உள்ளடக்கத்துக்குச் செல்

அர்பத் எலோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அர்பத் எலோ
பிறப்புÉlő Árpád Imre
(1903-08-25)ஆகத்து 25, 1903
அங்கேரி
இறப்புநவம்பர் 5, 1992(1992-11-05) (அகவை 89)
விஸ்கொன்சின்
தேசியம்அங்கேரிய அமெரிக்கன்
துறைஇயற்பியல்
பணியிடங்கள்மார்க்கெட் பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்சிக்காகோ பல்கலைக்கழகம்

அர்பத் எம்ரிக் எலோ (Arpad Emrick Elo, ஆகஸ்ட் 25, 1903 – நவம்பர் 5, 1992, இயற்பெயர்: எலோ அர்பத் இம்ரே[1][2]) அவர்கள் எலோ தரவுகோள் முறையை உருவாக்கியவர். இவர் அங்கேரியில் பிறந்து பின்னர் அமெரிக்காவில் குடியேறிய ஓர் இயற்பியல் பேராசிரியர் ஆவார்.

சதுரங்க விளையாட்டு வீரர்

[தொகு]

எலோ மில்வோக்கி நகரத்தின் மார்க்வெட் பல்கலைகழகத்தில் இயற்பியல் பேராசிரியராகப் பணி புரிந்தார், பல்கலைக்கழகத்தில் இவர் ஒரு சதுரங்க விளையாட்டு வீரரும் ஆவார். மில்வோக்கி நகரத்தின் சிறந்த சதுரங்க விளையாட்டு வீரராகவும் திகழ்ந்தார்.

எலோ தரவுகோள் முறை

[தொகு]

முதன்மைக் கட்டுரை:எலோ தரவுகோள் முறை

எலோ தரவுகோள் முறை (Elo rating system) சதுரங்கம் போன்ற போட்டியாளர்-எதிர்-போட்டியாளர் பங்கேற்கும் விளையாட்டுக்களில் விளையாட்டாளர்களின் ஒப்பு நோக்கத்தக்க திறன் நிலைகளை கணக்கிடுவதற்கான முறையாகும். இந்த முறையை உருவாக்கிய அர்பத் எலோ பெயரிலேயே இது குறிப்பிடப்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Veszprém megyei életrajzi lexikon – ÉLŐ Árpád Imre". Archived from the original on 2013-08-18. பார்க்கப்பட்ட நாள் 2015-01-26.
  2. "Romániai Magyar Szó, 2003. augusztus 26". Archived from the original on 2007-09-27. பார்க்கப்பட்ட நாள் 2015-01-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அர்பத்_எலோ&oldid=3541448" இலிருந்து மீள்விக்கப்பட்டது