ஆராத், இசுரேல்
ஆராத்
| |
---|---|
எபிரேயம் transcription(s) | |
• ISO 259 | ʕarad |
உருவாக்கம் | 21 நவம்பர் 1962 |
அரசு | |
• வகை | நகர் (1995 முதல்) |
• மேயர் | டலி புலோஜ்கோவ் |
பரப்பளவு | |
• மொத்தம் | 93,140 dunams (93.14 km2 or 35.96 sq mi) |
மக்கள்தொகை (2014)[1] | |
• மொத்தம் | 24,229 |
பெயரின் கருத்து | டெல் ஆராத் என்பதிலிருந்து பெயர் பெற்றது |
இணையதளம் | http://www.arad.muni.il |
ஆராத் (Arad, எபிரேயம்: עֲרָד ⓘ; அரபு மொழி: عِرَادَ) என்பது இசுரேலின் தென் மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் நகராகும். இது நெகேவ் மற்றும் யூதேயப் பாலைவனங்களுக்கிடையிலான எல்லையில் அமைந்துள்ளது. இது சாக்கடலின் மேற்கில் 25 கி.மீ (15.5 மைல்) தூரத்திலும், பெர்சபாவிற்கு கிழக்கில் 45 கி.மீ (28 மைல்) தூரத்திலும் உள்ளது. இந்நகரம் சமயச் சார்பற்ற, சமயச் சார்புள்ள அஸ்கெனாசி, செப்பராடி யூதர், பெடோயின்கள், கறுப்பு எபிரேயர் உட்பட்டவர்களுக்கும், புதிதாகக் குடியேறியவர்களுக்கும் என 24,229 மக்கள் தொகையினரின் வீடாகவுள்ளது. இந்நகரம் அதன் சுத்தமான, உலர்ந்த காற்று ஆகியவற்றால் உலகளவில் ஈழை நோய்க்கு ஒரு முக்கிய தளமாகவும் இருக்கிறது.[2][3]
1920 களில் இப்பகுதியில் குடியேற முயற்சி செய்த பின், ஆராத் இசுரேலில் முதல் திட்டமிட்ட நகராக, ஒர் இசுரேலிய வளர்ச்சி நகரமாக நவம்பர் 1962 இல் நிறுவப்பட்டது. 1990 இல் பொதுநலவாய சுதந்திர நாடுகளில் இருந்து அலியாவுடன் ஆராத் மக்கள் தொகை குறிப்பிடத்தக்க அளவில் வளர்ந்து, 2002 இல் 24,500 குடியிருப்பாளர்களைக் கொண்டிருந்தது.
ஆராத்தின் சுவடுகளாக டெல் ஆராத்தின் இடிபாடுகள், ஆராத் பூங்கா, ஒரு உள்நாட்டு விமானத்தளம், இசுரேலின் முதலாவது சட்டபூர்வு பந்தயச் சுற்று ஆகியன காணப்படுகின்றன. இந்நகரம் அதன் ஆண்டு கோடை இசை விழாவான "ஆராத் விழா" மூலம் நன்கு அறியப்படுகிறது.[4]
வரலாறு
[தொகு]தொல்பழங்காலம்
[தொகு]ஆராத் என்பதன் பெயர் டெல் ஆராத்தில் அமைந்திருந்த விவிலிய கேனான் நகர் மூலம் பெறப்பட்டது. தற்போதைய ஆராத்தின் மேற்கில் கிட்டத்தட்ட 8 கிலோமீட்டர்கள் (5.0 mi) தூரத்தில் அமைந்துள்ள விவிலிய தொல்பொருள் பகுதியில் பிரபல மட்பாண்ட துண்டு கண்டுபிடிக்கப்பட்டது.[5] விவிலியம் (நீதிபதிகள் 1:16) இவ்விடம் பற்றிக் குறிப்பிடுகையில், கானானியர்களின் அரணாக விளங்கிய இவ்விடத்தில், கானானிய அரசன் இசுரேலியர்கள் நெகேவிலிருந்து யூதோய மலைகளுக்கு முன்னேறுவதைத் தடுத்தான் என்கிறது. ஆயினும் டெல் ஆராத் 1,200 வருடங்களுக்கு முன் இசுரேலியர்கள் வருவதற்கு முன்பு அழிக்கப்பட்டது. எகிப்திய அரசன் முதலாம் சொசெங்கின் தொடர் வரலாறு டெல் ஆராத்தில் குடியேற்றம் நிகழ்ந்ததாகக் காட்டுகிறது. பைசாந்தியப் பேரரசு காலத்தில், இவ்விடம் சரியாக எசேபியசுவினால் அடையாளங் காணப்பட்டதுடன், "ஆராத்" எனும் பெயர் பெடோயின் மக்களினால் காக்கப்பட்டது.[6] பண்டைய ஆராத் கிறித்தவ மறைமாவட்டமாக இருந்தது. கத்தோலிக்க திருச்சபை தற்போது ஆராத்தை மறைந்த மறைமாவட்டமாகப் பட்டியலிட்டுள்ளது.[7]
பிரித்தானிய ஆணைக் காலம்
