இந்தியாவின் பொருளாதாரம்
இந்தியப் பொருளாதாரம் | |
---|---|
மும்பை, இந்தியாவின் நிதி மையம் | |
தரவரிசை | 5th (nominal) / 3வது (PPP) |
நாணயம் | 1 இந்திய ரூபாய் (INR) (₹) = 100 பைசா |
நிதி ஆண்டு | 1 ஏப்ரல் – 31 மார்ச் |
சார்ந்துள்ள வர்த்தக அமைப்புகள் | உலக வணிக அமைப்பு, SAFTA,BRICS ஜி-20 மற்றும் ஏனைய அமைப்புகள் |
புள்ளி விவரம் | |
மொ.உ.உ | $1.87 ட்ரில்லியன் (nominal: 5வது; 2013) $5.07 ட்ரில்லியன் (PPP: 3வது; 2013) [1] |
மொ.உ.உ வளர்ச்சி | 4.7% (2013)[2] |
நபர்வரி மொ.உ.உ | $1,3504 (nominal: 130வது; 2013)[1] $3,608 (PPP: 127வது; 2013)[1] |
துறைவாரியாக மொ.உ.உ | சேவைத்துறை (64.8%), தொழில்துறை (21.5%), விவசாயம் (13.7%) (2013) [3][4] |
பணவீக்கம் (நு.வி.கு) | CPI: 8.79%, WPI: 5.05% (January 2014)[5] |
கினி குறியீடு | 33.9 [6] |
தொழிலாளர் எண்ணிக்கை | 487.3 மில்லியன் [7] |
தொழில் வாரியாகத் தொழிலாளர் எண்ணிக்கை | விவசாயம் (49%), தொழில்துறை (20%), சேவை (31%) (2012 est.) |
வேலைய��ன்மை | 2.4% (2009–10)[7] |
முக்கிய தொழில்துறை | தகவல்பரிமாற்றம், textiles, chemicals, food processing, steel, transportation equipment, cement, mining, பெட்ரோலியம், machinery, மென்பொருள், pharmaceuticals |
தொழில் செய்யும் வசதிக் குறியீடு | 134th[8] (2014) |
வெளிக்கூறுகள் | |
ஏற்றுமதி | $225.4 பில்லியன் (2010 est.) |
ஏற்றுமதிப் பொருட்கள் | பெட்ரோலியப் பொருட்கள், precious stones, machinery, இரும்பு and steel, chemicals, வாகனங்கள், ஆடைகள் |
முக்கிய ஏற்றுமதி உறவுகள் | அமீரகம் 12.5%, ஐக்கிய அமெரிக்கா 11.1%, சீனா 6.1%, ஹொங்கொங் 4.2%, சிங்கப்பூர் 4.1% (2009) |
இறக்குமதி | $359 பில்லியன் (2010 est.) |
இறக்குமதிப் பொருட்கள் | கச்சா எண்ணெய், விலையுயர்ந்த கற்கள், machinery, உரங்கள், iron and steel, வேதிப்பொருட்கள் |
முக்கிய இறக்குமதி உறவுகள் | சீனா 11.2%, US 6.5%, UAE 6%, சவூதி அரேபியா 5.7%, ஆத்திரேலியா 4.2%, ஜெர்மனி 4.2%, ஈரான் 4.1% (2009) |
வெளிநாட்டு நேரடி முதலீடு | $35.6 பில்லியன் (2009–10) |
மொத்த வெளிக்கடன் | $238 பில்லியன் (31 திசம்பர் 2010 est.) |
பொது நிதிக்கூறுகள் | |
பொதுக் கடன் | 28.84% of GDP (2010 est.)[9] |
வருவாய் | $185.4 பில்லியன் (2010 est.) |
செலவினங்கள் | $269.8 பில்லியன் (2010 est.) |
பொருளாதார உதவி | $2.107 பில்லியன் (2008)[10] |
கடன் மதிப்பீடு | BBB- (Domestic) BBB- (Foreign) BBB+ (T&C Assessment) Outlook: Stable (இசுடாண்டர்ட் அண்ட் புவர்சு)[11] |
அந்நியச் செலாவணி கையிருப்பு | $319 பில்லியன் (சூலை 2011)[12] |
Main data source: CIA World Fact Book ' |
இந்தியாவின் பொருளாதாரம் (Economy of India) கொள்வனவு ஆற்றல் சமநிலை அடிப்படையில் 3.363 டிரிலியன் டாலர் என்ற அளவில் உலகில் நான்காவது இடத்தில் இருக்கிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதமானது 6.2 என்ற அளவில் இருக்கின்றது.[1] எனினும் இந்திய மக்கள்தொகை மிக அதிகமாக இருப்பதால் தனி நபர் வருவாய் 3100 டாலர் என்ற குறைந்த அளவிலேயே இருக்கிறது.
