உள்ளடக்கத்துக்குச் செல்

கட்டுப்பாட்டு கோடு

ஆள்கூறுகள்: 34°56′N 76°46′E / 34.933°N 76.767°E / 34.933; 76.767
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஆசாத் காஷ்மீர் மற்றும் ஜில்ஜிட் – பால்டிஸ்தான் பகுதிகளை பச்சை நிறத்திலும்; இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஜம்மு காஷ்மீர் மாநிலம், ஆரஞ்ச் நிறத்திலும்; சீனா ஆக்கிரமிப்பில் உள்ள ஜம்மு காஷ்மீர் இராச்சியத்தின் அக்சாய் சின் பகுதி
ஐக்கிய நாடுகள் அவையின் இந்திய-பாகிஸ்தான் கட்டுப்பாட்டுக் கோடு. இதில் சியாச்சின் பனிமலை அருகில் கட்டுப்பாட்டுக் கோட்டை வரையறுக்கப்படவில்லை.

எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அல்லது கட்டுப்பாட்டு எல்லைக் கோடு (Line of Control) (LoC) என்பது 1947 இந்திய பாகிஸ்தான் போரின் முடிவில் ஐக்கிய நாடுகள் அவை, ஜம்மு காஷ்மீர் இராச்சியப் பகுதியில், இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையே வகுத்த இராணுவப் போர் நிறுத்தக் கோடாகும். இந்தக் கட்டுப்பாட்டுக் கோட்டை 3 சூலை 1972இல் சிம்லாவில் ஏற்பட்ட சிம்லா ஒப்பந்தப் படி, இந்திய-பாகிஸ்தான் நாடுகளும் (எழுத்து அடிப்படையில் அல்லாது, வாய்மொழி ஒப்பந்தப் படி) போர் நிறுத்தக் கோட்டிற்கு ஒப்புதல் அளித்தது. மேலும் வருங்காலத்தில் இந்த கட்டுப்பாட்டு கோடு அல்லது போர் நிறுத்த கோடு, இரு நாடுகளுக்கும் இடையே நிரந்தர எல்லைக் கோடாக இருக்கும் எனவும் ஒத்துக் கொள்ளப்பட்டது.[1]

வரலாறு

[தொகு]

1947 இந்திய - பாகிஸ்தான் போரில் , பிரித்தானிய இந்தியாவின் முன்னாள் சுதேச சமஸ்தானங்களில் ஒன்றான ஜம்மு காஷ்மீர் இராச்சியப் பகுதிகளை இந்தியாவும்; பாகிஸ்தானும் இராணுவ நடவடிக்கைகளின் மூலம் தக்க வைத்துக் கொண்டது. ஜம்மு காஷ்மீர் இராச்சியத்தை பிரிக்கும் கட்டுப்பாட்டுக் கோட்டை, துவக்கத்தில் போர் நிறுத்த எல்லைக் கோடு என அழைக்கப்பட்டது. இந்தக் கட்டுப்பாட்டுக் கோட்டை 3 சூலை 1972இல் சிம்லாவில் ஏற்பட்ட சிம்லா ஒப்பந்தப் படி இரு நாடுகளும் (எழுத்து அடிப்படையில் அல்லாமல், வாய்மொழி ஒப்பந்தப் படி) போர் நிறுத்தக் கோட்டிற்கு இரு நாடுகளும் ஒப்புதல் அளித்தது.

காஷ்மீர் இராச்சியத்தின் இந்தியப் பகுதிக்கு ஜம்மு காஷ்மீர் என்றும்; பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர் இராச்சியத்தின் பகுதிகளுக்கு ஆசாத் காஷ்மீர் மற்றும் ஜில்ஜிட் – பால்டிஸ்தான் என்றும் பெயராயிற்று.

என்ஜெ9842 என்பது இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் லடாக் பகுதியில் அமைந்த சியாச்சின் பனிமலை உரிமை குறித்து 1984இல் இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே உண்டான சியாச்சின் பிணக்கால் நடந்த போருக்குப் பின் வரையறுக்கப்பட்ட போர் நிறுத்தக் கோடாகும். [2]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

மேலும் படிக்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கட்டுப்பாட்டு_கோடு&oldid=4057355" இலிருந்து மீள்விக்கப்பட்டது