[தொகு]வெளியேறிய யூதப் படையணி வீரர்களை பிரித்தானிய ஆணை அரசு இப்பகுதியில் குடியேற அனுமதித்ததும், தற்காலத்தில் முதலாவது குடியேற்ற முயற்சி பாலத்தீன ஆணைக் காலப்பகுதியில் யூதர்களின் "இயிஸ்வு" எனும் அமைப்பினால் 23 பெப்ரவரி 1921 அன்று மேற்கொள்ளப்பட்டது. ஒன்பது ஆண்களும் இரண்டு பெண்களும் குடியேற முயன்றார், ஆனால் நான்கு மாதங்களில் அப்பகுதியில் தண்ணீர் இல்லாததால் அவ்விடத்தை விட்டு வெளியேறினர்.[5]
இசுரேலிய அரசு
[தொகு]15 நவம்பர் 1960 இல் திட்டமிடல் பிரிவு ஒன்று இசுரேலிய அமைச்சரவையினால், வடகிழக்கு நெகேவ் பாலைவனம், ஆராத் பகுதியில் குடியேற்றத்திற்கான சாத்தியம் குறித்து ஆராய நியமனம் செய்யப்பட்டது. ஆரம்ப கட்டமாக 50,000 இசுரேலிய லிராக்கள் ஆர்யே எலியாவ் தலைமையின் கீழ் இருந்த திட்டத்திற்காக வழங்கப்பட்டது. 31 சனவரி 1961 அன்று புது நகரத்திற்கா இறுதி இடம் முடிவு செய்யப்பட்டதுடன் (தென்மேற்கு கிதோத் மலையிலிருந்து 3.5 கிலோமீட்டர்கள் (2.2 mi)), சாலை, குடிநீர் இணைப்புகள் பற்றி விவரங்களும் முடிவு செய்யப்பட்டன. மார்ச்சு 1961 ஆம் ஆண்டில், 20,000 குடியிருப்பாளர்களுக்கான ஒரு முழு நகரத் திட்டமும் அதற்கான வரைபடம் உருவாகியது. அதன் பிரதான கட்டடக்கலைஞராகவும் வடிவமைப்பாளராகவும் யோனா பிட்டெல்சன் இருந்தார்.[8]
உசாத்துணை
[தொகு]- ↑ 2014 populations Israel Central Bureau of Statistics
- ↑ Kantor SZ, Frank M, Hoch-Kantor D (1966). "Airborne allergens and clinical response of asthmatics in Arad, a new town in a desert area in Israel". The Journal of Allergy 37 (2): 65–74. doi:10.1016/0021-8707(66)90122-5. பப்மெட்:5217164.
- ↑ Frank M, de Vries A (1967). "Further observation on the clinical response of asthmatic settlers in Arad, Israel". The Journal of Allergy 40 (3): 182–183. doi:10.1016/0021-8707(67)90007-X. பப்மெட்:5231431.
- ↑ Dafna Arad (3 ஆகத்து 2011). "Arad Festival returns to its rock roots". Haaretz. http://www.haaretz.com/print-edition/news/arad-festival-returns-to-its-rock-roots-1.376644. பார்த்த நாள்: 17 செப்டம்பர் 2014.
- ↑ 5.0 5.1 Vilnai, Ze'ev (1979). "Arad". Ariel Encyclopedia Volume 7. Israel: Am Oved. 6002–6003.
- ↑ Mapa's concise gazetteer of Israel (in ஹீப்ரூ). El'azari, Yuval (ed.). Tel Aviv, Israel: Mapa Publishing. 2005. pp. 434–435. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 965-7184-34-7.
{{cite book}}
: CS1 maint: others (link) - ↑ Annuario Pontificio 2013 (Libreria Editrice Vaticana 2013 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-88-209-9070-1), p. 836
- ↑ "Arad – First Days – Preface" (in ஹீப்ரூ). Arad Historical Museum. Archived from the original on 2007-06-21. பார்க்கப்பட்ட நாள் 2007-11-30.
வெளி இணைப்புகள்
[தொகு]- Official website பரணிடப்பட்டது 2011-02-24 at the வந்தவழி இயந்திரம் (எபிரேய மொழி)
- Aradnik, the internet version of Arad's local HaTzvi weekly (எபிரேய மொழி)
- Arad by Google Maps
- Arad GIS system பரணிடப்பட்டது 2008-12-20 at Archive.today (எபிரேய மொழி)
- Arad Doll Museum