இட்டெர்பியம் பாசுபைடு
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
பாசுபேனைலிடின்யிட்டெர்பியம்
| |
இனங்காட்டிகள் | |
12037-71-7 | |
EC number | 234-865-2 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
PYb | |
வாய்ப்பாட்டு எடை | 204.01 |
தோற்றம் | கருப்பு நிற படிகங்கள் |
அடர்த்தி | 6.94 கி/செ.மீ3 |
கரையாது | |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | கனசதுரம் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
இட்டெர்பியம் பாசுபைடு (Ytterbium phosphide) என்பது YbP என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படுகிறது. [1] இட்டெர்பியமும் பாசுபரசும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. இட்டெர்பியத்தின் பாசுபைடு சேர்மங்களில் இதுவும் ஒன்றாகும். [2][3]
தயாரிப்பு
[தொகு]இட்டெர்பியமும் பாசுபீனும் திரவ அமோனியாவில் வினைபுரிந்து Yb(PH2)2•5NH3 என்ற அணைவுச் சேர்மம் உருவாகிறது. இதை இட்டெர்பியம் பாசுபைடாக சிதைக்க முடியும்:[4]
இயற்பியல் பண்புகள்
[தொகு]550 பாகை செல்சியசு வெப்பநிலையில் இட்டெர்பியம் பாசுபைடு சிதைவடைகிறது.
ஐதரோகுளோரிக் அமிலம், இராச திராவகம், நைட்ரிக் அமிலம் போன்றவற்றில் இது கரையும். இட்டெர்பியம் பாசுபைடு கனசதுர திட்டத்தில் Fm3m என்ற இடக்குழுவில் கருப்பு நிற படிகங்களாக உருவாகிறது. [5]
பயன்கள்
[தொகு]உயர் ஆற்றல் நிலை, உயர் அலைவரிசை பயன்பாடுகள், சீரொளி மற்றும் இதர ஒளியியல் இருமுனையங்களில் இட்டெர்பியம் பாசுபைடு ஒரு குறைக்கடத்தியாகப் பயன்படுத்தப்படுகிறது. [1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Ytterbium Phosphide" (in ஆங்கிலம்). American Elements. பார்க்கப்பட்ட நாள் 21 December 2021.
- ↑ Shur, Michael S.; Levinshtein, Michael E. (8 December 1995). Best Of Soviet Semiconductor Physics And Technology (1989-1990) (in ஆங்கிலம்). World Scientific. p. 384. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-981-4502-62-7. பார்க்கப்பட்ட நாள் 21 December 2021.
- ↑ Toxic Substances Control Act (TSCA) Chemical Substance Inventory (in ஆங்கிலம்). U.S. Government Printing Office. 1979. p. 90. பார்க்கப்பட்ட நாள் 21 December 2021.
- ↑ Pytlewski, L. L.; Howell, J. K. (1 January 1967). "Preparation of Europium and ytterbium phosphides in liquid ammonia". Chemical Communications (London) (in ஆங்கிலம்). pp. 1280–1280. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1039/C19670001280. பார்க்கப்பட்ட நாள் 21 December 2021.
- ↑ "mp-2390: YbP (cubic, Fm-3m, 225)". materialsproject.org. பார்க்கப்பட்ட நாள் 21 December 2021.