உள்ளடக்கத்துக்குச் செல்

இறைமறுப்பு நோக்கி விமர்சனங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இறைமறுப்பு நோக்கி விமர்சனங்கள் இறைமறுப்பு கொள்கையின் அரசியல் மற்றும் சமுதாய தாக்கம், செல்லத்தக்கதன்மை ஆகியன குறித்த விமர்சனங்களைக்குறிக்கும். இவை ஆத்திக கோட்பாடுகளின் அடிப்படையிலோ, ஒழுக்கநெறி குறித்தனவாகவோ அல்லது இறைமறுப்புக்கு தனிமாந்தர் வாழ்வில் இருக்கும் தாக்கம், இதன் ஊகங்கள் முதலியவற்றின் அடிப்படையிலோ அமைந்துள்ளன. இறைமறுப்பு பலவகைப்படுவதாலும் இறைமறுப்புக்கு சீரான வரையறைகள் இல்லாததாலும் இவ்வகை விமர்சனங்கள் சிக்கலானவை ஆகும்.

அறியவியலாமைக் கொள்கையாளர் பலர் இறைமறுப்பாளர்களை அறிவியலுக்கு பொருந்தாத அல்லது வறட்டுத்தனமான கொளகியினை உடையவர்கள் என சாடுகின்றனர். குறிப்பாக ஒன்றின் இருத்தலுக்கு ஆதாரம் இலாதது, அதன் இருத்தல் இல்லாததற்கு ஆதாரமாகாது என்பது இவர்களின் நிலைப்பாடு. ('absence of evidence cannot be equated with evidence for absence'.) ஆல்வின் பிலான்டிங் போன்ற மெய்யியளாளர்கள் இறைமறுப்புக்கொள்கையினால் சீரமைந்த அண்டத்தை (fine-tuned Universe) எப்போதும் விளக்க இயலாது என்கின்றனர். இதனால் இறைமறுப்பினை விட அறியவியலாமைக் கொள்கையே சிறந்தது என்கின்றனர்.

பிற விமர்சனங்கள் அறநெறி மற்றும் சமூக ஒழுங்கு மீதான இக்கொள்கையின் விளைவுகளை சாடுகின்றது. அறிவொளிக் கால மெய்யியளாலரானவோல்ட்டயர், கடவுள் இல்லாமல் இருந்தால், சமூதம் கட்டமைப்பைக்காக்க கடவுளை மனிதன் உருவாக்கியே ஆகவேண்டும் என்கின்றார். ஜான் லாக் இறைமறுப்பு சமூக கட்டமைப்பினை சீர்குளைக்கும் என்கின்றார். எட்மண்டு பர்க் சமுதாயத்தின் அடிப்படை தேவையாக சமயத்தினை நோக்குகின்றார். சமயமற்ற சமூதாயம் மனிதனை மிருகம் ஆக்கும் என்றும் அத்தகைய சமூதாயம் நிலைக்க இயலாது என்றும் கூறுகின்றார். திருத்தந்தை பதினொன்றாம் பயஸ் கம்யூனிச இறைமறுப்பு கிறித்தவ கலாச்சாரத்தினை நிக்குவதையே நோக்கமாக கொண்டிருப்பதாக கூறுகின்றார். 1990களில் திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் இறைமறுப்பு கொள்கை மனிதனின் இதயத்தில் இருக்கும் சமய மற்றும் ஒழுக்க நெறிசார் உணர்வுகளை மழுங்கச்செய்து அதனால் எழும் சிக்கல்களை மனிதனும் சமுதாயமும் தனியே எதிர்கொள்ள நேர்கின்றது என்றார்.[1]

இக்கொள்கையினை கொண்டிருந்த பிரெஞ்சுப் புரட்சியாளர்கள், மார்க்சிட்-லெனினிஸ்ட் இறைமறுப்பாளர்கள், மற்றும் 20ம் நூற்றாண்டின் சர்வாதிகார ஆட்சியாளர்கள் பலரின் செயல்கள் இவர்களின் கொள்கையின் விளைவு என விமர்சிக்கப்படுகின்றனர். பிரெஞ்சுப் புரட்சியாரர்களை பர்க் என்பவர் இறைமறுப்பு பைத்தியக்காரர்கள் (atheistical fanaticism) என விமர்சிக்கின்றார். சீனாவின் மா சே துங், வடகொரியா மற்றும் கம்போடியாவின் போல் போட் போன்றோரின் கொடுங்கோலாட்சிக்கு முன்னோடியாக இருந்த ஜோசப் ஸ்டாலின் இறைமறுப்பு ஆட்சியினை 1937இல் வெளியான திருத்த்ந்தையின் சுற்றுமடல் சாடியது. செஸ்டர்டன் "கடவுளை நம்பாதோர் எதை வேண்டுமானாலும் நம்புவர்" என்கின்றார்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் 28 மே 1993இல் அமெரிக்க ஆயர்களுக்கு அளித்த செய்தி
  2. http://www.chesterton.org/discover-chesterton/frequently-asked-questions/cease-to-worship/