இந்தியப் பொருளாதாரமானது விவசாயம், கைவினைப் பொருட்கள், தொழில் துறை, மற்றும் சேவைத் துறை போன்ற பலவற்றைச் சார்ந்துள்ளது. சேவைத் துறையே இந்தியாவின் தற்போதைய பொருளாதார வளர்ச்சிக்குக் காரணமாக உள்ளது. இந்தியாவின் மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கானது நேரடியாகவோ மறைமுகமாகவோ விவசாயத்தையே சார்ந்துள்ளது.
வரலாறு
[தொகு]இந்தியாவின் பொருளாதார வரலாறானது மூன்று காலகட்டங்களாகப் பிரிக்கப்படலாம். அவையாவன: காலனி ஆதிக்கத்திற்கு முந்தைய காலகட்டம் (இது 17-ஆம் நூற்றாண்டு வரை), காலனி ஆதிக்க காலகட்டம் (17-ஆம் நூற்றாண்டு முதல் 1947 வரை), மற்றும் சுதந்திரத்திற்கு பிந்தைய காலகட்டம் (1947 முதல் தற்போது வரை).
காலனி ஆதிக்க காலகட்டம்
[தொகு]1850 முதல் 1947 வரை ஆண்ட ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தில் 1880 முதல் 1920 வரை ஆண்டுக்கு 1% என இந்திய பொருளாதாரம் வளர்ச்சி கண்டது. இக்காலகட்டத்தில் ஆங்கிலேயர்களால் ஏற்படுத்தப்பட்ட விதிகளினால் வேளாண்மை பிரிவில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. விவசாயத்தை மையமாக கொண்டு வர்த்தகத்தை மேம்படுத்த மேற்கொண்ட முயற்சி தோல்வியை சந்தித்தது. இதன் விளைவாக பெரும் பஞ்சத்தை இந்தியா சந்திக்க நேரிட்டது.
அரசாங்கத்தின் பங்கு
[தொகு]திட்டமிடல்
[தொகு]இந்திய அரசு சுதந்திரத்திற்குப்பிறகு பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்வதற்காக ஐந்தாண்டு திட்டங்களைத் தீட்டியது. இது திட்டக்குழுவினால் செயல்படுத்தப்படுகிறது. பிரதமரே திட்டக்குழுவின் தலைவராவார். ஐந்தாண்டு திட்டங்கள் 2017 ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது.
நாணய முறை
[தொகு]இந்தியாவில் பயன்படுத்தப்படும் நாணயத்தின் பெயர் ரூபாய் ஆகும். நூறு பைசாக்கள் கொண்டது ஒரு ரூபாய் ஆகும். இந்திய ரூபாய் ₹5, ₹10, ₹20, ₹50, ₹100,₹200, ₹500 மற்றும் ₹2000ஆகிய மதிப்புடைய பணதாள்களாகவும், ₹1, ₹2, ₹5, ₹10 ம���்றும் 50 பைசா ஆகிய மதிப்புடைய நாணயங்களாகவும் கிடைக்கின்றன. இந்திய ரூபாயை பாகிஸ்தான், நேபாளம் ஆகிய நாடுகளின் ரூபாயிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்காக " ₹ " என்பது இந்தியா ரூபாயின் சின்னமாக 2010 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டது.
காரணிகள்
[தொகு]மக்கள் தொகைப் பெருக்கம்
[தொகு]இந்தியாவின் மக்கள்தொகை 121 கோடியாகும்(121,01,93422). இது உலகிலேயே இரண்டாவது மக்கள்தொகை மிகுந்த நாடாகும். உலகின் மக்கள்தொகையில் 17.5 சதவீதத்தை இந்தியா கொண்டுள்ளது. இன்று இந்தியாவில் வாழும் ஒவ்வொரு மூன்று பெயரில் ஒருவர் இளைஞர் ஆவார். 2020 ஆம் ஆண்டிற்குள் தனது மக்கள்தொகையில் 64 சதவீதம் பேர்களை இளைஞர்களாக கொண்டு உலகிலேயே மிகவும் இளமையான நாடாக மாறும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. ஐக்கிய சபையின் கணிப்புகள், 2030 ஆம் ஆண்டிற்குள் இந்தியா சீனாவை மிஞ்சி உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக மாறும் என்று கூறுகிறது. அமெரிக்கா, இந்தோனேசியா, பிரேசில், ஜப்பான், வங்காளம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் கூட்டு மக்கள்தொகையும் இந்தியா என்ற தனி நாட்டின் மக்கள்தொகையும் ஏறத்தாள ஒன்றுதான்.
புவியியலும் இயற்கைவளங்களும்
[தொகு]இந்தியா பலவேறுபட்ட நிலப்பரப்புகளைக்கொண்டுள்ளது. மலைத்தொடர்கள் முதல் பாலைவனம் வரை இந்தியாவில் உள்ளன. வெப்பநிலை மிகக்குளிர் முதல் கடும் வெப்பம் வரை நிலவுகிறது. இந்தியா ஆண்டுக்கு சராசரியாக 1100 மி.மீ. மழையைப் பெறுகிறது. பாசனத்திற்காக 92% நீரானது பயன்படுத்தப்படுகிறது.
