கரோலின் டி. ஜென்டில்
பேராசிரியர் கரோலின் டி. ஜென்டில் | |
---|---|
பிறப்பு | ஜனவரி 24, 1924 நியூட்டன், மாசச்சூசெட்ஸ் |
இறப்பு | செப்டம்பர் 19, 2008 பிரெஸ்க், ஐலே, மெயின் | (அகவை 84)
தேசியம் | அமெரிக்கர் |
பணி | உடற்கல்வி பயிற்றுவிப்பாளர் |
பட்டம் | கல்வித் துறையில் இணைப் பேராசிரியர் |
விருதுகள் | Maine Women's Hall of Fame, 2000 |
கல்விப் பின்னணி | |
கல்வி | இளங்கலை, சார்ஜன்ட் கல்லூரி, 1946 முதகலை, நியூயார்க்கு பல்கலைக்கழகம், 1949 |
கல்விப் பணி | |
துறை | உடல்நலம், உடற்கல்வி மற்றும் பொழுதுபோக்கு |
கல்வி நிலையங்கள் | பிரெஸ்க் தீவில் உள்ள மெயின் பல்கலைக்கழகம் |
கரோலின் டோரிஸ் ஜென்டில்(Caroline Doris Gentile) (ஜனவரி 24, 1924-செப்டம்பர் 19,2008)[1] என்பவர் அமெரிக்காவைச் சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர் ஆவார். 1946ல் மெயின் பல்கலைகழகத்தில் உடற்கல்வி ஆசிரியையாக சேர்ந்து உடற்கல்விக்கான கலைத் திட்டத்தையும் வடிவமைத்து கொடுத்துள்ளார். மேலும் மெயின் பல்கலைகழத்தின் உடற்கல்வி துறைக்கு ஐந்து லட்சம் டாலர் பரிசளித்துள்ளார்.[2]
ஆரம்ப காலம் மற்றும் கல்வி
[தொகு]கரோலின்,[3] அமெரிக்காவின் மாசச்சூசெட்ஸ் மாநிலத்தில் ஜெரார்டோ ஜென்டில் மற்றும் டோனடா புச்செல்லி ஜென்டில் என்ற தம்பதிக்கு மகளாக பிறந்தார். இவருக்கு நான்கு சகோதரர்களும், நான்கு சகோதரிகளும் உள்ளனர்.[1]
வளைதடிப் பந்தாட்டம், கூடைப்பந்தாட்டம், கால்பந்து, டென்னிசு, மற்றும் அடிபந்தாட்டம், இறகுப்பந்தாட்டம் போன்ற விளையாட்டுகளை நியூட்டன் மேல்நிலை பள்ளியில் சிறப்பாக விளையாடியதனால், அப்பள்ளியின் ஆண்டு புத்தகத்தில் இவரின் பெயர் சிறந்த விளையாட்டு வீராங்கனை என்ற தலைப்பில் இடம்பிடித்தது.[4]
விருதுகள்
[தொகு]1996 ஆம் ஆண்டு நடைபெற்ற மெயின் பல்கலைகழகத்தின் ஐம்பதாவது ஆண்டுவிழாவின் போது கரோலினுக்கு முனைவர் பட்டம் அளித்து சிறப்பித்தது.[1][5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "Caroline D. Gentile". Bangor Daily News. 23 September 2008. பார்க்கப்பட்ட நாள் 27 February 2016.
- ↑ Brown, Wayne L. (31 August 2002). "Professor gives $500,000 to UMPI". Bangor Daily News: p. C1. https://news.google.com/newspapers?nid=2457&dat=20020830&id=4gJbAAAAIBAJ&sjid=9E0NAAAAIBAJ&pg=1734,4037988&hl=en.
- ↑ "Graduation Exercises: Newton High School". Internet Archive. 6 June 1942. பார்க்கப்பட்ட நாள் 27 February 2016.
- ↑ "Newtonian". Internet Archive. 1942. பார்க்கப்பட்ட நாள் 27 February 2016.
- ↑ "Maine Women's Hall of Fame Honorees – Caroline Gentile". University of Maine at Augusta. 2016. Archived from the original on 6 March 2016. பார்க்கப்பட்ட நாள் 27 February 2016.