உள்ளடக்கத்துக்குச் செல்

மூன்றாம் அமென்கோதேப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அமென்கோதேப் III
எகிப்தின் பாரோ
ஆட்சிக்காலம்கிமு 1391–1353 அல்லது
கிமு 1388–1351, எகிப்தின் பதினெட்டாம் வம்சம்
முன்னவர்நான்காம் தூத்மோஸ்
பின்னவர்அக்கெனதென்
துணைவி(யர்)அரசி தியே[3]
கிலுக்கேபா
ததுகேபா
சீதாமுன்
பிள்ளைகள்அக்கெனதென்
தந்தைநான்காம் தூத்மோஸ்
தாய்முதேம்வியா
இறப்புகிமு 1353 அல்லது கிமு 1351
அடக்கம்மன்னர்களின் சமவெளி
நினைவுச் சின்னங்கள்மல்கதா, மூன்றாம் அமென்கோதேப்பின் பெருஞ்சிலைகள் மற்றும் சிற்பங்கள்

அமென்கோதேப் III (Amenhotep III) எகிப்தின் பதினெட்டாவது வம்சத்தவர்கள் ஆண்ட புது எகிப்து இராச்சியத்தின் ஒன்பதாவது பார்வோன் ஆவார். வரலாற்று ஆய்வாளர்கள் மூன்றாம் அமேன்கோதேப், புது எகிப்து இராச்சியத்தை கிமு 1386 முதல் 1349 முடிய ஆண்டதாகவும், வேறு சிலர் கிமு 1388 முதல் கிமு 1351/1350 முடிய ஆண்டதாக வேறுபட்டு கூறுகின்றனர். மூன்றாம் அமென்கோதேப், பார்வோன் நான்காம் தூத்மேசின் இளவயது மனைவி முதேம்வியாவின் மகன் ஆவார். [4] இவரது ஆட்சிக் காலத்தில் எகிப்து செல்வத்திலும், கலைகளிலும், வலிமையிலும் உச்சத்தில் இருந்தது. இவரது ஆட்சியில் எகிப்தில் சேத் திருவிழா கொண்டாடப்பட்டது. பார்வோன் மூன்றாம் அமென்கோதேப் தனது 38 அல்லது 39 வது ஆட்சிக் காலத்தில் இறந்தார். இவரது பட்டத்து அரசி தியே மற்றும் மகன் அக்கெனதென் ஆவார்.[5][6][7][8]இவர் அதென் நகரத்தை நிறுவினார்.

வாழ்க்கை

[தொகு]
படவெழுத்துகளில் மூன்றாம் அமென்கோதேப்பின் பெயர் பொறித்த கல்

மூன்றாம் அமென்கோதேப் தன் ஆட்சிக் காலத்திலே, தனது உருவச்சிலைகளை எகிப்து முழுவதும் பல்வேறு காலகட்டங்களில் நிறுவினார். அதில் 250 உருவச் சிலைகள் அகழாய்வில் கண்டெடுக்கப��பட்டுள்ளது. சிரியா முதல் நூபியா வரை, பார்வோன் மூன்றாம் அமென்கொதேப்பின் 200 குறிப்புகள் கொண்ட அழகிய சிறு நினைவுப் பொருட்கள் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. [9] அதில் ஐந்து குறிப்புகளில் தாம் மெசொப்பொத்தேமியாவின் பாபிலோன் நாட்டின் இளவரசியை மணந்து கொண்டதும், மேலும் இளவரசியுடன் 317 தோழிகள் உள்ளிட்ட பணிப்பெண்கள் எகிப்து வந்த செய்திகள் குறிக்கப்பட்டுள்ளது.[10]

மூன்றாம் அமென்கோதேப்பின் பட்டத்து அரசி தியேவின் சிற்பம்

பிற பதினொன்று குறிப்புகளில் தனது பட்டத்து அரசி தியேவிற்கு செயற்கையாக உருவாக்கிய ஏரியைக் குறித்தும் குறிப்பிட்டுள்ளார்.