இந்தியாவில் பலவகையான தாதுக்கள் கிடைக்கின்றன. நிலக்கரி அதிகம் உள்ள நாடுகளில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது. மேலும் இரும்புத்தாது, மைக்கா, மாங்கனீசு, டைட்டானியம், தோரியம், வைரம், இயற்கை எரிவாயு, பெட்ரோலியம் போன்றவையும் கிடைக்கின்றன.
துறைகள்
[தொகு]விவசாயம்
[தொகு]இந்தியா - இந்நாடு மிகப்பெரிய விவசாய நாடு.பால், வாசனைப் பொருட்கள், காய்கனிகள் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. 1999- 2000 - ஆம் ஆண்டு கணக்கின் படி இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 25% விவசாயம் மற்றும் அதனுடன் இணைந்த துறைகளான காடு வளர்த்தல், மரம் வெட்டுதல், மீன் பிடித்தல் போன்றவற்றின் மூலமே பெறப்பட்டது. மேலும் வேலைவாய்ப்பில் 57 சதவீதத்தினை இத்துறையே வழங்கியது. பசுமைப்புரட்சியின் விளைவாக கடந்த 50 ஆண்டுகளில் உற்பத்தித்திறன் நன்கு அதிகரித்துள்ளது. எனினும் உலகத்தரத்துடன் ஒப்பிடும்போது இது 30 லிருந்து 50 சதவீதம் வரை குறைவாகவே உள்ளது. கல்வியறிவின்மை, சீரற்ற பருவமழை, குறுநிலங்கள், போதிய நீர்ப்பாசன வசதி இல்லாமை போன்றவை இதற்கு காரணங்களாக விளங்குகின்றன.
தொழில்துறை
[தொகு]இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்திய தொழில்துறையின் பங்கு 28.4 சதவீதமாகும். 17 சதவீதம் பேருக்கு இது வேலைவாய்ப்பளிக்கிறது. 1991-ல் ஏற்பட்ட பொருளாதாரச் சீர்திருத்தங்களுக்குப்பிறகு பல பன்னாட்டு நிறுவனங்கள் இங்கு தொழில் தொடங்குகின்றன.
சேவைத்துறை
[தொகு]சேவைத்துறையானது தற்போது வேகமாக வளர்ந்து வரும் துறையாகும். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இதன் பங்கு 1950-ல் 15%-லிருந்து தற்போது 2000-ல் 48 சதவீதமாக அதிகரித்துள்ளது. தகவல் தொழில்நுட்பத்துறையில் இந்தியா முன்னணி வகிக்கிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 "India". International Monetary Fund. பார்க்கப்பட்ட நாள் 2014-04-08.
- ↑ "Indian economy growth at 4.7%=TOI". 2014-05-31 இம் மூலத்தில் இருந்து 2014-05-31 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140531013127/http://m.timesofindia.com/business/india-business/Indian-economy-grew-at-4-7-in-2013-14/articleshow/35794651.cms. பார்த்த நாள்: 31 May 2014.
- ↑ Agriculture's share in GDP declines to 13.7% in 2012-13 The Economic Times (August 30, 2013)
- ↑ India's Fiscal Budget 2012-13 பரணிடப்பட்டது 2015-08-24 at the வந்தவழி இயந்திரம் Chapter 10, Government of India (February 2014)
- ↑ "Easing inflation helps Sensex rise 173 points, the most in a month". The Times of India. 14 February 2014. http://timesofindia.indiatimes.com/business/india-business/Easing-inflation-helps-Sensex-rise-173-points-the-most-in-a-month/articleshow/30400761.cms. பார்த்த நாள்: 2014-02-15.
- ↑ GINI index World Bank (2009-2012)
- ↑ 7.0 7.1 "Report on Employment & Unemployment Survey (2012–13)" (PDF). Bureau of Labour Statistics, Indian Government. January 2014. Archived from the original (PDF) on 2016-08-24. பார்க்கப்பட்ட நாள் 2014-07-25.
- ↑ "Doing Business in India 2014". World Bank. Archived from the original on 2016-02-02. பார்க்கப்பட்ட நாள் 2011-11-21.
- ↑ Public debt, IMF, accessed on 29 ஏப்ரல் 2011.
- ↑ "Net official development assistance received (current US$)". World Bank. பார்க்கப்பட்ட நாள் 2011-03-19.
- ↑ "Sovereigns rating list". இசுடாண்டர்ட் அண்ட் புவர்சு. பார்க்கப்பட்ட நாள் 26 மே 2011.
- ↑ "International Reserves and Foreign Currency Liquidity – இந்தியா". International Monetary Fund. 18 மே 2011. பார்க்கப்பட்ட நாள் 31 மே 2011.
வெளி இணைப்புகள்
[தொகு]- Ministry of Finance
- Ministry of Commerce and Industry
- Ministry of Statistics and Programme Implementation
- India profile at the CIA World Factbook
- India profile at The World Bank
- India – OECD