தூத்பத்ரி
தூத்பத்ரி | |
---|---|
| |
நாடு | இந்தியா |
ஒன்றியப் பகுதி | ஜம்மு காஷ்மீர் |
மாவட்டம் | பட்காம் |
வட்டம் | கான்சாஹிப் |
ஏற்றம் | 2,730 m (8,960 ft) |
மொழிகள் | |
• அலுவல் | உருது, ஆங்கிலம் |
மொழிகள் | |
• உள்ளூர் | காஷ்மீரி, உருது கோஜ்ரி, பஹாரி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 191111 |
வாகனப் பதிவு | ஜேகே04 |
தூத்பாத்ரி (Doodhpathri) (பால் பள்ளத்தாக்கு) என்பது சுற்றுலாத் தலமாகவும், இந்தியாவின் ஒன்றியப் பகுதியான ஜம்மு-காஷ்மீரிலுள்ள ஒரு மலை வாழிடமாகவும் உள்ளது. இது பட்காம் மாவட்டத்தின் பீர்வா பகுதியில் அமைந்துள்ளது. [1] இது, கடல் மட்டத்திலிருந்து 2,730 மீட்டர் (8,960 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. ஒன்றியப்பகுதியின் கோடைக்காலத் தலைநகரான சிறீநகரிலிருந்து 42 கி.மீ. (26 மைல்) தொலைவிலும், மாவட்டத் தலைமையகமான பட்காமிற்கு 22 கி.மீ. (14 மைல்) தொலைவிலும் அமைந்துள்ளது.
வரலாறும் சொற்பிறப்பியலும்
[தொகு]"தூத்பாத்ரி" என்ற பெயருக்கு பால் பள்ளத்தாக்கு என்று பொருள். காஷ்மீரின் புகழ்பெற்ற துறவி ஷேக் உல் ஆலம் ஷேக் நூர் தின் நூரானி இங்கு பிரார்த்தனை செய்ததாகவும், ஒரு முறை அவர் பிரார்த்தனை செய்வதற்கு புல்வெளிகளில் தண்ணீரைத் தேடியபோது, ஒரு குச்சியால் தரையில் குத்தியதாகவும் அப்போது தண்ணீருக்கு பதிலாக பால் வந்ததாகவும் எனவே இப்புல்வெளிக்கு "தூத்பத்ரி" என்ற பெயர் வந்தது எனவும் ஒரு கதை உள்ளது. ஆனால் உண்மையானக் காரணம், புல்வெளிகளில் பாயும் நீர் தூரத்திலிருந்து பார்க்கும்போது பாலின் வெண்மையான நிறத்தைக் கொண்டுள்ளது. மேலும், ஆண்டு முழுவதும் மிகவும் குளிராக இருக்கிறது. பரந்த புல்வெளிகளுக்கு மேல் பசுமையான புற்களும், பெரிய கற்களின் மீது ஓடும் நீரோடைகளும் அதன் அழகை மேலும் அதிகரிக்கின்றன. தூத்பத்ரி, சாங் பகுதி வரை பல வண்ண மலர்களின் பன்முகத்தன்மை கொண்ட புல்வெளி நிலப்பரப்புகளைக் கொண்டிருக்கிறது. புகழ்பெற்ற தோசா மைதானம் இதன் மேற்கில் அமைந்துள்ளது. [2]
நிலவியல்
[தொகு]இமயமலையின் பிர் பாஞ்சால் மலைத்தொடரில் ஒரு கிண்ண வடிவிலான பள்ளத்தாக்கில் கடல் மட்டத்திலிருந்து 2,730 மீ (8,957 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. இது பனி மூடிய மலைகளாலும், பைன், தேவதாரு , போன்ற மரங்களாலும் சூழப்பட்டுள்ளது. இந்தப் புல்வெளிகள் குளிர்காலத்தில் பனியால் மூடப்பட்டிருக்கும்.
புள்ளிவிவரங்கள்
[தொகு]தூத்பத்ரிக்கு நிரந்தர குடியேற்றம் என்பது இல்லை. மேலும், கடுமையான பனிப்பொழிவு காரணமாக குளிர்காலத்தில் இதை அணுக முடியாது. கோடைகாலத்தில் பட்காம் மாவட்டத்தின் சமவெளிகளில் இருந்து இடையர்கள் தங்களது கால்நடைகளை மேய்ச்சலுக்காக அழைத்து வந்து இங்கு சுமார் ஆறு மாதங்கள் தங்கியிருக்கிறார்கள்.
அணுகல்
[தொகு]சிறிநகர் அல்லது சிறீநகர் விமான நிலையத்திலிருந்து தூத்பத்ரியை கார் அல்லது பேருந்து மூலம் 2-3 மணி நேரத்திற்குள் எளிதாக அணுக முடியும். இதனை அடைய ஸ்ரீநகர் -பட்காம்-கன்சாஹிப்-இரையார் வழியாக மொத்தம் சுமார் 42 கிமீ (26 மைல்) கடக்க வேண்டும். [3] [4] [5]
விமானம் மூலம்
[தொகு]சிறீநகர் வானூர்தி நிலையம் (ஸ்ரீநகர், ஜம்மு-காஷ்மீர்) அருகிலுள்ள விமான நிலையமாகும். இந்த விமான நிலையத்திலிருந்து தூத்பத்ரி 40 கி.மீ தூரத்தில் உள்ளது. இது கார் மூலம் செல்ல 1 மணிநேரம் ஆகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ ":: District Budgam (Official website)". budgam.nic.in. Archived from the original on 2016-03-04. பார்க்���ப்பட்ட நாள் 2015-10-13.
- ↑ "The unexplored wealth of Doodhpathri". www.greaterkashmir.com. Archived from the original on 2016-01-17. பார்க்கப்பட்ட நாள் 2015-10-13.
- ↑ "Doodhpathri". www.daletravels.net. Archived from the original on 2015-08-17. பார்க்கப்பட்ட நாள் 2015-10-13.
- ↑ "Unexplored Doodhpathri". kashmirscan.net. Archived from the original on 2013-12-16. பார்க்கப்பட்ட நாள் 2015-10-13.
- ↑ "Doodhpathri". budgam.nic.in. பார்க்கப்பட்ட நாள் 14 January 2021.