உள்ளடக்கத்துக்குச் செல்

அலை–துகள் இருமை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அலை-துகள் இருமை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இயற்பியல், வேதியியல் ஆகிய துறைகளில், அலை–துகள் இருமை அல்லது அலைகளின் இருமை நிலை (wave–particle duality) என்றால் எல்லாப் பொருட்களும் (அதாவது அந்த பொருட்களில் உள்ள எல்லா எதிர்மின்னிகளும்) அலை போன்ற தன்மையும் , துகள் போன்ற தன்மையும் கொண்டிருப்பன என்ற கருத்துரு ஆகும். குவாண்டம் பொறிமுறையின் மையக் கருத்துருவான இது, அலை, துகள் என்னும் கருத்துருக்களால் முழுமையாக விளக்கப்பட முடியாத பொருள்களின் நடத்தைகளை விளக்க முயல்கிறது. குவாண்டம் பொறிமுறையின் பல்வேறு விளக்கங்கள் இந்த முரண்பாட்டுத் தோற்றத் தன்மையை தெளிவாக்க முயல்கின்றன.

இருமைத் தன்மை என்னும் எண்ணக்கரு, ஒளி, பொருள் என்பன தொடர்பாக 1600 களில், கிறிஸ்டியன் ஹூய்கென், ஐசாக் நியூட்டன் ஆகியோரால் ஒன்றுக்கொன்று எதிரான இரு கொள்கைகள் முன்வைக்கப் பட்டபோது இடம்பெற்ற விவாதங்களின் அடிப்படையில் உருவானது. அல்பர்ட் ஐன்ஸ்டீன், லூயி டீ பிராக்லி ஆகியோரின் ஆராய்ச்சிகளின் விளைவாக தற்கால அறிவியல் கொள்கைகள் எல்லாப் பொருட்களும், அலை, துகள் இயல்புகள் இரண்டையும் கொண்டுள்ளன என ஏற்றுக்கொள்கின்றன. இத் தோற்றப்பாடுகள் அடிப்படைத் துகள்களுக்கு மட்டுமன்றி, அணுக்கள், மூலக்கூறுகள் போன்ற கூட்டுத் துகள்களுக்கும் பொருந்துவதாக அறியப்பட்டுள்ளது.

டே பிராலியின் அலைநீளம்

[தொகு]

லூயி டே பிராலி 1924 ஆம் ஆண்டில் அலை-துகள்களின் இருமைப் பண்பைப் பற்றிய தனது கருத்தினை முதன்முதலாக பிரெஞ்சு அகாதெமியில் டி பிராலி கருதுகோள் மூலம் கோடிட்டுக் காட்டினார். ஒளி மட்டுமல்லாமல், அனைத்து பருப்பொருள்களும்,[1][2] அலை-போன்ற தன்மை கொண்டுள்ளன, ஒரு குறிபிட்ட "m" திணிவு கொண்ட துகள், ஒரு குறிப்பிட்ட திசை வேகம் "v" இல் சென்றால், "λ" என்ற அலைநீளம் கொண்ட ஓர் அலை போன்று நடந்துகொள்ளும் என்று கூறினார்.

இங்கு pஉந்தம், h - பிளாங்க்கு மாறிலி.

பொருள்களின் அலைகள் (matter waves) டி புறாக்ளி அலைகள் என்றும் இதன் அலைநீளம் டி புறாக்ளி அலைநீளம் என்றும் அழைக்கப்படுகிறது. இதுவே பொருள்களின் அலைக் கோட்பாடிற்கு முதல் படியாக அமைந்தது[3].

டே பிராலியின் கோட்பாட்டிற்காக அவருக்கு 1929 ஆம் ஆண்டில் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Donald H Menzel, "Fundamental formulas of Physics", volume 1, page 153; Gives the de Broglie wavelengths for composite particles such as protons and neutrons.
  2. Brian Greene, The Elegant Universe, page 104 "all matter has a wave-like character"
  3. G. Venkataraman. Quantum Revolution I THE BREAKTHROUGH, Page No: 33, Universities Press, 1997.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலை–துகள்_இருமை&oldid=3239352" இலிருந்து மீள்விக்கப்பட்டது