உசா வேன்சு
உசா வேன்சு | |
---|---|
ஜனவரி 2025 இல் | |
அமெரிக்க இரண்டாம் குடிமகள் | |
அனுமானப் பதவி ஜனவரி 20, 2025 | |
துணை அதிபர் | சே. டி. வேன்சு |
முன்னையவர் | டக் இகோப் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | உசா பால சிலுகூரி சனவரி 6, 1986 சான் டியேகோ கவுண்டி, காலிபோர்னியா |
அரசியல் கட்சி | குடியரசுக் கட்சி (ஐக்கிய அமெரிக்கா) (2022 முதல்) |
பிற அரசியல் தொடர்புகள் |
|
துணைவர் | சே. டி. வேன்சு (தி. 2014) |
பிள்ளைகள் | 3 |
கல்வி | யேல் பல்கலைக்கழகம் (இளங்கலை, ஜேடி) க்ளாரா கல்லூரி, கேம்பிரிஜ் (முதுதத்துவமாணி) |
உசா வேன்சு (ஆங்கில மொழி: Usha Chilukuri Vance, பிறப்பு: ஜனவரி 6, 1986) என்பவர் அமெரிக்க வழக்குரைஞர் மற்றும் அமெரிக்கத் துணை ஜனாதிபதியான சே. டி. வேன்சுவின் மனைவியாவார்.[2] அதனால் ஐக்கிய அமெரிக்காவின் இரண்டாவது குடிமகளாக அழைக்கப்படுகிறார்.
இவர் 1986 ஜனவரி 6 இல் சான் டியேகோ நகரில் அமெரிக்காவிற்குக் குடிபுகுந்த தெலுங்கு மொழி பேசும் இந்திய அமெரிக்கப் பெற்றோருக்கு மகளாகப் பிறந்தார். இவரின் இயற்பெயர் உஷா பால சிலுக்கூரி ஆகும்.[3][4] இவரது தந்தை இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் இயந்திரப் பெறியியல் பட்டம் பெற்று சான் டியேகோ மாகாணப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றியவராவார்.[5][6] இவரது தாயார் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் மூலக்கூறு உயிரியலராகப் பணிபுரிகிறார்.[7] இவர்கள் 1980களில் [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திரப் பிரதேச] கிருஷ்ணா மாவட்டத்திலிருந்து ஐக்கிய அமெரிக்கவிற்குக் குடிபுகுந்தனர்.[8] இவர் சான் டியோகோவில் மத்திய உயர் வகுப்பினராக வளர்ந்தார்.[9] இவர் யேல் பல்கலைக்கழகத்தில் வரலாற்றில் இலைநிலைப் பட்டமும் யேல் சட்டப் பள்ளியில் முனைவர் பட்டமும் பெற்றார். கல்லூரிக்குப் பின்னர் சட்ட எழுத்தராக பல்வேறு பெடரல் நீதிபதிகளிடம் பணியாற்றினார்.
2014 இல் சே. டி. வேன்சு என்ற வழக்குரைஞரை கென்டக்கியில் திருமணம் செய்தார்.[10][11] 2025 இல் சே. டி. வேன்சு அமெரிக்கத் துணை ஜனாதிபதியாகப் பதவியேற்றதனால் இவர் அமெரிக்க இரண்டாம் குடிமகள் என்ற பட்டத்தைப் பெற்றார். இவர் முதல் ஆசிய அமெரிக்கராகவும் முதல் இந்து அமெரிக்கராகவும் இப்பட்டத்தைப் பெற்றுள்ளார்.[12]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Usha Vance's Ohio Voter Registration". பார்க்கப்பட்ட நாள் 20 January 2025.
- ↑ "Who is Usha Vance, the next second lady of the United States?". November 7, 2024.
- ↑ "Usha Chilukuri, Potential Second Lady of U.S., has a close Vizag connection". தி இந்து. சென்னை. 2024-07-18. Archived from the original on July 19, 2024. பார்க்கப்பட்ட நாள் 2024-09-03.
- ↑ Telugu Personal Names (in ஆங்கிலம்). Central Intelligence Agency. 1964. p. 5.
- ↑ Gopal, B. Madhu (July 18, 2024). "Usha Chilukuri, Potential Second Lady of U.S., has a close Vizag connection" (in en-IN). The Hindu இம் மூலத்தில் இருந்து July 19, 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240719013253/https://www.thehindu.com/news/cities/Visakhapatnam/usha-chilukuri-potential-second-lady-of-us-has-a-close-vizag-connection/article68419084.ece.
- ↑ "Usha Vance, wife of vice presidential nominee JD Vance, has roots in San Diego". San Diego Union Tribune (in அமெரிக்க ஆங்கிலம்). July 21, 2024. Archived from the original on August 3, 2024. பார்க்கப்பட்ட நாள் July 29, 2024.
Usha Chilukuri Vance graduated Mt. Carmel High School in 2004. Her parents hold prominent positions in San Diego's academic world.
- ↑ "Lakshmi Chilukuri". Society for College and University Planning. Archived from the original on August 3, 2024. பார்க்கப்பட்ட நாள் July 15, 2024.
- ↑ Akula, Amaraiah (July 20, 2024). "Usha Vance: Telugu population in US enthused about Second Lady in waiting". The Federal (in ஆங்கிலம்). Archived from the original on July 20, 2024. பார்க்கப்பட்ட நாள் July 20, 2024.
Her parents, Telugu Brahmins from Saipuram near Pamarru in Krishna district, Andhra Pradesh, migrated from India in the 1980s
- ↑ Bhatia, Shireen. "Ohio Senator JD Vance reveals Hindu wife's support for his Christian faith". Christian Today. Archived from the original on July 17, 2024. பார்க்கப்பட்ட நாள் July 16, 2024.
- ↑ Bhatia, Shireen (July 16, 2024). "Ohio Senator JD Vance reveals Hindu wife's support for his Christian faith". Christian Today. Archived from the original on July 17, 2024. பார்க்கப்பட்ட நாள் July 15, 2024.
- ↑ Bernstein, Joseph (July 15, 2024). "Who Is Usha Vance, the Wife of J.D. Vance?". The New York Times இம் மூலத்தில் இருந்து July 16, 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240716123336/https://www.nytimes.com/2024/07/15/style/usha-vance-jd-vance.html.
- ↑ "Who is Usha Chilukuri Vance, first Hindu second lady of US". WION (in அமெரிக்க ஆங்கிலம்). 2024-11-06. பார்க்கப்பட்ட நாள் 2024-11-07.