உள்ளடக்கத்துக்குச் செல்

ஆர். சாமி

கட்டற்ற கலைக்களஞ��சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர்களில் ஒருவர் .[1]

வாழ்க்கை

[தொகு]

1987 ஆம் ஆண்டு அதிமுகவில் இணைந்த இவர் 1989 ஆம் ஆண்டு அதிமுகவில் வட்டச் செயலாளராகப் பொறுப்பு வகித்தார். பின்னர் 1996 ஆம் ஆண்டு மேலூர் நகர்மன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் அதிமுக நகரச் செயலாளராக ஆனார். 2000 ஆம் ஆண்டு மாநில இளைஞர் அணி செயலாளராக ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்டார். அதன்பிறகு இவர் 2001, 2006, 2011 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் அண்ணா திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராக  மேலூர் தொகுதியில் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3] ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தினகரன் அணியில் மிகத் தீவிரமாக அரசியலில் ஈடுபடத் தொடங்கினார். தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாநில அமைப்புச் செயலாளராக செயல்பட்டார். சில ஆண்டுகளாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவர், 2018, மே 11 அன்று மரணமடைந்தார்.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "List of MLAs from Tamil Nadu 2011" (PDF). Govt. of Tamil Nadu. Archived from the original (PDF) on 2012-03-20. பார்க்கப்பட்ட நாள் 2017-07-18.
  2. "2001 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-06. பார்க்கப்பட்ட நாள் 2017-06-29.
  3. "2006 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-06-13. பார்க்கப்பட்ட நாள் 2017-06-29.
  4. "மேலூர் தொகுதியின் முன்னாள் அதிமுக எம்எல்ஏ ஆர்.சாமி மரணம்". செய்தி. தி இந்து தமிழ். 11 மே 2018. பார்க்கப்பட்ட நாள் 12 மே 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._சாமி&oldid=3942967" இலிருந்து மீள்விக்கப்பட்டது