உள்ளடக்கத்துக்குச் செல்

அந்தணப்பேட்டை அண்ணாமலைநாதர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அந்தணப்பேட்டை அண்ணாமலைநாதர் கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.

அமைவிடம்

[தொகு]

இக்கோயில் நாகப்பட்டினம்-திருவாரூர் சாலையையொட்டி தென்மேற்கே 3 கிமீ தொலைவில் உள்ளது. அந்தணர்கள் பெரும்பாலும் குடியிருந்த பகுதிகளை அகரம் என்றழைக்கப்படும் நிலையில் அந்தணர்பேட்டை எனப் பெயர் பெற்றுள்ளது. [1]

இறைவன், இறைவி

[தொகு]

தானே தோன்றியவராக உள்ள இறைவன் அண்ணாமலையார் என்றும் அண்ணாமலைநாதர் என்றும் அழைக்கப்படுகிறார். இறைவி உண்ணாமுலையம்மன் நான்கு கரங்களுடன் நின்ற கோலத்தில் உள்ளார். [1]

அமைப்பு

[தொகு]

ராஜகோபுரத்தைக் கொண்டு அமைந்துள்ள இக்கோயிலின் வெளிச்சுற்றில் பரிவார தேவதைகள் காணப்படுகின்றனர். [1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 திருக்கோயில்கள் வழிகாட்டி, நாகப்பட்டினம் மாவட்டம், தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை, 2014

வெளியிணைப்புகள்

[தொகு]