கரகம் (திருவிழா)
கரகம் (Karaga) என்பது தென் கருநாடகத்தின் நாட்டுப்புறங்களில் நடக்கும் ஒரு விழா ஆகும். கருநாடகத்தில் எல்லையை ஒட்டிய தமிழ்நாட்டின் (ஒசூர்[1] போன்ற) சில ஊர்களிலும் இந்த கரக விழா கொண்டாடப்படுகிறது. இது திரௌபதிக்கு நடத்தப்படும் ஒரு சடங்காக உருவானது. இது இந்த பகுதிகளில் துருபத்மா என்று அழைக்கப்படுகிறது. சடங்கு முழு நிலவு நாளில் செய்யப்படுகிறது.
நீர் நிரப்பபட்ட சடங்கு பானையானது பல அடி உயரத்திற்கு பூக்களால் அலங்கரிக்கப்பட்டு பூசாரியால் எடுத்துச் செல்லப்படுகிறது. 'தவி', "நாதஸ்வரம்", "முனி", "உடுக்கை", "பம்பை", முதலிய பல இசைக்கருவிகளுடன் ஊர்வலம் நடக்கிறது. அந்த ஊர்வலத்தின் போது நடனக் கலைஞர்கள் பலவிதமான கூத்துகளை நிகழ்த்துகின்றனர் [2]
கருநாடகத்தில் கரக விழாக்கள்
[தொகு]கரகப் பானை
[தொகு]கரகம் என்பது ஒரு மண் பானையாகும். அதன் மீது மலர்களால் உயரமாக கூம்பு வடிவில் அலங்கரிக்கபடுகிறது. பானையின் உள்ளடக்கங்கள் பல நூற்றாண்டுகளாக இரகசியமாகவே உள்ளன. அந்தக் கரகத்தை தலையில் சுமந்து வருபவருடன் வெற்று மார்புடன், வேட்டி அணிந்த, தலைப்பாகையுடன் வீரகுமாரர்கள் வாள்களை கையில் ஏந்தி நூற்றுக்கணக்கில் வருகின்றனர். இந்த வெறித்தனமான ஊர்வலத்தில், அவர் தடுமாறி, அதனால் கரகம் விழுந்தால் அவரது தலை வீரகுமார்ரகளால் கொய்யப்படும் என்பது பாரம்பரிய நம்பிக்கை. நகரின் மையப் பகுதியில் நடைபெறும் இவ்விழா பெங்களூர் கரகம் என்று அழைக்கப்படுகிறது.
கரகம் தூக்கி
[தொகு]தர்மராய கோயிலைச் சேர்ந்தவர்களால் கரகம் தூக்கி அவரது வீட்டிலிருந்து அழைத்துச் செல்லபடுகிறார். வீரகுமாரர்களுடன் சேர்ந்து நடனமாடினாலும் கரகம் தூக்கியவர் நடைமுறையில் மருளில் இருக்கிறார். வீரகுமாரர்கள் "டிக்-டி தடிக்-டி" என்று தங்கள் வெற்று மார்பில் வாள்களைக் கொண்டு அடித்துக் கொள்கின்றனர்.
திருவிழாவின் முக்கியத்துவம்
[தொகு]சடங்குகள் மகாபாரதத்தில், குறிப்பாக திரௌபதியின் துகிலுரித்தல், பாண்டவர்கள் நாடுகடத்தப்படுதல், அசுவத்தனின் கைகளா��் திரௌபதியின் மகன்கள் கொல்லபடுதல் ஆகியவற்றை மையமாக கொண்டு தோற்றம் பெற்றுள்ளது. இந்த கடும் சோதனைகள் மற்றும் இன்னல்களுக்குப் பிறகு, திரௌபதி வலுவான, சிறந்த பெண்மையின் அடையாளமாக உருவெடுத்தார்.
கரகத் திருவிழா நடக்கும் இடங்கள்
[தொகு]ஒசகோட்டை கரகம்
[தொகு]ஒசகோட்டை கரக மகோத்சவம் என்பது ஒசகோட்டையில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாவாகும், இது ஏப்ரல் அல்லது மே மாதங்களில் கொண்டாடப்படுகிறது. புத்த பூர்ணிமாவுக்கு 11 நாட்களுக்கு முன்பு விழாக்கள் தொடங்குகின்றன. இது வன்னிகுல சத்திரியர் அல்லது திகளரின் பாரம்பரிய விழாவாகும்.
