காவேரிப்பட்டணம்
காவேரிப்பட்டணம் | |
ஆள்கூறு | 12°25′11″N 78°12′58″E / 12.4197404°N 78.216151°E |
நாடு | இந்தியா |
��ாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கிருஷ்ணகிரி |
வட்டம் | கிருஷ்ணகிரி |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | |
மக்கள் தொகை • அடர்த்தி |
15,006 (2011[update]) • 15,006/km2 (38,865/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு | 1 சதுர கிலோமீட்டர் (0.39 sq mi) |
காவேரிப்பட்டணம் (ஆங்கிலம்:Kaveripattanam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். காவேரிப்பட்டினம் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் M.சவுளுர் உள்ளது
அமைவிடம்
[தொகு]இப்பேரூராட்சி கிருஷ்ணகிரி - பாலக்கோடு செல்லும் சாலையில், கிருஷ்ணகிரியிலிருந்து 11 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகில் உள்ள தொடருந்து நிலையம் 21 கிமீ தொலைவில் உள்ள பாலக்கோட்டில் உள்ளது. காவேரிப்பட்டணம் பேரூராட்சிக்கு அருகில் கிழக்கே ஜோலார்பேட்டை 42 கிமீ; வடக்கில் கிருஷ்ணகிரி 11 கிமீ; தெற்கில் தர்மபுரி 33 கிமீ தொலைவில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
[தொகு]1 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 26 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி கிருஷ்ணகிரி (சட்டமன்றத் தொகுதி)க்கும், கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,721 வீடுகளும், 15,006 மக்கள்தொகையும் கொண்டது.[4]
கோட்டை
[தொகு]இந்த ஊரில் இயற்கை அரண் இல்லாத தரைக்கோட்டை ஒன்று இருந்தது. தற்போது கோட்டை இருந்த பகுதி அழிவுற்று அகழி மட்டும் தென்படுகிறது. கோட்டையில் சிவன் கோயிலும், பெருமாள் கோயிலும் இன்றும் உள்ளன. இக்கோட்டை ஐதர் அலி, திப்பு சுல்தானுடன் ஆங்கிலேயருக்கு நடைபெற்ற போர்களில் பெரும் பங்கு வகித்தது. கிருட்டிணகிரி, தருமபுரி மாவட���டங்களில் உள்ள பாராமகால் என்றழைக்கப்படும் பன்னிரண்டு கோட்டைகளில் இது ஒன்றாகும்.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ காவேரிப்பட்டணம் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Kaveripattinam Population Census 2011
- ↑ தகடூர் வரலாறும் பண்பாடும், இரா.இராமகிருட்டிணன்.பக் 308