உள்ளடக்கத்துக்குச் செல்

கவார் மும்தாஜ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கவார் மும்தாஜ் (Khawar Mumtaz பிறப்பு 29 ஜூன் 1945) ஒரு பாக்கித்தான் பெண்கள் உரிமை ஆர்வலர், எழுத்தாளர் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர் ஆவார். [1] இவர் 2013 முதல் 2019 வரை தொடர்ந்து இரண்டு முறை பெண்கள் நிலை (NCSW) தேசிய ஆணையத்தின் முன்னாள் தலைவராகப் பணியாற்றியுள்ளார். [2]

குடும்பம்

[தொகு]

மும்தாஜ் ஒரு கட்டிடக் கலைஞரான கமில் கான் மும்தாஜ் என்பவரை மணந்தார், இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்: சாமியா மும்தாஜ் எனும் ஒரு மகள்,இவர் பரவலாக அறியப்படும் பாக்கித்தானிய நடிகை மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். உருது புதின எழுத்தாளரும் திரைப்படத் தயாரிப்பாளருமான இசுமத் சுகதாய் இவருடைய பெரிய அத்தை ஆவார். [3]

கல்வி

[தொகு]

கராச்சி, பாக்கித்தானில், மும்தாஜ் புனித ஜோசப் மாடப் பள்ளியில் சேர்க்கப்பட்டார், ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வி வரை அங்கேயே கல்வி பயின்றார். புனித ஜோசப் கல்லூரியில் பன்னாட்டு உறவுகள் பிரிவில் கலை இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டத்தைனையும் பெற்றார்.[4] பன்னாட்டுப் படிப்பிற்கான தேர்வில் இவர் சிறப்பிடத்துடன் பட்டம் பெற்றார். பிரஞ்சு மொழியில் பட்டயம் பெற்றார்.[5] பாரிசில் உள்ள சோர்போனில் படிப்பதற்கான வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

தொழில்

[தொகு]

நியாயத்தன்மை மற்றும் பாகுபாட்டிற்கான உணர்திறன் உணர்வை உருவாக்கியது, இவரது சமூக செயல்பாட்டின் ஆரம்பமாக இருந்தது.மேலும் 1960 களின் பிற்பகுதியில் துணைத் தலைவர் அயூப் கானுக்கு எதிரான போராட்டத்தின் போது இவர் அரசியல் விழிப்புணர்வு பெற்றார். [6] 1977 வாக்கில், தொடர்ச்சியான அடக்குமுறைச் சட்டங்கள் இயற்றப்பட்டன, இதில் விபச்சாரம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண்களைக் கல்லால் எறிய வேண்டும்.

இவரது தலைமையின் கீழ், தேசிய பெண்களின் நிலை ஆணையத்தின் கீழ் , பெண்களின் உரிமைகளை செயல்படுத்துவதற்கு பங்களிக்கும் பல முயற்சிகளை மேற்கொண்டது.

நவம்பர் 2019 இல், இஸ்லாமாபாத்தில் ஒரு பொது நூலகம் மற்றும் பெண்கள் அருங்காட்சியகம் அமைக்க உயர்கல்வி ஆணையத்துடன் (HEC) ஒப்பந்தம் கையெழுத்தானது. [7] ஜூலை 2018 இல், பெண்கள் நிலை தேசிய ஆணையத்தின் தலைவர் பாக்கித்தான் தேர்தல் ஆணையத்தின் (ECP) ஒத்துழைப்புடன் பெண்கள் வாக்களிப்பதைத் தடுக்கும் காரணிகளைச் சமாளிக்க தேர்தல் ஆணையத்திற்கு உடனடியாகப் புகாரளிப்பதன் மூலம் பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க குறைந்த வாக்குப்பதிவு உள்ள பகுதிகளில் ஒரு முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்பை நிறுவினார். [8]

ஜனவரி 2018 இல், பெண்கள் நிலை தேசிய ஆணையம் இளம் பெண் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு ஒரு வீட்டுப் பணியாளரால் எழுதப்பட்ட உருது கவிதை புத்தகத்தை வெளியிட ஏற்பாடு செய்தது. [9] 2006 ஆம் ஆண்டில், பெண்கள் நிலை தேசிய ஆணையம், பெண்கள் அதிகாரமளிப்பதற்கான தடைகள் குறித்து ஒரு கணக்கெடுப்பை நடத்தியது. [10] பெண்கள் நிலை தேசிய ஆணைய அதன் முன்னுரிமை பகுதிகளாக மூன்று முக்கிய பரிமாணங்களை வரையறுத்தது; பெண்களின் பொருளாதார பங்கேற்பு,பெண்களுக்கு எதிரான வன்முறை , மற்றும் முடிவெடுப்பதில் பெண்களின் பங்கேற்பு குறிப்பாக தேர்தல்களின் போது, ஏனெனில் இவைதான் பெண்களின் வாழ்க்கையையும் பாதிப்பதாக அமைந்துள்ளது.

