இரா. ராஜகோபால தொண்டைமான்
இரா. ராஜகோபால தொண்டைமான் | |
---|---|
வாழ்க்கைத் துணை | சாருபாலா தொண்டைமான் |
பிள்ளைகள் | ஆர். பிருத்விராஜ் தொண்டைமான், இராதா நிரஞ்சனி தேவி |
இர. இராஜகோபால தொண்டைமான் (R. Rajagopala Tondaiman) என்று பிரபலமாக அழைக்கப்படும் ஸ்ரீ பிரக்தம்ப தாச இராஜா இராஜகோபால தொண்டைமான் பகதூர் ஓர் இந்திய சமூகவாதியும், புதுக்கோட்டை அரச இல்லத்தின் தற்போதைய தலைவராக உள்ளார். இவர் அம்மா மக்கள் முன்னேற்றக் கட்சியின் அரசியல்வாதியான சாருபாலா தொண்டைமானை மணந்தார்.
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]இராஜகோபால தொண்டைமான் 1957 செப்டம்பர் 6 ஆம் தேதி இளவரசர் ராஜ ராஜகோபாலா தொண்டைமனின் இளைய சகோதரர் இராதாகிருஷ்ண தொண்டைமான் என்பவருக்கும், அவரது மனைவி இரமா தேவி ஆகியோருக்குப் பிறந்தார். இவர், சென்னையில் தனது பள்ளிப்படிப்பையும், கல்லூரிப் படிப்பையும் முடித்தார். இவரை திருமணம் செய்து கொள்ளாத இவரது மாமா இராஜகோபால தொண்டைமான் இவரது சிறு வயதிலேயே இவரைத் தத்தெடுத்தார்.[1]
பொது வாழ்க்கை
[தொகு]16 ஜனவரி 1997 அன்று இவரது மாமா இராஜகோபால தொண்டைமான் இறந்தபோது இவர், புதுக்கோட்டையின் மன்னரானார். [1] இந்தப் பதவியானது சடங்குகளுக்கும், குடும்பங்களுக்கு சொந்தமான சில அறக்கட்டளைகளுக்கு தலைமை தாங்குவதற்கும் உதவுகிறது. மேலும் ,இவர், ஒரு சில சங்கங்களின் புரவலராகவும், கோவில்களின் பரம்பரை அறங்காவலரகவும் இருக்கிறார்.
துப்பாக்கி சுடுதலில் பயிற்சி பெற்ற இவர்,[2] புதுக்கோட்டை துப்பாக்கி சுடுவோர் சங்கத்தின் தலைவராகவும், தமிழ்நாடு துப்பாக்கி சுடுவோர் சங்கத்தின் துணைத் தலைவராகவும் இருக்கிறார் . இவர் இந்திய தேசியத் துப்பாக்கி சுடுவோர் சங்கத்தின் உறுப்பினராகவும், வேத ஞானத்தை மீட்டெடுப்பதற்கான இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறார் .
குடும்பம்
[தொகு]இவர் சாருபாலா தொண்டைமான் என்பவரை மணந்தார்.[3] இந்த தம்பதியருக்கு ஆர். பிருத்விராஜ் தொண்டைமான்,[2] என்ற ஒரு மகனும், இராதா நிரஞ்சனி தேவி என்ற ஒரு மகளும் உள்ளனர்.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 S. J. Micheal Collins, "Requiem for Tamil Nadu royalty" பரணிடப்பட்டது 2021-07-09 at the வந்தவழி இயந்திரம், DT Next, 22 January 2018.
- ↑ 2.0 2.1 Rahul Ravikumar "This shooter is right on target", The New Indian Express, 13 October 2016.
- ↑ "Sarubala files nomination in Tiruchi", The Hindu, 5 April 2014, updated 21 May 2016.
- ↑ K. Ezhilarasan, "Young daughter of AMMK candidate, elderly mother of VCK chief turn campaigners in Tiruchy", The New Indian Express, 14 April 2019.