உயிர்ப்பு ஞாயிறு
உயிர்ப்பு ஞாயிறு | |
---|---|
இயேசுவின் உயிர்ப்பைக் குறிக்கும் 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பதிப்புக்கல் ஓவியம் இடம்- ஜெபமாலை பேராலயம், லூர்து நகர், பிரான்சு | |
கடைப்பிடிப்போர் | கிறித்தவர் |
வகை | Christian |
முக்கியத்துவம் | இயேசுவின் உயிர்த்தெழுதல் |
கொண்டாட்டங்கள் | திருப்பலி, குடும்ப உணவு, ஈஸ்டர் முட்டை தேடல், பரிசுப்பரிமாற்றம் |
அனுசரிப்புகள் | செபம், பாஸ்கா திருவிழிப்பு, திருப்பலி |
நாள் | மார்ச் 22, ஏப்ரல் 25, date of Easter |
2023 இல் நாள் | ஏப்பிரல் 9 (மேற்கில்) ஏப்பிரல் 16 (கிழக்கில்) |
2024 இல் நாள் | மார்ச்சு 31 (மேற்கில்) மே 5 (கிழக்கில்) |
2025 இல் நாள் | ஏப்பிரல் 20 (மேற்கில்) ஏப்பிரல் 20 (கிழக்கில்) |
தொடர்புடையன | திருநீற்றுப் புதன், தவக் காலம், குருத்து ஞாயிறு, பெரிய வியாழன், புனித வெள்ளி, |
உயிர்ப்பு ஞாயிறு (Easter), ஆண்டவரின் உயிர்ப்புப் பெருவிழா அல்லது பாஸ்கா என்பது இயேசு கிறிஸ்து கி.பி. சுமார் 33ம் ஆண்டில் சிலுவையில் அறையப்பட்டு அடக்கம் செய்யப்பட்டு மூன்றாம் நாள் சாவில் இருந்து உயிர்த்ததைக் குறிக்கும் விதமாக கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படும் ஒரு திருவிழா ஆகும். இது ஒவ்வொரு ஆண்டும் 40 நாட்கள் தவக்காலத்தின் முடிவில் வருகிறது.
இது கிறிஸ்தவ திருவழிபாட்டு ஆண்டின் மிக முக்கியமான திருநாளாகும். இது ஆண்டுதோறும் மார்ச் 22 முதல் ஏப்ரல் 25 வரையான காலப்பகுதியில் வழமையாக வருகின்றது. இந்நாள் புனித வெள்ளியில் இருந்து மூன்றாம் நாளான ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. உரோமன் கத்தோலிக்க திருச்சபையில் இது எட்டு நாள் திருவிழாவாக கொண்டாடப்படுவது வழக்கமாகும்.
பெயர்க்காரணம்
[தொகு]பாஸ்கா என்ற அரமேய மொழிச் சொல்லுக்கு கடந்து போதல் என்று பொருள். இது இஸ்ரேல் மக்கள் எகிப்தில் இருந்து மீட்பு பெற்றத்தன் நினைவாக கொண்டாடப்படும் யூதப் பெருவிழா ஆகும். புதிய ஏற்பாட்டில் "நம் பாஸ்கா ஆடாகிய கிறிஸ்து பலியிடப்பட்டிருக்கிறார்" (1 கொரி 5 : 7 ) என்று திருத்தூதர் பவுல் கூறுகிறார். ஆகவே பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டிருக்கும் பாஸ்கா பெருவிழா என்பது இயேசுவின் சாவையும் உயிர்ப்பையும் குறிக்கும் முன்னறிவிப்பாக கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர். ஆகவே அவர்கள் இயேசு உயிர்த்தெழுந்த நாளை புதிய பாஸ்கா பெருவிழாவாகக் கருதுகின்றனர்.
கணக்கீடு
[தொகு]உயிர்ப்பு ஞாயிறு 2004 - 2044 கிரிகோரியன் நாட்காட்டியின் படி[1] | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
உயிர்ப்புத் திருநாளைக் கணக்கிடுவதில் பல்வேறு சிக்கல்கள் நிலவி வந்தன. ஏனெனில் எபிரேய நாட்காட்டியின் படி இயேசு, நிசான் மாதம் 14ஆம் நாளன்று சிலுவையில் அறையப்பட்டு மூன்றாம் நாளான நிசான் மாதம் 16ஆம் நாளன்று உயிர்த்தெழுந்தார். இதன்படி கணக்கிட்டால் புனித வெள்ளியும் உயிர்ப்பு ஞாயிறும் ஆண்டுதோறும் வெவ்வேறு கிழமைகளில் வரும். ஆகவே கி.பி. 325ம் ஆண்டு குழுமிய முதல் நைசீய பொதுச்சங்கம், மார்ச் மாதம் வரும் சம இரவு நாளான 21ம் தேதிக்குப் பின் வரும் முழு நிலவு நாளிலோ அல்லது அதற்கு பிறகோ வரும் முதல் ஞாயிற்றுக்கிழமையே உயிர்ப்புத் திருநாள் என்று அறிவித்தது.[2] அதைப் பின்பற்றி மேற்கு மற்றும் கிழக்கு கிறிஸ்தவர்கள் உயிர்ப்புப் பெருவிழாவை ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனர்.
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]- பாஸ்கா திருவிழிப்பு
- பாஸ்கா புகழுரை
- பாஸ்கா திரி
- புனித வெள்ளி
- ஈஸ்டர் முட்டை
- இயேசுவின் உயிர்த்தெழுதல்
- புனித சனி
- குருத்து ஞாயிறு