உணவுக்குழாய் அழற்சி
Appearance
உணவுக்குழாய் அழற்சி | |
---|---|
கேர்ப்பிசு தீநுண்ம உணவுக்குழாயின் நுண்ணோக்கிப்படம் H&E சாயம். | |
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் | |
சிறப்பு | இரையகக் குடலியவியல் |
ஐ.சி.டி.-10 | K20. |
ஐ.சி.டி.-9 | 530.10 |
ம.பா.த | D004941 |
உணவுக்குழாய் அழற்சி அல்லது உணவுக்குழலிய அழற்சி (esophagitis / oesophagitis) என்பது சில குறிப்பிட்ட காரணங்களால் உணவுக்குழாயில் ஏற்படும் அழற்சியாகும், இது கடியதாகவோ அல்லது நெடுங்காலத்து நோயாகவோ இருக்கலாம். கடிய உணவுக்குழாய் அழற்சி சீதவழற்சியாகவோ அல்லது சீ��் உண்டாகும் அழற்சியாகவோ காணப்படும், அதேவேளையில் நெடுங்காலத்து உணவுக்குழாய் அழற்சியானது மிகைவளர்ச்சியாகவோ அல்லது நலிவுற்றதாகவோ இருக்கலாம்.
காரணங்கள்
[தொகு]தொற்று
[தொகு]நோய் எதிர்ப்பாற்றல் குறைவாக உள்ளோர்க்கு தொற்றுக்களால் ஏற்படும் உணவுக்குழாய் அழற்சி உருவாகுகின்றது. இவற்றின் வகைகளாவன:
- கண்டிடா உணவுக்குழாய் அழற்சி (en:Esophageal candidiasis)
- தீநுண்ம உணவுக்குழாய் அழற்சி
- கேர்ப்பிசு (en:herpes esophagitis)
- பெருங்குழியத் தீநுண்மம் (en:cytomegalovirus)
அகநோக்கி மூலம் இவற்றை வேறுபடுத்தி அறியமுடியும்.[1]
ஏனைய காரணங்கள்
[தொகு]- பொதுவான காரணியாக விளங்குவது இரையக உண்குழலியப் பின்னோட்ட நோய் ஆகும், இதனால் ஏற்படும் உணவுக்குழாய் அழற்சியானது பின்னோட்ட உணவுக்குழாய் அழற்சி (reflux esophagitis) எனப்படுகின்றது.
- அமில அல்லது கார வேதியியல் கலவைகள் காயத்தை ஏற்படுத்துவதாலும் உணவுக்குழாய் அழற்சி ஏற்படுகின்றது. கவனக்குறைவாக வீட்டில் வைக்கப்படும் பொருட்களால் சிறுவர்களில் பொதுவாக இவ்வகையைச் சந்திக்கமுடிகின்றது, மேலும் அரிக்கும் திரவங்களைப் பயன்படுத்தி தற்கொலைக்கு முயற்சிப்போரிலும் இதைக்காணலாம்.[2]
- கதிர்வீச்சுச் சிகிச்சையால் ஏற்படும் கதிர்வீச்சால் காயம் ஏற்பட்டு இந்நோயை உண்டாக்கலாம்.
- மூக்கு இரையககுழாய் மூலம் உணவு, நீராகாரம் செலுத்தப்படுவோரிற்கும் உணவுக்குழாய்க் காயம் ஏற்படுகின்றது.
- அமில மிகைப்பு.
- மிதமிஞ்சிய மதுபானப் பயன்பாடு
தீவிரத்தை வகைப்படுத்தல்
[தொகு]நான்கு வகுப்புக்களாக உணவுக்குழாய் அழற்சியின் தீவிரம் லொஸ் ஏஞ்சல்ஸ் வகைப்பாட்டைத் தழுவி வகைப்படுத்தப்பட்டுள்ளது.:[3][4]
வகுப்பு A | ஒன்று அல்லது மேற்பட்ட சீதமென்சவ்வுப் பாதிப்பு < 5 mm நீளம் |
வகுப்பு B | ஒன்று அல்லது மேற்பட்ட சீதமென்சவ்வுப் பாதிப்பு > 5mm நீளம், ஆனால் சீதமென்சவ்வு மடிப்புக்களுக்கிடையே தொடர்ச்சி இல்லை. |
வகுப்பு C | சீதமென்சவ்வுப் பாதிப்பு > 2 சீதமென்சவ்வு மடிப்புக்களுக்கிடையே தொடர்ச்சியானது, ஆனால் உணவுக்குழாயின் பரிதியின் 75%க்கும் குறைவானது. |
வகுப்பு D | சீதமென்சவ்வுப் பாதிப்பு உணவுக்குழாயின் பரிதியின் 75%க்கும் அதிகமானது. |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Meinhard Classen; Guido N. J. Tytgat; M.D. Ph.D. (2010). Gastroenterological Endoscopy. Thieme. pp. 490–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9783131258526. பார்க்கப்பட்ட நாள் 26 June 2010.
{{cite book}}
: Unknown parameter|coauthors=
ignored (help) - ↑ Lawrence M. Tierney, Jr., MD; Stephen J. McPhee, MD; Maxine A. Papadakis, MD. (2007). Current Medical Diagnosis & Treatment 2007 (46 ed.). The McGraw-Hill Companies. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0071472479.
{{cite book}}
: CS1 maint: multiple names: authors list (link) - ↑ webgerd.com > Los Angeles Classification of Esophagitis பரணிடப்பட்டது 2015-01-30 at the வந்தவழி இயந்திரம் By M. Farivar; In turn citing: Lund ell L, Dent J, Bennett J, et al. Endoscopic assessment of esophagitis: clinical and functional correlates and further validation of Los Angeles classification. Gut 1999; 45:172-80
- ↑ Laparoscopic bariatric surgery , Volyme 1. William B. Inabnet, Eric J. DeMaria, Sayeed Ikramuddin. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7817-4874-7.