உள்ளடக்கத்துக்குச் செல்

எம். எஸ். சுனில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எம். எஸ். சுனில்
பிறப்பு1961கள்
கேரளம்
தேசியம் இந்தியா
பணிகல்வியாளர், வீடு கட்டுபவர்
அறியப்படுவதுவீடற்றவர்களுக்கு வீடு கட்டுவது
வாழ்க்கைத்
துணை
இருக்கிறார்
பிள்ளைகள்1

எம். எஸ். சுனில் (M.S. Sunil) (பிறப்பு 1961கள்) ஒரு இந்தியக் கல்வியாளரும், பரோபகாரரும் ஆவார். 2018 ஆம் ஆண்டில் நாரி சக்தி விருது வழங்கப்பட்டபோது இவரது பணி அங்கீகரிக்கப்பட்டது.

வாழ்க்கை

[தொகு]

சுனில் கேரளாவைச் சேர்ந்தவர். இவர் பிறப்பதற்கு முன்னரே இவரது தந்தை தனக்கு ஒரு மகன்தான் பிறப்பான் எனக் கருதி இப்பெயரைத் தேர்ந்தெடுத்ததால் இவருக்கு இப்பெயரிடப்பட்டது. பிச்சை எடுக்கும் குழந்தைகளுக்கு உணவளிக்கும் பள்ளிலிருந்து இவரது தொண்டு பணிகள் தொடங்கியது.[1]

பத்தனம்திட்டா, கத்தோலிக்கக் கல்லூரியின் விலங்கியல் துறையில் கற்பித்த இவர் அந்தத் துறையின் தலைவராக ஓய்வு பெற்றார்.[2]

2006 ஆம் ஆண்டில், முதுகலைப் பட்டம் பெற்ற தனது மாணவர்களில் ஒருவருக்கு முறையான வீடு இல்லை என்பதை அறிந்த இவர் அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டார்.[3] இவர் ஒரு அமைப்பின் கீழ் பணிபிரியாமல், தனது நண்பர்களிடமிருந்து பணத்தையும் பொருட்களையும் சேகரிக்கிறார். மேலும் தனது சொந்த பணத்தைக் கொண்டும் இப்பணியைத் துவக்கினார். இது ஒரு வீட்டை உருவாகுக்கிறது.[4]

2018இல் எம். எஸ். சுனில் இந்தியக் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் அவர்களிடமிருந்து நாரி சக்தி விருது பெறுகிறார்.

விருது

[தொகு]

நாரி சக்தி விருதுகளுக்காக கேரளாவைச் சேர்ந்த மூன்று விருது வென்றவர்களில் ஒருவராக இவர் தேர்வு செய்யப்பட்டார். இந்திய பல் பொருட்கள் விஞ்ஞானியான லிசிமால் பிலிபோஸும், கோயில் கலைஞரான சியாமளா குமாரியும் மற்ற இருவர்.[5] 2018 ஆம் ஆண்டு அனைத்துலக பெண்கள் நாள் அன்று மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் சார்பாக இந்தியக் குடியரசுத் தலைவரால் இந்த விருதுகள் வழங்கப்பட்டன.[2][6]

இவர், ஒரு வீடு கட்டுவதற்கான அனைத்துப் பொருட்களையும் தானே நேரில் சென்று வாங்குகிறார் . பின்னர் ஒவ்வொரு புதிய வீட்டின் கட்டுமானத்தையும் மேற்பார்வையிடுகிறார். அவை சிறியவை, ஆனால் அவை 450 சதுர அடி பரப்பளவில் இரண்டு அறைகள், ஒரு சமையலறை மற்றும் ஒரு கழிப்பறை ஆகியவற்றைக் கொண்டுள்ளன. வீடுகள் 35 நாட்களில் கட்டப்பட்டு, துருபிடிக்காத எஃகினால் செய்யப்பட்ட கூரையுடன் முதலிடம் வகிக்கின்றன. விருது வழங்கப்பட்ட நேரத்தில் இவர் எண்பது வீடுகளுக்கு மேல் கட்டியிருந்தார்.[1]

2020 ஆம் ஆண்டில் இவர் கேரளாவைச் சேர்ந்த 98 வயதான கார்த்தியாயினி அம்மாவ���ச் சந்திக்கச் சென்றார். அந்த சமயத்தில் அவர் நாரி சக்தி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருந்தார். அவர் இதற்கு முன் ஒருபோதும் விமானத்தில் சென்றதில்லை. எனவே அவர் தில்லிக்குச் செல்ல இவர் உதவினார்.[7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Nari Shatki Puraskar citation". Ministry of WCD on Twitter. 8 March 2018. பார்க்கப்பட்ட நாள் 19 January 2021.{{cite web}}: CS1 maint: url-status (link)
  2. 2.0 2.1 Kuttoor, Radhakrishnan (2018-03-07). "Charity ‘home maker’ gets her due on women’s day" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/kerala/charity-home-maker-gets-her-due-on-womens-day/article22971013.ece. 
  3. "This Professor Did Not Stop with Teaching, but Went on To Build Houses for Poor People". www.theweekendleader.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-01-19.
  4. "This professor wears many hats to help others". Deccan Herald (in ஆங்கிலம்). 2011-11-12. பார்க்கப்பட்ட நாள் 2021-01-19.
  5. "Scientist, social worker and mural artist: Meet Nari Shakti winners from Kerala" (in en). The News Minute. 2018-03-08. https://www.thenewsminute.com/article/scientist-social-worker-and-mural-artist-meet-nari-shakti-winners-kerala-77643. 
  6. "Nari Shakti Puraskar - Gallery". narishaktipuraskar.wcd.gov.in. Archived from the original on 2021-01-14. பார்க்கப்பட்ட நாள் 2021-01-16.
  7. "At 98, Karthyayani Amma prepares for 1st flight; to receive Nari Shakti Puraskar on Women's Day". Mathrubhumi (in ஆங்கிலம்). Archived from the original on 2021-01-28. பார்க்கப்பட்ட நாள் 2021-01-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._எஸ்._சுனில்&oldid=3931149" இலிருந்து மீள்விக்கப்பட்டது