நரசபுர கரகம்
[தொகு]நரசபுரத்தில் நடக்கும் நரசபுர கரகமகோத்சவ விழா மார்ச் அல்லது ஏப்ரல் அல்லது மே மாதங்களில் கொண்டாடப்படுகிறது. கோலார் மாவட்டத்தில் நரசபுரா கரகம் மிகவும் பிரபலமான திருவிழா ஆகும். கரகத் திருவிழா என்பது நரசபுரா நகரத்தில் பெருமளவில் வசிக்கும் வன்னியகுல சத்திரியர்களின் பாரம்பரிய சமூக விழாவாகும், மேலும் அவர்கள் 100 ஆண்டுகளாக இந்த விழாவை நடத்தி வருகின்றனர்.
நரசபுர நகரில் அமைந்துள்ள தர்மராய சுவாமி கோயிலில் கரகத் திருவிழாவையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். திருவிழா ஒவ்வொரு ஆண்டும் முழுநிலவுக்கு 11 நாட்களுக்கு முன்னதாக கொடியேற்றத்துடன் தொடங்கி பிரம்மாண்டமான சப்தகலாஷ கரகா உற்சவத்துடன் நிறைவடைகிறது. இரண்டு வகையான கரகங்கள் உள்ளன. அவை அசி கரகம், பூங்கரகம் என அழைக்கப்படுகின்றன. பூங்கரகத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன் அசி கரகம் நடக்கும். நரசபுர நகரில் உள்ள அனைத்து தெய்வங்களின் பல்லக்கில் கிராமத்தின் வீதிகளில் வலம் வருகின்றன. திரௌபதி மற்றும் தர்மராய சுவாமியின் நினைவாக, ஊர்வலம் வழக்கமாக நள்ளிரவில் தொடங்கி, நரசபுரத்தின் அனைத்து வீடுகளுக்கு முன்னும் செல்கிறது.
நரசபுர கரகத்தைக் காண அருகில் உள்ள கிராமங்கள் மற்றும் நகரங்களில் இருந்து சுமார் 30000 முதல் 40000 மக்கள் வருகின்றனர். இந்த விழாவிற்கு நரசபுர நகர மக்கள் தங்கள் நண்பர்கள், உறவினர்கள் என அனைவரையும் அழைக்கின்றனர். நரசாபுரத்தின் தெருக்கள் மற்றும் வீடுகள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்படுகின்றன. கரக ஊர்வலம் தங்கள் வீடுகளுக்கு முன் வருவதை வரவேற்க பெரும் அர்ப்பணிப்பு, பக்தியுடன் வீடுகளின் முன் ரங்கோலி போடப்படுகிறது. கரக நாளன்று மக்கள் திரௌபதி தேவியிடம் பிரார்த்தனை செய்கின்றனர்.
வர்தூர் கரகம்
[தொகு]வரதூர் (வரபுரி) கரக திருவிழா பிப்ரவரி மாதம் (ரதசப்தமி வாரத்தில்) கொண்டாடப்படுகிறது. திரௌபதி மற்றும் தர்மராய சுவாமிக்கான ஊர்வலம் வழக்கமாக நள்ளிரவு 12:30 மணிக்கு தொடங்குகிறது. தர்மராய சுவாமி கோவிலில் இருந்து வெளியே வந்த பிறகு, கரகம் இந்தியாவில் தனித்துவமான வர்தூர் பள்ளிவாசலுக்கு செல்கிறது. இது நகரத்தின் இந்தப் பகுதியில் உள்ள இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு இடையில் உள்ள நல்லிணக்கத்தை காட்டுவதாக உள்ளது. பள்ளிவாசலுக்குச் சென்ற பிறகு, கரகம் வர்தூரில் உள்ள அனைத்து வீடுகளுக்கும், குறிப்பாக சத்திரியர்களின் ��ீடுகளுக்கும் செல்லத் தொடங்குகிறது. ரதசப்தமி அன்று மாலை சென்னராய சுவாமிக்கு அர்ப்பணிக்கப்படும் முக்கியமான பூங்கரகம் (மல்லிகைப் பூக்களால் ஆனது) மற்றும் அதற்கு இரண்டு நாட்களுக்கு முன் எடுக்கப்படும் அசி கரகம் என இரண்டு வகையான கரகங்கள் உள்ளன. சென்னராய சுவாமி தேர் ஊர் முழுவதும் திரளான பக்தர்களால் இழுக்கப்படுகிறது. பெங்களூரின் கிழக்குப் பகுதியில் கொண்டாடப்படும் வர்தூர் கரகம் பல தசாப்த கால வரலாற்றைக் கொண்ட, மிகவும் பிரபலமான திருவிழாவாகும். ஒவ்வொரு ஆண்டும் ரதசப்தமி நாளுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னதாக