராகவும், இலக்கியக் கலையில் தேர்ச்சி பெற்றவராகவும் இருந்திருக்க வேண்டும். கதைகளை உருவாக்கும் 'பிரகத் கதை' ஒரு தெய்வீக தோற்றம் கொண்டது. அதன் தோற்றம் சோமதேவாவால் விவரிக்கப்படுகிறது. பிரகத்கதை சாதவாகன மன்னன் சாலிவாகனன் உடன் அடையாளம் காணப்பட்டதால், குணாதித்தியர் கிபி 7 அல்லது 8ஆம் நூற்றாண்டில் வாழ்ந்திருக்க வேண்டும். இவர் வியாசர் மற்றும் வால்மீகியைப் போல, கண்ணுக்குத் தெரியாத, எங்கும் வியாபித்திருக்கும் கதை சொல்பவரால் அல்ல, அவருடைய பார்வையில் பிரகத்கதை சொல்லப்பட்டது.[8]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Brihatkatha]
- ↑ Lacôte & Tabard 1923, ப. 22–25.
- ↑ Das 2005, ப. 104.
- ↑ Jain 1972, ப. 157.
- ↑ Kawthekar 1995, ப. 20.
- ↑ Keith 1993, ப. 266, 268.
- ↑ Raja 1962.
- ↑ Bhaṭṭa 1994, ப. xxiv.
உசாத்துணை
[தொகு]- Bhaṭṭa, Somadeva (1994). Kathasaritasagara. Penguin Books India. p. xxiv. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-14-024721-3.
- Das, Sisir Kumar (2005). A History of Indian Literature, 500-1399: From Courtly to the Popular. Sahitya Akademi. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-260-2171-0.
- Datta, Amaresh (1988). Encyclopaedia of Indian Literature. Sahitya Akademi. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-260-1194-0.
- Jain, Kailash Chand (1972). Malwa Through the Ages, from the Earliest Times to 1305 A.D. Motilal Banarsidass. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-0824-9.
- Kathasaritasagara. Penguin Books India. 1994. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-14-024721-3.
- Kawthekar, Prabhakar Narayan (1995). Bilhana. Sahitya Akademi. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7201-779-8.
- Keith, Arthur Berriedale (1993). A History of Sanskrit Literature. Motilal Banarsidass. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-1100-3.
- Lacôte, Felix; Tabard, A. M. (translator) (1923). Essay on Gunādhya and the Brhatkathā. Bangalore City: Bangalore Press.
{{cite book}}
:|first2=
has generic name (help) (reprint, from the Quarterly Journal of the Mythic Society, of Tabard's translation of Lacôte 1908: வார்ப்புரு:Internet Archive) - Raja, C. Kunhan (1962). Survey of Sanskrit Literature. Bharatiya Vidya Bhavan.
- Sircar, D. C. (1969). Ancient Malwa And The Vikramaditya Tradition. Munshiram Manoharlal. p. 108. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-812150348-8. Archived from the original on 17 June 2016. பார்க்கப்பட்ட நாள் 1 ஏப்ரல் 2022.
{{cite book}}
: Check date values in:|access-date=
(help); More than one of|archivedate=
and|archive-date=
specified (help); More than one of|archiveurl=
and|archive-url=
specified (help) - Srinivasachariar, M (1974). History of Classical Sanskrit Literature: Being an Elaborate Account of All Branches of Classical Sanskrit Literature, with Full Epigraphical and Archaeological Notes and References, an Introduction Dealing with Language, Philology, and Chronology, and Index of Authors & Works. Motilal Banarsidass. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-0284-1.
- Winternitz, Moriz (1985). History of Indian Literature. Motilal Banarsidass. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-0056-4.