ஓய்வு
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஓய்வு என்பது,தொடர்ச்சியான செயலில் இருந்து சிறிது நேரம் அல்லது சிலகாலம் விடுபடுவது. மாற்றுச் செயலில் ஈடுபடுவதும் ஓய்வுதான். மனதுக்கும், லுlக்கும் ஓயபடுகிறது. ஓய்வு புத்துணர்ச்சி அளிக்கிறது. மேலும் ஒய்விற்குப்பின் செய்யும் செயல்கள் அதிக பலனை அளிக்கிறது.உலகில் ஓய்விற்காக தொடங்கப்பட்ட பலதுறைகள் இப்பொழுது பெரும் வளர்ச்சிபெற்றுள்ளது. சுற்றுலா, கேளிக்கை அரங்கம்,படம், தொலைக்காட்சி, இசை,நடனம்,உடற்பயிற்சி, உணவு விடுதிகள் மற்றும் பல துறைகள் மக்களுக்குப் பலவிதமான ஓய்வெடுக்கும் வாய்ப்புகளை உருவாக்கித் தருகிறது.
மனதிற்கான ஓய்வு
[தொகு]மனதிற்கான ஓய்வு வெளிப்படையாக தெரிவதில்லை. இதனால் பலர் மனதிற்கான ஓய்வுத்தேவையை சரியாக நெறிப்படுத்துவது இல்லை.அனுதினமும் புதிய புதிய நிகழ்வுகளால், மனம் ஓய்வின்றி செயல்படுகிறது.
மனதிற்கான ஓய்வு இசை, தியானம், விரும்பியதை செய்தல், மற்றும் மனதிற்கு இதமான சூழலில் கிடைக்கும். ஒவ்வொரு மனமும் தனித்தன்மை வாய்ந்ததால் ஒருவருடைய ஓய்வுமுறை மற்றொருவருக்கு பொறுந்தாது மனதிற்கான ஓய்விற்கு மனதை அடக்குவது ஒருமுறை, அதற்கு மாற்றாக, எதுவும் செய்யாமல் மனதை விட்டுவிடுவது மற்றொரு முறை. மிக கவனமாக செய்யும் செயல் கூட ஒருவகை தியானம்தான். [ மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்வதும், வங்கியில் பணம் எண்ணுவதும், ஆபரண வேலை செய்வதும், வயலில் கதிர் அறுப்பதும் தியானம்தான் ]
உடலுக்கான ஓய்வு
[தொகு]சிறிது நேரம் செயலற்று இருப்பது, மென்மையான உடற்பயிற்சி, ஒரு குளியல் போன்றவை உடலுக்கான ஓய்வை அளிக்கிறது.
தூக்கம்
[தொகு]தூக்கம், மனதுக்கும் உடலுக்கும் முழுமையான ஓய்வை தருகிறது.
மருத்துவ முறை ஓய்வு
[தொகு]மனம் அதிக உளைச்சலுக்கு ஆளாகும்போது, மருத்துவ உதவியுடன் கூடிய ஓய்வு தேவைப்படுகிறது.