உள்ளடக்கத்துக்குச் செல்

அமர்க்களம் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அமர்க்களம்
இயக்கம்சரண்
தயாரிப்புவெங்கடேஷ்வராலயம் (வி. சத்யநாராயணா,
வி. சிமந் குமார்)
இசைஎச். ஆர். பரத்வாஜ்
நடிப்புஅஜித் குமார்,
சாலினி,
ரகுவரன்,
ராதிகா,
நாசர்,
வினுச்சக்கரவர்த்தி,
தாமு,
வையாபுரி,
சார்லி,
ரமேஷ் கண்ணா
அம்பிகா
ஒளிப்பதிவுஏ. வெங்கடேஷ்
படத்தொகுப்புசுரேஷ் அர்ஸ்
வெளியீடு1999
நாடு இந்தியா
மொழிதமிழ்

அமர்க்களம் (Amarkalam) 1999 இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் அஜித் குமார், சாலினி, ரகுவரன், நாசர் மற்றும் பலர் நடித்திருந்தனர். அஜித் குமாரின் 25-ஆவது படமான இது வர்த்தக ரீதியாகவும் வெற்றித் திரைப்படமானது.[1]

இத்திரைப்படத்தில் சாலினியுடன் நடித்த அஜித், பின்னர் சாலினியைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.[2][3]

கதை

[தொகு]

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

ஆரம்ப காலங்களில் கொலைகள், சண்டைகள் எனப் புரியும் அஜித் ரகுவரனால் தனது சொந்த மகளான சாலினியைக் கடத்திச் செல்லுமாறு கேட்கின்றார். ஆனால் அவள் தனது சொந்த மகள் என்பதனைத் தெரிந்து கொள்ளாது பழைய பகையினைத் தீர்ப்பதாக எண்ணி அவளைக் கடத்திச் சென்று காதலிப்பதாக நடிக்கும்படி கேட்டுக் கொள்கின்றார். அவர் கூறியபடியே கடத்திச் செல்லும் அஜித் பின்னர் சாலினியினினால் நல்லவனாக மாற்றம் பெற்று அவள் மீது காதலும் கொள்கின்றார்.

நடிகர்கள்

[தொகு]

பாடல்கள்

[தொகு]

இத்திரைப்படத்தின் பின்னணி இசை, பாடல்கள் ஆகியவற்றிற்கு பரத்வாஜ் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை வைரமுத்து எழுதியிருந்தார். படத்தில் சாலினி ஒரு பாடலைப் பாடினார். சரண் ஒரு பாடலில் அவரது ஆலாபனையைக் கேட்டபின் சாலினியைப் பரிந்துரை செய்தார். "சத்தம் இல்லாத" என்ற பாடல் இப்படத்தில் இருக்க வேண்டும் என்று சரண் விரும்பவில்லை. அதற்காக அஜித் குமார் கதாபாத்திரத்தில் சோகமான கடந்த காலத்தை உருவாக்கி, படத்தில் பாடல் இருப்பதாக அமைத்தார். பாடலின் வரிகள் வைரமுத்துவின் ஒரு கவிதையை அடிப்படையாகக் கொண்டவை. பாடலில் ஒவ்வொரு வரியும் "வேண்டும்" என்ற சொல்லுடன் முடிந்தது. பரத்வாஜ், "வேண்டும்' என்பதற்குப் பதிலாக, 'கேட்டேன்' என்ற சொல் வரவேண்டும் என்று பரிந்துரைத்தார். அதனால் கதாநாயகன் எல்லாவற்றையும் கேட்டார். ஆனால் இறுதியில் மரணம் உட்பட எதுவும் கிடைக்கவில்லை என்பதை பாடல் தெரிவிக்கும். பாடகர் எஸ். பி. பாலசுப்பிரமணியம் இப்பாடலை மூச்சு விடாமல் பாடுவது போல் நிகழ்த்தப்பட்டது.

பாடல்கள்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "காலம் கலிகாலம்"  ஸ்ரீனிவாஸ் 4:40
2. "சொந்த குரலில் பாட"  சாலினி 4:59
3. "சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்"  எஸ். பி. பாலசுப்பிரமணியம், சுஜாதா மோகன் 4:19
4. "உன்னோடு வாழாத வாழ்வென்ன"  கே. எஸ். சித்ரா 5:18
5. "மேகங்கள் என்னைத் தொட்டு"  எஸ். பி. பாலசுப்பிரமணியம் 5:44
6. "என்ன செய்தாயோ"  பரத்வாஜ் 2:19
மொத்த நீளம்:
27:19

மேற்கோள்கள்

[தொகு]
  1. Pillai, Sreedhar (31 May 2002). "The age of rage". தி இந்து இம் மூலத்தில் இருந்து 4 July 2003 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20030704161455/http://www.hindu.com/thehindu/fr/2002/05/31/stories/2002053100910200.htm. 
  2. Ashok Kumar, S.R. (15 September 2006). "From a child artiste to badminton player". தி இந்து இம் மூலத்தில் இருந்து 4 March 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090304152603/http://www.hindu.com/2006/09/15/stories/2006091517700200.htm. 
  3. Rajitha (15 September 1999). "Pyar to hona hi tha". Rediff.com. Archived from the original on 4 March 2016. பார்க்கப்பட்ட நாள் 4 January 2012.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமர்க்களம்_(திரைப்படம்)&oldid=4166613" இலிருந்து மீள்விக்கப்பட்டது