உள்ளடக்கத்துக்குச் செல்

சாம்வெஸ்ட் நடவடிக்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அச்சுக்கான பதிப்புக்கு இனி மேலும் ஆதரவில்லாததுடன் அது காட்சிப்படுத்தல் தவறுகளைக் கொண்டிருக்கலாம். உமது உலாவியின் நூற்குறிகளை இற்றை செய்து, அதற்குப் பகரமாக உலாவியின் இயல்பிருப்பு அச்சிடல் தொழிற��பாட்டைப் பயன்படுத்துக.

சாம்வெசுட் நடவடிக்கை (சாம்வெஸ்ட் நடவடிக்கை, Operation Samwest) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு போர் நடவடிக்கை. இது ஓவர்லார்ட் நடவடிக்கையின் ஒரு பகுதியாகும்.

ஜெர்மனியின் ஆக்கிரமிப்பிலிருந்த பிரான்சின் மீதான நேசநாட்டுப் படையெடுப்பு நார்மாண்டிக் கடற்கரையில் ஜூன் 6, 1944ல் ஆரம்பித்தது. இப்படையெடுப்பு துவங்க சில மணி நேரங்கள் முன்னர் பிரெஞ்சு வான்குடை வீரர்கள் பிரிட்டானி பகுதியில் வான்வழியே தரையிறங்கினர். பிரிட்டானி பகுதியிலிருந்து ஜெர்மானியப் படைகளும் பீரங்கிகளும் கடல்வழி தரையிறங்குதல் நடந்து கொண்டிருக்கும் நார்மாண்டிப் பகுதிக்கு செல்வதைத் தடுத்து நாசம் விளைவிப்பது அவர்களது இலக்கு. இதே இலக்குடன் பிரிட்டானியின் இன்னொரு பகுதியில் டிங்சன் நடவடிக்கையும் தொடங்கப்பட்டிருந்தது. ஒரு வார காலத்தில் இரு குழுக்களும் உள்ளூர் பிரெஞ்சு எதிர்ப்புப் படைகளுடன் சேர்ந்து பிரிட்டானிப் பகுதியில் நாச வேலைகளில் ஈடுபட்டன. ஜூன் 12ம் தேதி ஜெர்மானியப் படைகள் சாம்வெஸ்ட் குழுவினரின் தலைமையகத்தைக் கண்டுபிடித்துத் தாக்கியதால், நடவடிக்கை கைவிடப்பட்டு பிரெஞ்சுப் படையினர் கலைந்து சென்றனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாம்வெஸ்ட்_நடவடிக்கை&oldid=813894" இலிருந்து மீள்விக்கப்பட்டது