மூன்றாம் அமெந்தோகோப்பின் திருமணக் குறிப்புகள் கொண்ட சிறு சின்னம்

மூன்றாம் அமென்கோதேப் தனது 6 – 12 வயதில் பார்வோனாக முடிசூட்டப்பட்டார். இரண்டு ஆண்டுகள் கழித்து தியேவை மணந்தார். அமெந்தோகோப் மறைந்த பனிரெண்டு ஆண்டுகள் கழித்து அரசி தியே இறந்தார். இவரது நீண்ட ஆட்சிக் காலத்தில் எகிப்து இராச்சியத்தை அனைத்துத் துறைகளிலும் வளமாக்கினார். மேலும் இவர் அசிரியா, பாபிலோன், மித்தானி இராச்சியம், இட்டைட்டு பேரரசுகளுடன் நெருங்கிய அரச உறவுகளைக் கொண்டார் என்பதற்கு ஆப்பெழுத்துகளில் எழுதப்பட்ட அமர்னா கடிதங்கள் எடுத்துக்காட்டாக உள்ளது. இந்த கடிதங்கள் பார்வோன் மூன்றாம் அமெந்தோகோப்பிடமிருந்து, மெசொப்பொத்தேமியாவின் ஆட்சியாளர்கள் தங்கம் மற்றும் பரிசுப் பொருட்களை வேண்டி எழுதப்பட்டவை ஆகும். இக்கடிதங்களில் ஒன்று, பாபிலோன் மன்னர் முதலாம் கதஷ்மன் - என்லில், மூன்றாம் அமெந்தகோப்பின் மகளில் ஒருத்தியை மணக்க விரும்பி எழுதியவை ஆகும். இவர் அஸ்வான் மற்றும் நூபியாவின் சாய் தீவில் தனது இராணுவ நடவடிக்கைகள் குறித்து மூன்று பாறைகளில் சிற்பமாக தீட்டியுள்ளார்.

மூன்றாம் அமெந்தோகோப்பின் தலைச்சிற்பம்

மூன்றாம் அமெந்தேகோப் சேத் திருவிழாவை தனது 30, 34 மற்றும் 37-வது அகவையில், மேற்கு தீபை நகரத்தில் உள்ள தனது கோடைக்கால அரண்மனையில் கொண்டாடியுள்ளார். [11]

இவரின் தெய்வீகப் பிறப்பு குறித்த தொன்மங்கள் அக்சர் கோயிலில் குறிக்கப்பட்டுள்ளது. [12][13]

மூன்றாம் அமென்கோதேப் மற்றும் சோபெக் கடவுள் சிற்பம், அல்-உக்சுர் அருங்காட்சியகம்

பிற்காலங்களில்

[தொகு]

நூபியாவில் உள்ள சோலெப் கோயிலின் சுவர்களில் இவரது பட்டத்து அரசி தியேவின் ஓவியத்துடன் இவரின் தளர்ந்த உருவம் கொண்ட ஓவியமும் வரையப்பட்டுள்ளது.[14] இந்த ஓவியக் காட்சி மூன்றாம் அமெந்தோகோப்பின் முதுமையை காட்டுவதாக தொல்லியல் அறிஞர்கள் கருதுகின்றனர். அமெந்தோகோப்பின் நோய் தீர்க்க, அவரது மாமனாரும், மித்தானி இராச்சிய அரசருமான துஷ்ரத்தர் என்பவர் நினிவே நகரத்தின் இஷ்தர் எனும் சுமேரியப் பெண் தெய்வத்தின் உருவச்சிலையை எகிப்தின் தீபை நகரத்திற்கு அனுப்பி வைத்தார். [15] இவரது மம்மியை தடய அறிவியல் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது, இப்பார்வோன் இறக்கும் போது பல் மற்றும் ஈறு நோய்களுடன் இறந்தார் எனத்தெரிகிறது.

மூன்றாம் அமேன்கொதேப்பின் அழகிய வேலைப்பாடுடன் கூடிய ஓவியம், தீபன் அரண்மனை

இறப்பு

[தொகு]

மூன்றாம் அமெந்தோகோப் தனது 38 ஆண்டு ஆட்சிக் காலத்தை ஒரு மதுக்குடுவை மீது குறித்து வைத்திருந்தார். அமெந்தகோப் இறக்கையில் எகிப்தை உலக அளவில் வலிமை மிக்க நாடாக வைத்திருந்தார். [16]

மூன்றாம் அமெந்தோகோப் இறந்த பின்னர் அவரது உடலை மன்னர்களின் சமவெளியின் மேற்கில் ஒரு கல்லறையில் மம்மியாக அடக்கம் செய்யப்பட்டது. எகிப்தின் மூன்றாம் இடைநிலைக் காலத்தில் மூன்றாம் அமொந்தகோப்பின் கல்லறையிலிருந்த மம்மியை வெளியே எடுத்து எகிப்தின் பதினெட்டாம் வம்சம் மற்றும் பத்தொன்பதாம் வம்ச பார்வோன்களின் மம்மிகளின் கல்லறையில் தனியிடத்தில் வைத்து அடக்கம் செய்ததை, கிபி 1898-இல் விக்டர் லோரெட் எனும் தொல்லியல் அறிஞர் கண்டுபிடித்தார். ஆஸ்திரேலிய உடற்க்கூராய்வு செய்யும் அறிஞர் கிராப்டன் எல்லியட் ஸ்மித் மூன்றாம் அமெந்தகோப்பின் மம்மியை ஆய்வு செய்து, அமந்தகோப் இறக்கும் போது 40 -50 வயது இருக்கும் எனக்கணித்துள்ளார்.

