உள்ளடக்கத்துக்குச் செல்

அப்பச்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அப்பச்சன் (1925 – ஏப்ரல் 23, 2012), இந்தியத் திரைப்பட இயக்குநரும் தயாரிப்பாளரும் தொழில் முனைவோரும் ஆவார். மலையாளத் திரைப்படத் துறையில் இவரது பங்களிப்புகள் குறிப்பிடத்தக்கவை.

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

மாளியம்புரக்கல் சாக்கோ புன்னூஸ் என்பது இவரது இயற்பெயர். ஆலப்புழா மாவட்டத்தில் பிறந்தவர். ஜிஜோ, ஜோஸ் ஆகிய மகன்கள் உள்ளனர். இவர் 1924 பிப்ரவரி 6-ல், ஆலப்புழை மாவட்டத்தில் புளிங்குன்று என்ற இடத்தில் பிறந்தார். ஏப்ரல் 23, 2012 இல் தனது 87 ஆவது வயதில் கொச்சியில் மரணமடைந்தார்.[1]

திரைத்துறை

[தொகு]

உதயா, நவோதயா உள்ளிட்ட நிறுவனங்களின் மூலம் நூற்றுக்கும் அதிகமான திரைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்தியாவில் வெளியான முதல் 3 டி திரைப்படமான மைடியர் குட்டிச்சாத்தான் என்ற திரைப்படத்தை தயாரித்தவர். இது 1984 இல் பிரதமரின் தங்க விருதினைப் பெற்றது. தூர்தர்ஷனில் வெளியான விவிலிய கதைத்தொடரை இயக்கியவரும் இவரே. திரைத்துறையைச் சார்ந்த அமைப்புகளில் பதவி வகித்துள்ளார்.

இயக்கியவை

[தொகு]

தயாரித்தவை

[தொகு]

விரு��ுகள்

[தொகு]
  • ஜே.சி. டேனியல் விருது (2011)[2]

பிற

[தொகு]

இந்தியாவின் முதல் கேளிக்கைப் பூங்காவான ’கிஷ்கிந்தா’வைச் சென்னைக்கருகே உருவாக்கினார்.

சான்றுகள்

[தொகு]
  1. "Veteran Malayalam film producer Navodaya Appachan passes away". Odishatoday.com. Archived from the original on 2012-08-08. பார்க்கப்பட்ட நாள் 2012-04-24.
  2. பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா (28 February 2011). "JC Daniel award for Navodaya Appachan". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. திருவனந்தபுரம். Archived from the original on 8 மார்ச் 2012. பார்க்கப்பட்ட நாள் 4 March 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Unknown parameter |= ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்பச்சன்&oldid=4169216" இலிருந்து மீள்விக்கப்பட்டது