சென்னராய சுவாமி தேர் இழுத்து விழா துவங்கி மாபெரும் கரக உற்சவத்துடன் விழா நிறைவடைகிறது. கரகத் திருவிழா என்பது வன்னியகுல சத்திரிய சமூகத்தின் பாரம்பரிய விழாவாகும். அவர்கள் பெரும்பாலும் வர்தூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கின்றனர். மேலும் 100 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த விழாவை நடத்துகின்றனர். வர்த்தூர் நகரில் அமைந்துள்ள தர்மராய சுவாமி கோவிலுக்கு கரக திருவிழாவையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கரகத் திருவிழா அருகிலுள்ள கிராமங்கள் மற்றும் நகரங்களில் இருந்து 50000 க்கும் மேற்பட்ட மக்களை ஈர்க்கிறது. விழாவின்போது விளக்குகள் மற்றும் மலர் அலங்காரங்களால் நகரம் ஜொலிக்கும். பக்தர்களுக்கு சித்திரன்னம் மற்றும் பிற உணவு வகைகள் பிரசாதமாக மிகுதியாக வழங்கப்படுகிறது. மக்கள் கரகத்தை தங்கள் வீட்டடு வாசல்களில் மிகுந்த சிரத்தையுடனும் பக்தியுடனும் வரவேற்கின்றனர். கரக நாளன்று மக்கள் திரௌபதி தேவியிடம் பிரார்த்தனை செய்கிறனர்.
ராமகொண்டனள்ளி கரகம்
[தொகு]ராமகொண்டனள்ளியில் கரகத் திருவிழா மார்ச் மாதம் (ஹோலி பண்டிகை அன்று) கொண்டாடப்படுகிறது. பிற இடங்களில் போலவே இங்கும், வழக்கமாக நள்ளிரவில் கரக விழா துவங்கும். ஊர்வலமானது ராமகொண்டனள்ளி, வர்த்தூர் ஏரிக் கோடியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் செல்வது வழக்கம். பிரதான பூங்கரகத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் எடுக்கப்படும் அசி கரகம் கரகம் என இரண்டு வகையான கரகங்கள் இருக்கும். பௌர்ணமிக்கு 11 நாட்களுக்கு முன்னதாக (ராமகொண்டனள்ளியில் மார்ச் மாதம்) திருவிழாவின்போது தேர் இழுக்கப்பட்டு, பௌர்ணமியன்று பிரம்மாண்டமான கரக திருவிழாவுடன் விழா நிறைவடையும். கரகாத் திருவிழா என்பது ராமகொண்டனள்ளியில் வசிக்கும் வன்னியகுல சத்திரிய சமூகத்தின் பாரம்பரிய சமூக விழாவாகும். அவர்களே இந்த விழாவை நடத்துகின்றனர். ராமகொண்டனள்ளி நகரில் அமைந்துள்ள தர்மராய சுவாமி கோவிலுக்கு கரகத் திருவிழாவையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ராமகொண்டனள்ளி கரக விழாவுக்காக அருகில் உள்ள கிராமங்கள் மற்றும் நகரங்களில் இருந்து சுமார் 25,000 முதல் 30,000 மக்கள் வருகின்றனர். இந்த விழாவிற்கு ராமகொண்டனள்ளி மக்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அனைவரையும் அழைக்கிறார்கள். மேலும் ராமகொண்டனள்ளியின் தெருக்கள் மற்றும் வீடுகள் முழுவதும் விளக்குச் சரங்களால் அலங்கரிக்கப்படுகின்றன. ராமகொண்டனள்ளி மற்றும் கோடி கிராமங்களில் உள்ள அனைத்து வீடுகளின் முன்பும் ரங்கோலி வரைந்து கரகத்தை வரவேற்கின்றனர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ மலர், மாலை (2023-02-12). "ஓசூரில் கோலாகலமாக பூ கரகம், பல்லக்கு உற்சவம்". www.maalaimalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-06-29.
- ↑ P. V. Jagadisa Ayyar (1 April 1998). South Indian Customs. Rupa & Company. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7167-372-8.