மூன்றாம் அமெந்தகோப்பின் மகன் அக்கெனதென் எகிப்தின் அரியணை ஏறினார். எகிப்தின் தலைமைக் கடவுள் அமூனின் செல்வாக்கை ஒடுக்க அக்கெனதென் எகிப்தின் தலைமைக் கடவுளாக அதினை] அறிமுகப்படுத்தினார். [17]

நினைவுச் சின்னங்கள்

[தொகு]

மூன்றாம் அமென்கொதேப் லக்சர், நூபியா மற்றும் கர்னாக் போன்ற இடங்களின் பெண் தெய்வமான மாலாத் கடவுளுக்கு பெரும் அளவிலான கோயில்களையும், அரண்மனைக் கட்டிடங்களை எழுப்பினார்.[18]

மூன்றாம் அமென்கோதேப்பின் பெருஞ்சிலைகள்

[தொகு]

மன்னர் மூன்றாம் அமென்கோதேப்பின் நினைவாக எழுப்பட்ட கல்லறைக் கோயிலின் நுழைவாயிலின் முன்பாக மூன்றாம் அமென்கோதேப்பின் பெருஞ்சிலைகள் நிறுவப்பட்டது. இது அல்-உக்சுர் நகரத்தின் மேற்கு பக்கத்தில் உள்ளது.[19][20]

இப்பெருஞ்சிலைகள் வண்ண நிற படிக்கற்களால் தற்கால கெய்ரோ நகரத்திற்கு அருகில் லக்சரில் உள்ளது. இச்சிலையின் அடிப்பாகம் 4 மீட்டர் உயரமும், ஒவ்வொரு சிலைளும் 18 மீட்டர் உயரமும், 720 டன் எடையும் கொண்டது.[21]தற்போது இரண்டு சிலைகளும் மிகவும் சேதமடைந்துள்ளன.

பார்வோன்களின் அணிவகுப்பு

[தொகு]

3 ஏப்ரல் 2021 அன்று எகிப்திய அருங்காட்சியகத்திலிருந்த 18 பார்வோன்கள் மற்றும் 4 அரசிகளின் மம்மிகளை எகிப்திய பண்பாட்டின் தேசிய அருங்காட்சியகத்தில் வைப்பதற்கு அழகிய வண்டிகளில் ஏற்றி, அணிவகுப்பாக எடுத்துச் செல்லும் போது பார்வோன் மூன்றாம் அமென்கோதேப் மம்மியும் எடுத்துச் செல்லப்பட்டது.[22][22]

இதனையும் காண்க

[தொகு]

அடிக்குறிப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Amenhotep III
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  1. Clayton 1994, ப. 112.
  2. [1] Amenhotep III
  3. The long reign of Amenhotep III and his great royal wife Tiye
  4. O'Connor & Cline 1998, ப. 3.
  5. Amenhotep III (c.1391 – c.1354 BC)
  6. Amenhotep III, Egypt`s Radiant Paraoh
  7. Amenhotep III
  8. Amenhotep III, King of Egypt
  9. O'Connor & Cline 1998, ப. 11–12.
  10. O'Connor & Cline 1998, ப. 13.
  11. O'Connor & Cline 1998, ப. 16.
  12. O'Connor & Cline 2001.
  13. Tyldesley 2006.
  14. Grimal 1992, ப. 225.
  15. Hayes 1973, ப. 346.
  16. Kozloff & Bryan 1992, p. 39, fig. II.4.
  17. Fletcher 2000, ப. 162.
  18. The Obelisk Court of Amenhotep III
  19. "Luxor, Egypt". BBC News இம் மூலத்தில் இருந்து 2013-04-19 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130419153726/http://news.bbc.co.uk/dna/place-lancashire/plain/A2082845. 
  20. Wilfong, T.; S. Sidebotham; J. Keenan; DARMC; R. Talbert; S. Gillies; T. Elliott; J. Becker. "Places: 786066 (Memnon Colossi)". Pleiades. பார்க்கப்பட்ட நாள் March 22, 2013.
  21. R. F. Heizer; F. Stross; T. R. Hester; A. Albee; I. Perlman; F. Asaro; H. Bowman (1973-12-21). "The Colossi of Memnon Revisited". Science (Science magazine) 182 (4118): 1219–1225. doi:10.1126/science.182.4118.1219. பப்மெட்:17811309. 
  22. 22.0 22.1 Parisse, Emmanuel (5 April 2021). "22 Ancient Pharaohs Have Been Carried Across Cairo in an Epic 'Golden Parade'". ScienceAlert. https://www.sciencealert.com/22-ancient-pharaohs-have-been-carried-across-cairo-in-an-epic-golden-parade. 

அதார நூற்பட்டியல்

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=மூன்றாம்_அமென்கோதேப்&oldid=4060845" இலிருந்து மீள்விக்கப்பட்டது