உள்ளடக்கத்துக்குச் செல்

இயேசுப் பல்லி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இயேசுப் பல்லி
ஆண் பல்லி, கோசு��்டா ரிக்கா நாடு.
பெண் பல்லி, கோசுட்டா ரிக்கா நாடு.
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
துணைத்தொகுதி:
வகுப்பு:
வரிசை:
துணைவரிசை:
பிடிநகரிகள் [கு 2]
குடும்பம்:
கவசஉச்சிகள்[கு 3]
பேரினம்:
Basiliscus [கு 4]
இனம்:
B. basiliscus
இருசொற் பெயரீடு
Basiliscus basiliscus

அல்லது

Basiliscus americanus
(லின்னேயசு, 1758)

இயேசுப் பல்லி (Common Basilisk, Jesus Christ Lizard, Jesus Lizardம் உயிரியல் பெயர்: Basiliscus basiliscus) என்னும் பல்லி இனம், நடு அமெரிக்காவிலும், தென் அமெரிக்காவிலும் இருக்கிறது. அங்குள்ள மழைக்காடுகளின் ஆறுகள், ஓடைகள் ஆகிய நீர்நிலைகளின் அருகில் காணப்படுகிறது. இந்த உயிரினம் நீரில் நடக்கும் திறனுடையதால், இயேசுப் பல்லி எனப் பலரால் அழைக்கப்படுகிறது.

பெயரியல்

[தொகு]
Basilisk,1642.

கிரேக்கத் தொன்மவியலின் படி, இவ்விலங்கு சேவல், பாம்பு, சிங்கம் ஆகிய விலங்குகளின் உடற்பகுதிகளால் ஒன்றிணைந்து உருவானது. அப்புராணக் கதையின் படி, இது பாம்புகளின் அரசன். மேலும் உற்றுநோக்கும் போது, மனிதன் கல்லாகி விடுவான் என்று கூறப்படுகிறது.[1][கு 5]

βασιλίσκος (பாசிலி'சுகோசு')என்ற கிரேக்க சொல்லுக்கு குட்டிஅரசன்/சிற்றரசன் என்பது பொருள் மொழியை, 1758 ஆம் ஆண்டு லின்னேயசு வெளியிட்ட, இயற்கை முறைமை[1] புத்தகத்தின் 10வது பதிப்பில் காணலாம்.

சூழியல்

[தொகு]
பசிபிக் பெருங்கடல்

இந்த சிற்றினம் கடல் மட்டத்திலிருந்து 600மீட்டர் உயரித்திலேயே, பெரும்பாலும் தனது வாழிடத்தை அமைத்துக் கொள்கிறது. எனினும், கோசுட்டா ரிக்கா நாட்டின் சில இடங்களில் 1200மீட்டர் உயரத்திலும் காணப்படுகிறது. இரு அமெரிக்க நிலப்பகுதிகளிலும் அமைந்துள்ள, பசிபிக் பெருங்கடல் பக்கமே, இது தனது வாழ்விடங்களைச் சிறப்பாக அமைத்துள்ளது. வட அமெரிக்கப் பகுதியான புளோரிடா (அ.ஐ.) மாநிலத்தில், இந்த சிற்றினம் அறிமுகப்(en:Feral) படுத்தப்பட்டுள்ளது.[2]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Basiliscus basiliscus
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
வளர்ந்த இயேசுப் பல்லி

இதன் எதிரிகள்:எலிப் பாம்பும்(Spilotes pullatus), ஆமையும்(Chelydridae) இதன் முதன்மையான எதிரிகள் ஆகும்.

சிறப்பியல்பு

[தொகு]
உடலமைப்பு
இப்பேரினத்திலுள்ள சிற்றனங்களில், இந்த சிற்றினம் பெரியது. தலை உச்சி முதல் முதுகு வரை உயரமான மீன்சிறை/மீனின் இறகு போன்ற அமைப்பு உள்ளது. பழுப்புநிற உடலின் இருபக்கவாட்டிலும் வெள்ளை நிற தடிப்புக்கோடு உள்ளது. நாக்கின் மேற்புறத்திலும் இத்தகைய கோடுள்ளது. இது வயதாகும் போது, வெளிர்நிறத்திற்கு மாறுகிறது. நன்கு வளர்ந்த ஆண் இரண்டரை அடி வரை இருக்கும். பெண் இரண்டு அடிக்குள் இருக்கும். இவற்றின் குட்டி 2கிராம் எடையே இருக்கும். அதன் நீளம், ஏறத்தாழ 37 to 43 மி.மீ இருக்கும்.
உணவு
திறன்
நீரில் நடக்கும் நிகழ்படம்
  • எதிரிகளிடமிருந்து தப்பிப் பிழைக்க, பின்னங்கால்களை மட்டும் பயன்படுத்தி, வேகமாக நீரின் மீது நடந்து கடக்கும் திறனைப் பெற்றிருக்கிறது. பின்னங்கால்களின் அடிப்புறம் சிறுகாற்றுப்பை அமைந்துள்ளது. இதனால் நீரின் மேல் நடக்கும் இயல்பினைப் பெறுகிறது என அறிவியலாளர் கணித்துள்ளனர்.இதன் உடலின் எடை குறைவாக இருப்பதாலும், நீரில் நடப்பது எளிதாகிறது. இதன் சிறியபல்லிகள், 10-20மீட்டர் கடக்கும் திறனைப் பெற்றுள்ளது. மனிதனும் இதே போன்று நீரில் கடக்க, மணிக்கு 105 கி.மீ. வேகத்தில் நடக்க வேண்டும் என்று அறிவியலாளர் கணித்துள்ளனர்.

ஒப்பீடு

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
  1. செதிலுடைய ஊர்வன = en:Squamata
  2. பிடிநகரிகள் = en:Iguania
  3. கவசஉச்சிகள் = en:Corytophanidae
  4. βασιλίσκος (பாசிலி'சுகோசு') = சிற்றரசன் = Basilisk
  5. ISBN = சர்வதேசத் தர புத்தக எண்

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 Robert George Sprackland (1992). Giant lizards. Neptune, NJ: T.F.H. Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0866226346.
  2. Conant, Roger; Collins, Joseph (1991). A Field Guide to Reptiles and Amphibians Eastern/Central North America. பாசு'டன்,(அ.ஐ.): Houghton Mifflin Company. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0395583896.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இயேசுப்_பல்லி&oldid=4071941" இலிருந்து மீள்விக்கப்பட்டது