கற்பழிப்பு மற்றும் ஆணவக் கொலை, குடும்ப வன்முறை, இந்து திருமணங்கள், தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பான சட்டங்களை வரைவதில் பெண்கள் நிலை தேசிய ஆணைய ஈடுபட்டுள்ளது. தேர்தல் சட்டம், 2017 ஐ மதிப்பாய்வு செய்து, சட்டம் இயற்றப்படுவதற்கு முன்பு இணைக்கப்பட்ட பரிந்துரைகளை வழங்கியது. நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதிகளில் பெண்களின் பங்கேற்பைக் கண்காணிக்க சிறப்பாக வடிவமைக்கப்பட்ட சரிபார்ப்பு பட்டியலைப் பயன்படுத்தி 2013 மற்றும் 2018 தேர்தல்கள் கண்காணிக்கப்படுகின்றன.

ஆராய்ச்சி மூலம் நீதிக்கான அணுகலைக் கண்காணித்து, பெண்கள் பாதுகாப்புச் சட்டம் 2006 -ன் கீழ் கற்பழிப்பு வழக்குகளில் பெண்களுக்கு நீதி கிடைப்பதில் உள்ள சிக்கல்களை எடுத்துக்காட்டும் ஒரு அறிக்கையை உருவாக்கியது. [11] இந்தப் பகுதிகளில் முன்னேற்றத்தைக் கண்காணிக்கும் அளவுகோல்களாகப் பயன்படுத்தப்பட்ட பெண்களின் பொருளாதார அதிகாரமளிப்பு நிலை அறிக்கை 2016 மற்றும் கிராமப்புற பெண்கள் நிலை அறிக்கை 2018 ஆகியவை பெண்களின் நிலையினை அறிந்துகொள்வதில் முக்கியப் பங்காற்றியது.

பெண்கள் நிலை தேசிய ஆணைய வருடாந்திர அறிக்கைகள் தகவல் மற்றும் கொள்கைகள் மற்றும் வாதாடலுக்கான பரிந்துரைகள், ஆகியன செய்தி மடல்களாக தயாரிக்கப்பட்டன. பெண்களின் பிரச்சினைகள், சட்டங்கள் மற்றும் கொள்கைகள் மற்றும் புகார்கள் மற்றும் நிலைக் குழுக்களுக்கான கொள்கை விளக்கங்கள் ஆகியவற்றுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு, பரிந்துரைகள் மற்றும் தகவல் பரிமாற்றங்களுக்காக மாகாணங்களுக்கு இடையேயான மகளிர் அமைச்சர்கள் குழு வசதி ஏற்படுத்த ஊக்கமளித்தார். [11]

சான்றுகள்

[தொகு]
  1. "Khawar Mumtaz: A Call for Collective Action on Women's Rights | Global U". global.utah.edu (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-12-08.
  2. "A warm send off to Khawar Mumtaz". www.thenews.com.pk (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-23.
  3. "Inspiring change: Khawar terms religious extremism, discrimination biggest challenge". The Express Tribune (in ஆங்கிலம்). 2014-05-14. பார்க்கப்பட்ட நாள் 2020-11-23.
  4. "International Resource Panel - Khawar Mumtaz".
  5. "Ms. Khawar Mumtaz | RSPN". Rural Support Programmes Network (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-23.
  6. "Q&A with H.E Khawar Mumtaz, Chairperson of the National Commission on the Status of Women, Pakistan". UN Women. 11 February 2013. பார்க்கப்பட்ட நாள் 8 November 2017.
  7. "HEC, NCSW to establish women's museum". The Express Tribune (in ஆங்கிலம்). 2019-10-31. பார்க்கப்பட்ட நாள் 2020-12-07.
  8. "NCSW for launching campaigns to mobilize women on polling day". www.thenews.com.pk (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-12-07.
  9. "National Commission on Status of Women striving to promote gender equality". The Express Tribune (in ஆங்கிலம்). 2018-01-16. பார்க்கப்பட்ட நாள் 2020-12-07.
  10. Uploader (2016-10-06). "NCSW to conduct survey on obstacles of women empowerment: Khawar Mumtaz". Associated Press Of Pakistan (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-12-07.
  11. 11.0 11.1 "Pride of Pakistan Khawar Mumtaz". Daily Times (in அமெரிக்க ஆங்கிலம்). 2018-07-31. பார்க்கப்பட்ட நாள் 2020-12-08.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கவார்_மும்தாஜ்&oldid=3277313" இலிருந்து மீள்விக்கப்பட்டது